இராமதாஸ்-திருமா இணைவினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்தது என்ன?

சாதிய‌ வ‌ர்ணாசிர‌ம‌ அடுக்கில் ம‌க்க‌ளை ஒருவர் மேல் ஒருவராக‌ க‌ட்ட‌மைத்து ஆக உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ஜ‌ன‌நாய‌க‌த்தை ம‌றுக்கக் கூடிய‌து 'பார்ப்ப‌னீயம்' என்னும் அருவெறுப்பான ஜனநாயக விரோத கொடுங்கோண்மை த‌த்துவ‌ம்.

இப்ப‌டிப்ப‌ட்ட ஜனநாயக விரோத‌ பார்ப்ப‌னீய‌ இந்துத்துவ‌ க‌ருத்துக்க‌ள் த‌மிழ்ம‌ணியின் த‌ள‌த்தில் விர‌விக் கிட‌ப்ப‌தைதான் சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பாக‌ எடுத்துக்காட்டி ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ற்றி வாய்கிழிய‌ பேசும் தமிழ்மணியின் இல‌ட்ச‌ண‌த்தை நாம் திரைகிழித்துக்காட்டினோம், அதை ப‌ற்றி இதுவரை எதுவும் பேசாமல‌ க‌முக்க‌மாக‌ இருந்து வரும் த‌மிழ்மணி த‌ற்பொழுது ஒரு ப‌திவை போட்டிருக்கிறார். அதில், தலித் மக்களும் வன்னியர் சாதியினரும் மோதிக் கொள்ள வேண்டும் என்று கம்யூனிஸ்ட்கள் விரும்புவதாகவும் அதற்கு எதிராக தான் "த‌லித் வ‌ன்னிய‌ர்" ஒற்றுமையை வ‌லியுறுத்துவதாகவும் ஒரு ச‌மாதான‌ தூதுவ‌ன் போல‌ புது 'கெட்டெப்'பை போட்டிருக்கிறார் தமிழ்மணி.,

"சிதம்பரம், ஸ்டாலின், மருத்துவர் அய்யா, தொல் திருமாவளவன், சரத்குமார், விஜயகாந்த், ஜெயலலிதா ஆகியோரும் சிறந்த மக்கள் தலைவர்களே". என்ப‌தான‌ காமெடியும் வ‌க்கிர‌மும் க‌ல‌ந்த‌ ந‌ம் காதில் பூ சுற்றும் க‌ருத்துக்க‌ள‌ட‌ங்கிய‌ அப்ப‌திவு, எப்போதும் போல த‌மிழ்ம‌ணியின் ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌ முக‌த்தை தெளிவாக‌வே வெளிக்காட்டுகிற‌து.

//கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் வன்னியர்களும் ஒரே வளங்களுக்கு போராடுபவர்கள் என்பதாலும், வன்னியர்களது பொருளாதார நிலைமைக்கும் தாழ்த்தப்பட்டவர்களது பொருளாதார நிலைக்கும் அதிக வேறுபாடு இல்லையென்றாலும், வன்னியர்கள் தாழ்த்தப்பட்டவர்களைவிட சற்று பரவாயில்லை என்ற நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதும் உண்மை.//

இப்ப‌டி எழுதியிருக்கிறார் த‌மிழ்ம‌ணி, அதாவ‌து ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளும் வ‌ன்னிய‌ர்க‌ளும் ஒரே வ‌ள‌ங்க‌ளுக்காக‌ 'போராடுகிறார்க‌ளாம்', இருவருமே 'போராடுகிறார்கள்', அதுவும் எத‌ற்காக? ஊரில் இருக்கும் ஒரே வ‌ள‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்காக‌, த‌லித் சாதியை சேர்ந்த‌ இளைஞனான‌ முருகேச‌ன், க‌ண்ண‌கி என்ற‌ வ‌ன்னிய‌ர் சாதி பெண்ணை காத‌லித்த‌ குற்ற‌த்திற்காக‌ இருவ‌ரையும் எரித்து கொன்ற‌தோடு முருகேச‌னின் வீடு வாச‌லை அடித்து நொறுக்கி சூறையாடினார்க‌ளே, அதுதான் ஒரே வளத்தை பகிர்ந்து கொள்வதற்கான 'போராட்டமா'?, இதோ இப்போது சால‌ர‌ப்ப‌ட்டியில், த‌லித்துக‌ளுக்கு த‌னிக்குவ‌ளையில் தேநீர் த‌ருவ‌தை எதிர்த்து போராடிய‌த‌ற்காக ஆதிக்க‌ தேவர் சாதி வெறிய‌ர்க‌ளால் தாக்க‌ப்ப‌ட்டு உயிருக்கும் உடைமைக்கும் உத்திர‌வாத‌ம் இல்லாம‌ல் ஊரை விட்டு வெளியேறியிருக்கிறார்க‌ளே "அது ஒரே வ‌ளத்துக்கான 'போராட்ட‌மா'",
த‌ங்க‌ளுக்கு த‌னிக்குவ‌ளை வைக்க‌க்கூடாது என்று த‌லித் ம‌க்க‌ள் போராடுவதும், அவ‌னுக்கு த‌னிக்குவ‌ளையில்தான் தேநீர் த‌ர‌வேண்டும் என்று ஆதிக்க‌ சாதியினரும் சண்டித்தனம் செய்வதும் "ஓரே வ‌ள‌த்தை ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்கான 'போராட்டம்'" என்கிறார் இந்த‌ பார்ப்ப‌ன‌ம‌ணி, "ஈன‌ ஜாதி ப‌ற‌ப்ப‌ய‌லுக்கு ப‌ஞ்சாய‌த்து த‌லைவ‌ர் ப‌த‌வியா" என்று ஆறு பேரின் க‌ழுத்தை அறுத்து கூறு போட்ட‌ன‌ரே ஆதிக்க‌ சாதி வெறிய‌ர்க‌ள் அது "வ‌ள‌த்தை ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்கான‌ 'போராட்டம்' என்கிறார் இந்த தமிழ்மணி ஆதிக்க சாதியினரான வ‌ன்னிய‌ர்க‌ள் ஒடுக்குவதும் 'போராட்ட‌மாம்', அதற்கு எதிராக‌ தாழ்த்த‌ப‌ட்ட‌ ம‌க்க‌ள் ந‌ட‌த்துவ‌தும் 'போராட்ட‌மாம்' கூறுகிறார் இந்த‌ பார்ப்ப‌ன‌ம‌ணி.
இந்த மோசடித்தனமான கருத்தை வைத்துக்கொண்டுதான் ஜனநாயக பஜனை பாடக் கிளம்பியிருக்கிறது தமிழ்மணி கும்பல். ஒருவேளை இப்படி உரிமைக்காக போராடுவதையும், உரிமையை மறுத்து ஒடுக்குவதையும் ஒன்றாக 'ஒரே' செயல் போன்று பார்ப்பதுதான் ஜனநாயகம் என்று சொல்லவருகிறாரா தமிழ்மணி.

//பல கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குபவர்களாக வன்னியர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
ஆனால், திருமாவளவனும் பாமகவும் கொண்ட ஒரு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி, அப்படிப்பட்ட போட்டிகளை குறைத்து அதன்மூலம் வரும் வன்முறையை குறைத்து ஒரு கூட்டணியை கிராம அளவில் ஏற்படுத்த முயன்று வருகிறது
.//

அதே ச‌ம‌ய‌த்தில் வ‌ன்னிய‌ர்க‌ள் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை ஒடுக்கிறார்க‌ள் என்ப‌தும் உண்மையாம், வ‌ரலாற்று முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ "திருமா இராம‌தாசின்" கூட்ட‌னிக்கு பிறகு வ‌ன்முறையை குறைக்க‌ முய‌ல்கிறார்க‌ளாம்.

இந்த "வ‌ர‌லாற்று முக்கியத்துவமான‌ கூட்ட‌னி" வ‌ன்முறையை எப்ப‌டி குறைக்கிறார்க‌ள் என்ப‌தற்கு மிக‌ச் சிற‌ந்த‌ உதார‌ண‌ம்தான் "க‌ண்ணகி-முருகேச‌ன் காத‌ல் ச‌ம்ப‌வம்", க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம் புதுக்கூரைப்பேட்டை கிராம‌த்தை சேர்ந்த‌வ‌ர் முருகேச‌ன், பொறியிய‌ல் ப‌ட்ட‌ ப‌டிப்பு முடித்த‌ ஒடுக்க‌ப்ப‌ட்ட சாதியைச் சேர்ந்த‌ இளைஞ‌ர், அதே ஊரின் ஊராட்சி ம‌ன்ற‌ த‌லைவ‌ரின் ம‌க‌ள் க‌ண்ணகி வன்னிய சாதியை சேர்ந்தவர், இவ‌ர்க‌ள் இருவ‌ரும் சாதி மீறி காத‌லித்த‌ கார‌ண‌த்தால் க‌ண்ண‌கியின் த‌ந்தையான‌ துரைசாமியும், அவ‌ர‌து அண்ண‌ன் மருதுபாண்டியனும் ம‌ற்றும் சில‌ரும் முருகேச‌னையும் அவ‌ர‌து த‌ந்தையையும், சித்த‌ப்பாவையும் ஊருக்கு வெளியே இருக்கும் முந்திரிக்காட்டுக்கு க‌ட‌த்திச் சென்ற‌ன‌ர் அங்கே கைக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌ முருகேச‌னின் த‌ந்தையின் க‌ண் முன்னாலேயே முருகேசன் ப‌ல‌வ‌ந்த‌மாக‌ விஷ‌ம் கொடுத்து ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார், அத‌னை பார்த்து க‌த‌றிய‌ழுத‌ க‌ண்ணகிக்கும் சாதி பெருமையை குலைத்த‌ குற்றத்திற்காக க‌ட்டாய‌மாக‌ விஷ‌மூற்ற‌ முய‌ன்ற‌ன‌ர் சாதிவெறிய‌ர்க‌ள் அவ‌ர் ம‌றுக்க‌வே அவ‌ர் காதிலும் மூக்கிலும் விஷ‌த்தை‌ ஊற்றி சாக‌டித்துவிட்டு, இறுதியாக‌ இருவ‌ரையும் எரித்து சாம்ப‌லாக்கிவிட்ட‌ன‌ர்,.

இது ந‌ட‌ந்த‌து, 8.7.2003ல், சாதி வெறிபிடித்த‌ ம‌னித‌த‌ன்மைய‌ற்ற‌ இந்த‌ ப‌டுகொலையை கேள்விப்ப‌ட்ட‌ திருமாவள‌வ‌ன் முருகேச‌ன் த‌ந்தை சாமிக்கண்ணுவை தொலைபேசியில் தொட‌ர்பு கொண்டு ஆறுத‌ல் தெரிவித்த‌தோடு, அவ‌ரை சென்னைக்கு அழைத்து வ‌ந்து ப‌த்திரிக்கையாள‌ர் ச‌ந்திப்பை ந‌ட‌த்தி இந்த‌ கொடும் நிக‌ழ்வை வெளி உல‌குக்கு தெரிய‌ச் செய்தார்.

இருப்பினும் கூட‌ இந்த‌ 'ஜ‌ன‌நாய‌க‌' நாட்டின் காவ‌ல்துறை வ‌ன்னிய‌ர் சாதி வெறிய‌ர்க‌ளுக்கு ஆதரவாகவே‌ செய‌ல்ப‌ட்டுவ‌ந்த‌து, முருகேச‌னை த‌லித்துக‌ளே கொலை செய்துவிட்ட‌தாக‌ வ‌ழ‌க்கு ப‌திந்த‌ காவ‌ல்துறை, பிள்ளையை பறிகொடுத்துவிட்டு பரிதவித்துக் கொண்டிருந்த‌ முருகேச‌னின் த‌ந்தைக்கு கொலைகார‌ ப‌ட்ட‌த்தையும் கொடுத்த‌து. இத‌னை அறிந்த‌ சென்னை உய‌ர்நீதி ம‌ன்ற‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் இரத்தின‌ம்(மேல‌வ‌ள‌வு வ‌ழ‌க்கை ந‌ட‌த்திய‌வ‌ர்) இந்த‌ வ‌ழ‌க்கை சி.பி.ஐ விசாரிக்க‌ வேண்டும் என்று ம‌னுதாக்க‌ல் செய்தார்.

இந்த‌ நிக‌ழ்ச்சிக‌ளினிடையேதான் "த‌மிழ் பாதுகாப்பு இய‌க்க‌ம்" என்ற‌ பெய‌ரில் திருமாவும் இராம‌தாசும் இணைந்த 'வ‌ரலாற்று சிற‌ப்புமிக்க‌ கூட்ட‌னி' 2005ல் அமைந்த‌து. இத‌ன் பிற‌கு திருமாவின் போக்கில் மாற்ற‌மேற்ப‌ட்ட‌து.

முருகேச‌னின் சித்தாப்பாவிற்கு தொலைபேசி செய்த‌ திருமா "கேஸ் அது இதுன்னு விசயத்தைப் பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்" என்று ச‌மாதான‌ம் பேசினார். மேலும் "அன்புமணி மூலமா பிரசர் வருது. நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கணும்" என்று கூறி 'வரலாற்று சிறப்புமிக்க கூட்டனியின்' இரகசியத்தையும் விளங்கவைத்தார் திருமாவளவன்.

ஆனால் இராம‌தாசு எப்ப‌டி ந‌ட‌ந்து கொண்டார்? இதோ கூறுகிற‌து த‌லித் முர‌சு..

//பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் தலைவர் மருத்துவர் ராமதாசும் உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக மாபெரும் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். மறுபுறம் சாதி மறுத்து காதலித்த தலித் இளைஞரை கொலை செய்த வன்னியர்களுக்கு அடைக்கலமும் அரவணைப்பும் தருகின்றனர்.//

எவ்வ‌ள‌வு 'வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ கூட்ட‌னி' இந்த‌ வ‌ரலாற்று சிற‌ப்புமிக்க‌ கூட்ட‌னிக்குத்தான் வ‌க்கால‌த்து வாங்குகிறார் த‌மிழ்மணி.,

அதுவும் எதற்காக‌? சாதி ஒழிய‌ வேண்டும் என்கிற‌ அக்க‌றையினாலா? நிச்சயமாக இல்லை ஒரு பார்ப்பன வெறியன் சாதி ஒழிய வேண்டும் என்று நினைப்பானா என்ன? நமது அம்பலப்படுத்தல்களுக்கு பிறகு சரிந்து போன தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தி, முற்போக்காளர்களை மோதவிடும் தனது திட்டத்தில் தொடர்ந்து ஈடுபடத்தான் இப்படியொரு பதிவே தவிர வேறு எந்த சிறப்புக்காரணமும் இல்லை."அய்யங்கார் என்று சொல்லிக்கொள்வ‌த‌ற்கு என‌க்கு உரிமையில்லையா?" என்று இணைய‌த்தில் அங்க‌லாய்க்கிறார்க‌ளே ந‌ங்க‌ந‌ல்லூர் நாம‌க‌ட்டிக‌ள், அது போன்ற பார்ப்பன கொழுப்பை வடிய வடிய காய்ச்சுவதற்கு கட்சி வேறுபாடுகளை கடந்து கைகோர்த்து நிற்கிறார்களே பார்ப்பன எதிர்ப்பாளர்கள் அவர்களை உடைத்து மோத‌விட்டு த‌ன‌து ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்வதற்காகத்தான் இப்படி அதிர்வேட்டுக்களை கொளுத்திக் கொண்டிருக்கிறார் பார்ப்பனமணி. அத‌ற்கென‌தான் பார்ப்ப‌ன‌ வெறி பிடித்த பாசிஸ்ட் ஜெய‌லலிதாவை கூட‌ ம‌க்க‌ள் த‌லைவ‌ர் என்று சொல்லி ஒரு க‌த‌ம்ப‌க்கூட்ட‌னியை க‌ட்டிய‌மைக்க‌ முய‌ல்கிறார் த‌மிழ்ம‌ணி.

மேலும் எழுதுகிறார் த‌மிழ்ம‌ணி..

//ஏன் ஒருவரை ஒடுக்குபவனாகவும் மற்றவரை ஒடுக்கப்படுகின்றனவராகவும் சித்தரிக்கின்றனர்?//

மேலே வ‌ன்னிய‌ர்க‌ள் ஒடுக்குவ‌து உண்மைதான் என்று எழுதிய‌ த‌மிழ்ம‌ணி நாம் அச‌ந்துவிடும் நேர‌மாக‌ பார்த்து "ஒடுக்குப‌வ‌னாக‌வும், ஒடுக்கப்ப‌டுகிற‌வ‌னாக‌வும் சித்த‌ரிக்கின்ற‌னர்" என்று எழுதுகிறார், அதாவது தலித் ம‌க்க‌ள் உண்மையில் ஒடுக்கப்படவில்லை கம்யூனிஸ்ட்கள்தான் அவர்கள் ஒடுக்கப்படுவதாக சித்த‌ரிக்கிறார்கள் என்று கூறுகிறார் பார்ப்பனமணி. எவ்வ‌ள‌வு வ‌க்கிர‌ம் பிடித்த‌ க‌ருத்து இது என்று நான் உங்க‌ளுக்கு சொல்லித் தெரிய‌ வேண்டிய‌தில்லை. இந்த பார்ப்பனமணிக்கு இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால் 'பார்ப்பன ஆதிக்கம்' இருப்பதாக சித்தரிக்கின்றனர் என்று கூட சொல்வார். இதனை அவருக்கு நாம் கேள்வியாக கூட எழுப்பலாம், தமிழ்மணி கூறட்டுமே இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் இருக்கிறதா இல்லையா, அதனை எப்படி எதிர்கொள்வது என்று, அவரை புரிந்து கொள்வதற்கு நமக்கு அது ஏதுவாக இருக்கும்.

இப்ப‌டி நீண்டு கொண்டு போகும் க‌ட்டுரையில் இந்த‌ நாட்டில் அமைதி த‌வ‌ழுவ‌தாக‌வும் ஜ‌ன‌நாய‌க‌ம் பூத்துக் குலுங்குவ‌தாக‌வும், அத‌னை குலைக்க‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை ஆயுத‌ம் ஏந்த‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் தூண்டுவ‌தாக‌வும் "அமைதி குலைந்து விடுமென்று" பார்ப்ப‌ன‌ம‌ணி துடித்துப்போகிறார்.,

உண்மைதான் இன்று சால‌ர‌ப்ப‌ட்டி கிராம‌த்தில் கூட‌ அமைதிதான் நில‌விக்கொண்டிருக்கிற‌து, தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்களை அடித்துவிர‌ட்டிவிட்டு ஆதிக்க‌ சாதி வெறிய‌ர்க‌ள் தான் ம‌ட்டும் த‌னியே அனுப‌விக்கும் அமைதி... இந்த‌ அமைதியைத்தான் விரும்புகிறார் போலும் த‌மிழ்ம‌ணி, எம‌து ம‌க்க‌ளை ஊருக்கு வெளியில் விர‌ட்டி சேரியில் அடைத்த‌ பார்ப்ப‌ன‌ இந்தும‌த‌வெறிய‌ன் வேறு எதை விரும்புவான்.

இந்த பதிவின் பின்னிணைப்பாக, அமைதி, அஹிம்சை தவழும் இந்த ஜனநாயக நாட்டின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் மேலவளவு கொலை பற்றிய, தலித் முரசுவின் நீண்ட செய்தி கட்டுரையை கீழே இணைத்திருக்கிறேன்.

அதன் முன்னுரை மட்டும் கீழே இருக்கிறது, கட்டுரையை இணைப்பில் சென்று படிக்கவும்!!

ஜாதி இந்துக்கள் எறும்புக்குக்கூட தீங்கிழைக்காதவர்கள்; தாங்கள் போடும் கோலங்கள்கூட எறும்புகளுக்குத் தீனியாக வேண்டும் என்று நினைப்பவர்கள்; தாங்கள் சாப்பிடுவதற்கு முன்னால் காகத்திற்கு சோறு ஊட்டிவிட்டே சாப்பிடுவார்கள்'' "இந்து இந்தியா'வின் புகழ் இவ்வாறு வெளியுலகில் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், "காந்தி தேச'த்தில் தீண்டத்தகாத மக்களின் உண்மை நிலை என்ன என்பதற்கு ஒரு சான்றுதான் மேலவளவு படுகொலை.

ஆம், இனவெறி இந்தியாவின் "அகிம்சை' முகம் இது!படுகொலை செய்யப்பட்ட ஆறு பேரையும் எந்தளவுக்கு சாதி இந்துக்கள் மூர்க்கத்தனமாக வெட்டிக் கொன்றனர் என்பதை, இச்சமூகத்திற்கு உணர்த்துவதற்காகத்தான் நீதிமன்றத் தீர்ப்புரைகளை (முருகேசன் வெட்டப்பட்டதை மட்டும்) அப்படியே இங்கு வெளியிடுகிறோம்.

'இந்து' நாட்டிற்கு ஆப்படித்த கம்யூனிஸ்ட்களை வருக வருக என வரவேற்கிறேன்.

"உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா" என்ற கதையாகிவிட்டது இந்துமதவெறியர்களின் நிலைமை, அவர்களது அகண்ட பாரத கனவினை அடிக்கடி கலைத்துக்கொண்டிருக்கும் காஷ்மீரையும், வடகிழக்கு மாகாணங்களையும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் சதி, தூண்டுதல் என்று புளுகி வந்த இந்துமதவெறியர்கள், அமெரிகாவின் காலை பிடித்தாவது அகண்ட பாரதத்தை அமைத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள், இந்த நிலையில்தான் உலகின் ஒரே இந்து நாடு என்று சொல்லப்பட்ட நேபாளத்திற்கு ஆப்பு அடித்திருக்கிறார்கள் அங்கிருக்கும் கம்யூனிஸ்ட்கள்.

காஞ்சிமடத்து காமக்கேடி ஜெயேந்திரன் தனது கையில் வைத்திருக்கும் தண்டத்தை போட்டுவிட்டு ஒரு தமிழ் நடிகையை தள்ளிக் கொண்டு போய் உல்லாசமாய் இருக்கவும், சங்கர்ராமன் என்ற பார்ப்பனரை போட்டுத்தள்ளிவிட்டு போய் பதுங்கிக் கொள்ளவும் தனது பாதுகாப்புக்கு உகந்ததாக‌ அவன் தேர்ந்தெடுத்த இடம் இந்து நாடான‌ நேபாளம், அந்த நாட்டு மன்னனின் வீட்டு விழாக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆரிய இந்துமத வெறியர்கள் சென்றுவருவது கூட வாடிக்கையான ஒரு நிகழ்வு. அந்த அளவுக்கு மோசடி பேர்வழிகளுக்கும், கிரிமினல்களுக்கும் சொர்க்கபுரியாய் அமைந்திருந்தது நேபாளம்.,

மூச்சுக்கு முந்நூறு தடவை "இந்து நாடு" என்று ஆரிய வெறியர்கள் இறுமாந்திருந்த‌ நேபாளத்தை மதசார்ப்பற்ற குடியரசாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராடிய மாவோயிஸ்ட்கள் அங்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள், இனி அந்த நாடு இந்து நாடாக நிலைத்திருக்க முடியாது என்ற நிலை அங்கு ஏற்பட்டிருக்கிறது முன்பே கூறியது போல “உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணா” என்ற கதையாகிவிட்டது, இந்து ராஷ்டிர கனவு கண்டு வந்த கும்பலின் நிலை.,

இனி இங்கு ஏதாவது சில்மிஷ வேலை செய்து விட்டு ஜெயேந்திரன் நேபாளத்திற்கு ஓடினால் எப்போதும அவர் அப்படி செய்யமுடியாதபடி இனி ஒட்ட ‘நறுக்கி’விடுவார்கள் அங்கிருக்கும் கம்யூனிஸ்ட்கள், பார்ப்பன பாம்புகளின் நிலை அங்கு பல்லை பிடுங்கிய கதைதான், அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்ன் மாணவர் அமைப்பான ABVP "இந்திய நேபாள எல்லை பிரச்சணை" "தேசத்திற்கு ஆபத்து" என்றெல்லாம் சரடுவிட துவங்கியிருக்கிறது. கம்யூனிஸ்ட்களின் இந்த வெற்றி இந்துமதவெறியர்களின் அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட வெற்றியினை ஈட்டியிருக்கும் நேபாள கம்யூனிஸ்ட்களை ஒழித்துக்கட்டுவதற்கு இந்(து)தியாவும், அமெரிக்காவும் பல்வேறு திரைமறைவு வேலைகளையும், சதி திட்டங்களையும் தீட்டிவருகிறார்களாம் இந்த நிலையில் மன்னராட்சி மற்றும் இந்து கொடுங்கோன்மை அரசுக்கு எதிராக போராடும் அம்மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பின் தலைமையில் இந்திய நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அதில் பங்கேற்று உரையாற்ற இருப்பதாகவும் இணையத்திலிருக்கும் தோழர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர்.

கூட்ட‌த்தின் அழைப்பிதழையும் கூட‌ இணைய‌த்தில் போட்டிருக்கின்ற‌ன‌ர், அத‌ன் மூல‌மாக‌ அந்த‌ மேடையில் தொல்.திருமாவ‌ள‌வ‌ன், சுப‌.வீர‌பாண்டிய‌ன், தியாகு போன்ற‌ த‌லைவ‌ர்கள் உரையாற்றுவதும் தெரிய‌வ‌ருகிற‌து. மன்னராட்சி இந்து கொடுங்கோண்மை ந‌ட‌ந்து வ‌ந்த‌ நேபாள‌த்தில் ஜ‌ன‌நாய‌க‌ ஆட்சி ம‌ல‌ர‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ இந்த த‌லைவ‌ர்க‌ள் க‌ரம் சேர்த்து உர‌த்து குர‌ல் எழுப்புவ‌து உண்மையிலேயே வ‌ர‌வேற்க‌ த‌க்க‌தாகும்!!

இவ‌ர்க‌ளுக்கு என‌து வாழ்த்துக்க‌ளை தெரிவித்துக்கொள்கிறேன்!!

இப்ப‌டியொரு நிக‌ழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌த்திற்கும் என‌து வாழ்த்துக்க‌ளை தெரிவித்துக்கொள்வ‌தோடு, இந்த‌ நிழ‌ச்சியில் ப‌ங்கேற்க‌ வ‌ருகை த‌ரும் இந்து ராஷ்டிர‌த்திற்கு ஆப்ப‌டித்த‌ நேப்பாள‌ க‌ம்யூனிச‌ தோழ‌ர்க‌ளையும் வ‌ருக‌ வ‌ருக‌ என‌ வ‌ர‌வேற்கிறேன்!!

எனக்கு மின்னஞ்சலில் அழைப்பிதழை அனுப்பி வைத்த தோழருக்கும் நன்றி!!

கூட்டத்தின் அழைப்பிதழ்.
நிகழ்ச்சி நிரல்.


குறிப்பு:
இனி தமிழ்மணி கும்பலுக்கு வேலை அதிகமாகிவிட்டது நேபாளத்தில் நிகழப்போகும் மனித உரிமை மீறல்கள் பற்றி கட்டுக்கட்டாக கதை எழுதிக்குவிக்க வேண்டும், இதுவரை எந்த வெள்ளைகாரனும் எழுதி வைக்காததாலும், விக்கிபீடியாவில் இது குறித்து எந்த செய்தியும் இல்லாததாலும் பாவம் தமிழ்மணி இதற்கு முழுக்க முழுக்க தமது கற்பனை வளத்தையே நம்பியிருக்க வேண்டியிருக்கும்.

இரண்டாவதாக‌ இதுவரை நான் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்காமல் கள்ள மெளனம் சாதித்துக்கொண்டு தனது வழக்கமான கம்யூனிச எதிர்ப்பு ஜல்லிகளை கொட்டிவரும் தமிழ்மணி கும்பல் இந்த பதிவின் மூலமாக எனக்கு கம்யூனிச லேபிள் ஒட்டி தங்களை மேலும் நியாயப்படுத்த நினைத்தால் அவர்களுக்கு தர்க்கபூர்வமாக ஒரு கேள்வி, பார்ப்பன தினமணி இந்த அழைப்பை வெளியிட்டிருக்கிறதே அது என்ன கம்யூனிச பத்திரிக்கையா? இல்லை அது வணிக நோக்கம் என்று தமிழ்மணி வாதாட கிளம்பினால் என்னுடைய வாதங்களை பிறகு வைக்கிறேன்.
இதனை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் தமிழ்மணி பதிவு என்கிற‌ பெயரில் மொக்கை போட்டு அந்த மொக்கைக்கு பதிலளிக்க நாம் ஒரு பதிவை போட்டு வாசகர்களை எரிச்சலடைய செய்யாமல் தவிர்ப்பதற்கே இதனை முன்பே இங்கு சொல்லிவைக்கிறேன்.

ஒரு பார்ப்ப‌ன‌ சொறிநாய்க்கு க‌லைஞ‌ர் மீது வ‌ந்த‌ திடீர் அபிமானம்!!

பெரியாரிய‌, திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளுக்கும், க‌ம்யூனிச‌ ப‌திவ‌ர்க‌ளுக்கும் இடையில் சிண்டு முடியும் நோக்கோடு இய‌ங்கி வ‌ந்த 'பார்ப்ப‌ன‌'ம‌ணி முழுமையாக‌ அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தும், அவ‌ரை குற்ற‌ம்சாட்டி நாம் எழுப்பிய‌ கேள்விக‌ளுக்கு இதுவரை அவர் விள‌க்கமோ, ப‌திலோ அளிக்காம‌ல் க‌முக்க‌மாக‌ இருந்து வ‌ருவ‌தும் நீங்க‌ள் அனைவ‌ரும் அறிந்த‌துதான்.

'இவ‌ருக்கு கேள்வி, அவ‌ருக்கு கேள்வி' என்று விக்கிபீடியாவை கையில் வைத்துக்கொண்டு உல‌க‌ அறிஞ‌ர் போல மொக்கை போட்டுக் கொண்டிருந்தவர்தான் இந்த தமிழ்மணியாகிய திருவாளர் மொக்கைமணி மற்றவர்களையெல்லாம் கேள்வி கேட்டு சவடால் அடித்தவர் தன்னை பற்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்கு மேலாக கள்ள‌ மெளனம் சாதித்துக்கொண்டிருக்கிறார்., அதற்கு பின்பு மூன்று பதிவுகள் போட்டதோடு, நம்மிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறிவிட்டார் அதாவது அது ஒரு இந்துத்துவ கும்பல் என்று நாம் கூறியதை மெளனமாக ஏற்றுக் கொண்டுவிட்டார்.

இருப்பினும் "பாடிய வாயும், ஆடிய காலும் சும்மா இருக்காது" என்று கூறுவார்களே அது போல சதி செய்தே பழகிப்போன 'பார்ப்பன'மணியின் பார்ப்பன மூளை இப்பொழுது மீண்டும் கலைஞருக்கு வக்காலத்து வாங்குவது போல் பதிவு போட்டிருக்கிறது, அத்தோடு சம்பூகனிடமிருந்து கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான‌ ஆத்திரமான பதிவை எதிர்பார்க்கிறேன் என்றும் ஒரு பின்னூட்டத்திலும் அது கூறியிருக்கிற‌து.

ஆக‌ இதுதான் அவ‌ர‌து நோக்கம், அதாவ‌து க‌லைஞ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ பேச‌ வேண்டுமென்ப‌த‌ற்காக அவர் இப்ப‌திவை போட‌வில்லை, க‌லைஞ‌ரை விம‌ர்சிக்கும் க‌ம்யூனிஸ்ட்க‌ளை சுட்டிக்காட்டி "போய் அவனை தாக்கு" என்று திராவிட பதிவர்களை தூண்டிவிடுவது, இந்த விசயத்தில் மோதிக்கொள்ளூம் இருவரையும் நிரந்தர எதிரிகளாக மாற்றுவது, முற்போக்கு முகாமை பலவீனப்படுத்துவது இதுதான் 'பார்ப்பன'மணியின் நோக்கம். இதனை நான் சொல்வதைகாட்டிலும் தமிழ்மணியின் கொள்கைசால் நண்பரான‌ 'கால்கரி சிவா' கூறியதை இங்கு எடுத்துக்காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்..

கால்கரி சிவா said...
எப்பிடியோ கருநாநிதியை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக
திருப்பிவிட்டீர்கள்?
ஐயா தாங்கள் சதுரங்கத்தில் புலியாக இருப்பீர்கள் என
நினைக்கிறேன் சரியா?
சரியான அரசியல்வாதி ஐயா தாங்கள்
.(பதிவு இங்கே)

"த‌லைவர் க‌லைஞர்" என்று எழுதும் த‌மிழ்ம‌ணியின் உள்ள‌க்கிட‌க்கையை இந்த‌ பின்னூட்ட‌ம் தெளிவுற‌ எடுத்துக்காட்டுகிற‌து. இத‌னை நான் முன்பே இந்த‌ ப‌திவில் எழுதியிருக்கிறேன்., இதுதான் தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் பார்ப்பன வெறிநாயின் திட்டம்.

நமது பதிவுகள் வருவதற்கு முன்பு நமது திராவிட தோழர்கள் கூட தமிழ்மணியை நம்பிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்மணி கலைஞரை ஆதரிப்பது போல் எழுதுவது அவரை கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக நிறுத்துவதற்குத்தான், என்று பார்ப்பன இந்துமதவெறி ஆதரவாளரான 'கால்கரி சிவாவுக்கு' தெரிந்திருப்பது எப்படி, என்பதுதான் என‌க்கு விய‌ப்பையும், ச‌ந்தேக‌த்தையும் கொடுக்கிற‌து., போத‌க்குறைக்கு இப்போது த‌மிழ்மணிக்கு பின்னூட்ட‌ம் பாலாவும் த‌ன‌து ஆத‌ர‌வை தெரிவித்திருக்கிறார், எப்ப‌டியோ 'இன‌ம் இன‌த்தோடு சேர்ந்தால் ச‌ரி'.

என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலே எழுதும் கிறிஸ்தவ முக்காடு போட்ட இந்துத்துவ கும்பல்..

பார்ப்ப‌ன‌ இந்துத்துவ‌ கும்ப‌ல்க‌ள் முற்போக்காள‌ர்க‌ள், சிறுபாண்மைய‌ர்க‌ள் மத்தியில் மோத‌லை ஏற்ப‌டுத்த‌ வேண்டும் என்ற திட்ட‌மிட்ட‌ அணுகுமுறையோடு த‌மிழ்ம‌ண‌த்தில் நுழைந்திருக்கிற‌து, அத‌ற்கேற்ப‌ ப‌ல்வேறு பெய‌ர்க‌ளில் த‌ள‌ம் ஆர‌ம்பித்திருக்கும் அக்கும்ப‌ல் தொட‌ர்ந்து மோதலை ஏற்ப‌டுத்துகிற வகையில் பதிவிட்டு வருவதோடு, சிறுபாண்மைய‌ர் பெய‌ரில் பெரியாரை வ‌சைபாடுவது போன்ற‌ வேலைகளையும் செய்து வ‌ருகிற‌து, இந்த‌ ச‌திதிட்ட‌ம் ப‌ற்றி இத‌ற்கு முன்பே அனானிக‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், த‌மிழ்ம‌ணி என்று பெய‌ரிட்டுக்கொண்டு த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிராக‌ எழுதி வ‌ந்த ஒரு கும்பலை நானும் என‌து க‌ட‌ந்த‌ ப‌திவுக‌ளில் அம்பலப்படுத்தியிருக்கிறேன், இந்த‌ நிலையில் ஜ‌ன‌நாய‌க‌விரோத‌, ம‌னித‌ விரோத 'பார்ப்ப‌ன‌'ம‌ணிக்கு ஜ‌ன‌நாய‌க‌த்தை ப‌ற்றி பேசும் அருகதை கிடையாது என்று இன்று காலையில் நாம் ப‌திவிட்ட‌ அடுத்த‌ ஒரு ம‌ணி நேர‌த்திற்குள் த‌மிழ்ம‌ண‌த்தில் பெரியாரை வ‌சைபாடி ஒரு ப‌திவு வெளியானது.,

முஸ்லீம் என்ற‌ பெய‌ரில் கிறிஸ்த‌வ‌ த‌ள‌ம் ந‌ட‌த்துவ‌தாக‌ காட்டிக்கொள்ளும் ஒரு பார்ப்ப‌ன‌ இந்தும‌த‌வெறி நாய் ஒன்று அதில் பெரியாரை ஒருமையில் எழுதியிருப்ப‌தோடு, தீண்டாமை ஒழிவ‌த‌ற்காக‌ ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை இஸ்லாமுக்கு மாற‌ச் சொன்ன‌ பெரியாரின் க‌ருத்துக்க‌ளை எடுத்துப் போட்டு அத‌னை முன்னுக்கு பின் முரணான‌து, பெண்ண‌டிமைத‌ன‌த்தை எதிர்த்த‌ பெரியார் இஸ்லாமுக்கு மாற‌ச் சொல்ல‌லாமா? என்ற‌வாறெல்லாம் கேள்வி எழுப்பியப‌டி பெரியாரின் மீதும், இஸ்லாத்தின் மீதும் த‌ன‌க்கிருக்கும் வெறுப்பை வெளிப்ப‌டுத்திக் கொண்டிருக்கிறது.,

1934ம் வ‌ருட‌த்தில் மதம் மாற‌ப்போவ‌தாக‌ அறிவித்து அம்பேத்க‌ர் பார்ப்ப‌ன‌ர்க‌ளிட‌மும், சாதி இந்துக்க‌ளிட‌மும் பெரும் க‌ல‌க்க‌த்தை ஏற்ப‌டுத்தினார், அந்த‌ த‌ருண‌த்தில் அவ‌ரை முழுமையாக‌ ஆத‌ரித்த‌ த‌ந்தை பெரியார், த‌ன‌து குடிய‌ர‌சு இத‌ழில் எழுதிய‌ த‌லைய‌ங்க‌மான‌து கிறிஸ்த‌வ‌ முக்காடு போட்டிருக்கும் இந்துத்துவ‌ வெறிய‌ன் எழுப்பியிருக்கும் கேள்விக‌ளுக்கு ப‌தில‌ளிக்க கூடிய‌ வ‌கையில் அமைந்திருப்ப‌தால் அதிலிருக்கும் க‌ருத்துக்கள் சில‌வ‌ற்றை இங்கே ப‌திகிறேன். இனி பெரியார் எழுதுகிறார்...


வெளிப்படையாய் நாம் பேசுவதானால், அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும் நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால், அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.

முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம்; கோஷம் இருக்கலாம்; கடவுள் இருக்கலாம்; மூடநம்பிக்கை இருக்கலாம்; மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம்; சமதர்மமில்லாமலும் இருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம்.மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்;

நாஸ்திகர்களுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; சமதர்மவாதிகளுக்கும், பொதுவுடைமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.ஆனால், தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும், புழுத்த விஷக்கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவ பிள்ளை, கிறிஸ்தவ நாய்க்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லிம் என்றோ அழைக்க இடமில்லாமலும் அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்றசமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு, "எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்" என்கின்றவன் போனால், இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும், "சரி, எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்" என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.


நமக்குக் கடிதம் எழுதின நண்பர், "இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது; இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது; பெண்களுக்கு உறை போட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்" என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது, பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம்.

இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும்,தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும், சிலமூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள்.அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம்சீர்திருத்தமடைந்து வரவில்லை; இந்து மதம் ஒழிந்துவருகின்றது என்று தான் சொல்லுவோம்.

இந்து மதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை; அதைச் சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்து மத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொறுத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும், தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொறுத்தது அல்ல.

இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய, சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள், அம்பேத்கர் வேறு மதத்துக்குப் போவதை அனுமதிக்கக் கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான் நியாயமாகுமா?

ஆதலால், அம்பேத்கருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன், அம்முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரருடையவும் கடமையாகும் என்பது நமது அபிப்பிராயம்.



(17.11.1935 "குடி அரசு' இதழில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்)

‘ஜனநாயகம்’, ‘விவாதம்’ பற்றி பேசும் யோக்கியதை தமிழ்மணிக்கு உண்டா?

தமிழ்மணி என்ற பெயரில் எழுதி வரும் இந்துத்துவ கும்பல் பற்றி ஆதாரங்களோடு நாம் எழுதி வாரம் இரண்டாகிறது, தமிழ்மணி தரப்பிலிருந்து நம்முடைய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த விளக்கமும் இல்லை, தனது கணிப்பொறியில் ஈ கலப்பை வேலை செய்யவில்லை என்றும் அதனால் தமிழில் தட்டச்சு செய்யமுடியவில்லை எனவே அடுத்த வாரம் மறுமொழி அளிக்கிறேன் என்று கூறியிருந்தார் தமிழ்மணி, காட்டமான மறுமொழி வருமென்று நானும் ஆவலோடு காத்திருந்தேன், இப்பொழுது தமிழ்மணியின் கணிப்பொறியில் ஈ கலப்பை வேலை செய்கிறது, அவரும் நமக்கு பதில் சொல்லியிருக்கிறார் என்ன பதில் தெரியுமோ?

//சம்பூகனோடு எனக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவர் உண்மையிலேயே பெரியாரிஸ தொண்டராக இருந்தால், வாழ்த்துகிறேன். அவரது வழியில் அவர் சென்று கம்யூனிஸத்தை கண்டாலும் சரி, அல்லது பெட்டி பூர்ஷ்வாவாக ஆனாலும் சரி, அல்லது "தரகு முதலாளி(lol)" ஆக ஆனாலும் சரி. எனக்கு ஒன்றுமில்லை. அவர் முழுமையான கம்யூனிஸ்டாக ஆகி, அந்த கம்யூனிஸ பிரச்சாரத்தை அவர் செய்யும்போது அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.//

இதுதான் அவரது பதில், இப்படியொரு பதிலை தமிழில் தட்டச்சு செய்வதற்காகத்தான் இரண்டு வாரங்களாக காத்திருந்திருக்கிறார் தமிழ்மணி.,

என்னோடு அவருக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லையாம், நான் எனது உழைப்பு நேரத்தை செலவு செய்து, தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் இந்த பார்ப்பன மதவெறி கும்பல் பற்றியும், பெரியாரியவாதிகளையும், மார்க்சியவாதிகளையும் மோதவிடுவதற்கு இந்த கும்பல் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், இயல்பில் இந்த கும்பலுக்கு பெரியார் மீதும் அவரது அரசியல் மீதும் இருக்கும் வெறுப்பை பற்றியும் தகுந்த ஆதாரங்களோடு எழுதியிருக்கிறேன், நான் இவ்வளவு குற்றச்சாட்டுகளை அடுக்கிவைத்து அவரிடம் கேள்வி எழுப்பினாலும் கூட அவர் என்னை பொருட்படுத்தமாட்டாராம், என்னோடு பேசுவதற்கு அவரிடம் ஒன்றுமில்லையாம், எவ்வளவு பெரிய ஜனநாயகவாதி பார்த்தீர்களா? தன்னை நோக்கி எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, அதுவும் “கிசுகிசுவாக” அல்ல, ஆதாரத்தோடு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல மறுக்கும் ஜனநாயகவாதிதான் இந்த தமிழ்மணி, என்னோடு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று அவர் கூறுவதை நான் வேறு எப்படி எடுத்துக்கொள்வது, "ஆம், நான் ஒரு இந்துத்துவ பயங்கரவாத கும்பலை சேர்ந்தவன்தான்" என்று அவர் ஒத்துக்கொண்டதாக எடுத்துக்கொள்ளலாமா என்பதை அவர்தான் கூற வேண்டும்.

நான் பெரியாரிய தொண்டராக இருந்தால் என்னை வாழ்த்துகிறாராம், இவர் வாழ்த்திற்காக ஏங்கி கொண்டு நான் வரிசையில் நின்று கொண்டிருப்பது போல பேசுகிறார் இந்த தமிழ்மணிவாள்., உன்னை பார்ப்பன இந்துமதவெறியன் என்று நான் குற்றம்சாட்டியிருக்கிறேன், அதற்கான ஆதாரங்களை காட்டியிருக்கிறேன், அப்படியிருக்கும் பொழுது தனது கொள்கைகளை கூட மறைத்துக் கொண்டு எழுதுமளவுக்கு ஜனநாயக விரோத, மனித விரோத கொள்கையை கொண்டிருக்கும் உன்னிடம் எனக்கு உறவென்ன, வாழ்த்தென்ன?

என்னோடு இப்போதைக்கு விவாதிக்க மாட்டாராம் தமிழ்மணி, நான் என்று கம்யூனிஸ்டாக மாறுகிறேனோ அன்று வந்து என்னிடம் கம்யூனிசத்தை பற்றி விவாதிப்பாராம் அதாவது "அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பாவாக மாறும் பொழுது" இவர் பேசுவார் என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்(அப்பொழுதும் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டார், கம்யூனிசம் பற்றிதான் விவாதிப்பார்), தன்னை பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாத இந்த ஜனநாயகவிரோத ‘பார்ப்பன’மணிதான், ஜனநாயகத்திற்கு அத்தாரிட்டியாக தன்னை வரித்துக் கொண்டு கம்யூனிஸ்ட்களோடு விவாதிக்கிறாராம், மேல்நிலையில் இருக்கும் பார்ப்பன கும்பலின் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுவிடும் என்கிற பதட்டம்தான் தமிழ்மணியை ஆட்டிவைக்கிறதே ஒழிய அவருக்கு ஜனநாயகத்தின் மீது ஒரு மயிரளவு கூட மரியாதை கிடையாது என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது, பார்ப்பன பண்ணாடைக்கு ஜனநாயகத்தின் மீது என்ன மதிப்பு இருக்க முடியும்.

நம்முடைய கேள்விகளை தவிர்த்துவிட்டு கம்யூனிஸ்ட்களை சர்வாதிகாரிகளாக திட்ட கிளம்பியிருக்கும் தமிழ்மணி அந்த பதிவினிடையே இப்படி கூறுகிறார்,

//தற்போது பார்ப்பனீயத்தை தூக்கி பிடிக்கிறான்.. ஏதோ காரணம். காரணமா முக்கியம். கருத்து சொல்பவனின் வாயை மூடுவதுதான் முக்கியம்.//

அதாவது, இந்த தமிழ்மணி கும்பலின் வாயை அடைப்பதற்காக கம்யூனிஸ்ட்கள் அவரை பார்ப்பனன் என்று குற்றம்சாட்டுகிறார்களாம்., திருவாளர் தமிழ்மணி அவர்களே, உங்களது முகத்திரையை கிழித்து உங்கள் அருவெறுப்பான ஜனநாயக விரோத பார்ப்பன முகத்தை அம்பலப்படுத்தும் என்னை கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தி நீங்கள் எனது வாயை அடைக்க முயல்வது ஏன்?

மேலும் அந்த பதிவில் சவடால் அடித்தபடியே ஜனநாயக பஜனை பாடும் தமிழ்மணி, "நான் மருதையனோடே விவாதித்தவன் நோக்கு தெரியுமோ?" என்று தனது பிரதாபத்தை பற்றியெல்லாம் பேசுகிறார். மருதையனோடே விவாதித்த தமிழ்மணி இந்த சாதாரண சம்பூகன் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் இருப்பது ஏன்? என்று நாம் அவரிடம் கேட்கிறோம்.,

தமிழ்மணியின் நேர்மை பற்றி நமக்கு தெரியாததல்ல, மைசூர் அரண்மனையின் வடிவமைப்பில் கட்டப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தை பெரிய கோவில் வடிவில் கட்டப்பட்டது என்று வாய்கூசாமல் ஆணித்தரமாக பொய் சொன்னவர்தான் இந்த தமிழ்மணி, அதனை நான் பொய் என்று எடுத்துக் கூறிய பொழுது தனது தவறை ஒத்துக்கொள்ளாமல் எங்கேயோ படித்ததைதான் கூறினேன் என்று எழுதியவர்தான் இந்த யோக்கிய சிகாமணி, இவர் மருதையனோடும் மற்றவர்களோடும் விவாதித்த இலட்சணத்தை நாம் துருவி துருவி கேட்டால் "நான் மருதையன் என்றுதான் சொன்னேன் எந்த மருதையன் என்று சொன்னேனா? நான் கூறியது எங்க வீட்டுக்கு பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் மருதையனை" என்று கூட‌ பதில் கூறுவார், யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை என்றால் அடுத்த முறை எழுதும் பொழுது "நான் மாவோவோடே விவாதித்திருக்கிறேன்" என்று எழுதுவார், இதுதான் த‌மிழ்ம‌ணியின் நேர்மை, பெரியார் வாழ்நாள் முழுக்க‌ க‌ம்யூனிச‌த்தை எதிர்த்தார் என்று புர‌ளி கிள‌ப்பிய‌ பார்ப்ப‌ன‌ கும்பலிட‌ம் வேறு என்ன‌ நேர்மை இருக்கும்?

பெரியாருக்கு க‌ம்யூனிஸ்ட்க‌ள் க‌ருத்து சுத‌ந்திர‌ம் கொடுக்க‌மாட்டார்க‌ளாம்., இப்படி அக்கறை காட்டும் தமிழ்மணியிடம் கேட்கிறேன், இன்று பெரியாரிய‌வாதிக‌ளுக்கே க‌ருத்து சுத‌ந்திரம் இல்லையே அதுபற்றி நீங்கள் ஏன் இதுவரை எழுதவில்லை பார்ப்பனமணி?

ஒரு உதார‌ண‌த்திற்கு சொல்கிறேன் த‌ந்தை பெரியார் திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஜ‌ன‌வ‌ரி 5ம் தேதி நாத்திக‌ர் விழா கொண்டாட‌ போவ‌தாக‌வும், எம்.ஆர்.இராதா நூற்றாண்டு விழாவை அத்தோடு சேர்ந்து கொண்டாட‌ போவ‌தாகவும், அத‌ன் நினைவாக‌ சென்னை எம்.ஜி.ஆர் ந‌க‌ரில் ஒரு நிழ‌ற்குடை திற‌க்க இருப்ப‌தாக‌வும் அறிவித்த‌து, இத‌ற்காக‌ சுவ‌ரொட்டி அச்ச‌டித்து, நோட்டீஸ் விநியோகித்து பிர‌ச்சார‌மும் செய்து வ‌ந்த‌து, விழா ஏற்பாடுக‌ளெல்லாம் முழுமையாக‌ முடிவடைந்துவிட்ட‌ நிலையில், தென்காசியில் குண்டு வைப்ப‌த‌ற்கு ச‌திதிட்ட‌ம் தீட்டிக் கொடுத்த‌ இராம‌.கோபால‌ன் என்ற‌ தீவிர‌வாதி அந்த‌ விழாவிற்கு த‌டை உத்த‌ர‌வு வாங்கினான், அத‌ற்கு அவ‌ன் கூறிய‌ கார‌ண‌ம் நாத்திகம் பேசினால் இந்துக்க‌ளின் ம‌ன‌து புண்ப‌டும், மேலும் பெரியார் தி.க‌வுக்கும் நக்சலைட்டு தீவிர‌வாதிக‌ளுக்கும் தொட‌ர்பு இருக்கிற‌து., இப்ப‌டி பீதி கிள‌ப்பி அந்த‌ விழாவிற்கு த‌டையுத்த‌ர‌வு வாங்கிய‌ அந்த‌ ப‌ண்ணாடைத்தான் இன்று த‌ன‌து அலுவ‌ல‌க‌த்திற்கே குண்டு வைப்ப‌த‌ற்கு ச‌தி திட்ட‌ம் தீட்டியிருக்கிற‌து.

நாத்திக‌ பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ க‌ருத்து சுத‌ந்திரத்தை கூட மறுக்கும் இந்த‌ இந்துத்துவ‌ பாசிச‌வாதிக‌ள் ப‌ற்றி க‌ண்டித்திருக்கிறாரா த‌மிழ்மணி? பெரியாரிய‌ க‌ருத்துக்க‌ள் பேச‌க்கூடாது என்று க‌ம்யூனிஸ்ட்க‌ளா வ‌ந்து த‌டையுத்த‌ர‌வு வாங்கினார்க‌ள், த‌டையுத்த‌ர‌வு வாங்கிய‌வ‌ன் ஆரிய‌ இந்தும‌த‌ வெறிய‌னான‌ இராம‌.கோபால‌ன், நாத்திக‌ பிர‌ச்சார‌ம் செய்வ‌தை கூட‌ ச‌கித்துக்கொள்ளாத‌ அந்த‌ உரிமையையும் ம‌றுக்கின்ற‌ இந்த‌ பாசிச‌வாத‌ கும்ப‌ல் ப‌ற்றி த‌மிழ்ம‌ணி த‌ன‌து துவார‌ங்க‌ளை திறக்காதது ஏன்?

பெரியாரிய‌ கொள்கைக‌ள் பேச‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் க‌ருத்து சுத‌ந்திர‌ம் த‌ர‌மாட்டார்க‌ளாம் அத‌னால் இவ‌ர் க‌ம்யூனிஸ்ட்க‌ளோடு விவாதிக்கிறாராம், பெரியாருக்காக‌ பேசுவ‌தாக‌ கூறும் த‌மிழ்ம‌ணி த‌ன‌து கும்பலில் இருக்கும் ப‌ழைய‌ அனானி, பெரியாரிய கருத்துக்களை "இனவெறி கருத்துக்கள்" என்று எழுதிய பொழுது அதனை மறுக்காமல் மெளனம் சாதித்ததோடு அந்த பின்னூட்டதை பதிவாக்கி அந்த இந்துமத வெறியனை ஊக்கப்படுத்தியது ஏன்?

இப்படி பொய், புர‌ளி, ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ம் இவ‌ற்றை ஒருங்கே கொண்ட‌ தமிழ்ம‌ணி என்கிற‌ ஜ‌ன‌நாய‌க‌விரோத‌, ம‌னித‌ விரோத‌ பார்ப்ப‌ன‌ கும்ப‌ல் ஜ‌ன‌நாய‌க‌த்தை ப‌ஜ‌னை பாடுவ‌து உண்மையில் ஜ‌க‌ஜோதியாக‌த்தான் இருக்கிற‌து, ச‌ங்கர‌ச்சாரி தீண்டாமை எதிர்ப்பு பேசுவ‌து போல‌.,

கடைசியாக தமிழ்மணி உச்சஸ்தாயில் சொல்கிறார்

//ஓடிவிட மாட்டேன்//

"எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே இவுரு ர்ர்ர்ர்ரொம்ப நல்லவரு" இப்படி சொல்லுவதை தவிர நாம் வேறு என்ன சொல்லமுடியும் இதற்கு.,

தமிழ்மணி ஒரு கோமாளியா?: பரபரப்புத் தகவல்கள்!!

நாம் முன்வைத்த குற்றசாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்காத தமிழ்மணி(எப்போதும் போல 'பார்ப்பன'மணின்னே படிங்க‌), தமிழ்மணத்தில் தனது முகத்திரை முழுவதுமாக கிழிந்து அம்பலப்பட்டு போய்விட்ட நிலையில். கோமாளித்தனமாக ஒரு பகடி செய்து தமிழ்மணத்தில் ஒரு ஜோக்கராகவாவது தன்னை தக்க வைத்துக் கொள்ள முயன்று பார்த்திருக்கிறார். அவருடைய சமீபத்திய பதிவை பார்த்தால் நமக்கு அப்படித்தான் தோன்றுகிறது, ஒரு கணவன் மனைவிக்குள் ஆம்லெட்டுக்காக நடந்த சண்டையை கம்யூனிசத்தோடு சம்பந்தப்படுத்தி ஒரு காமெடி முழக்கத்தோடு அந்தப்பதிவினை போட்டிருக்கிறார் தமிழ்மணி, வழக்கமான கம்யூனிச எதிர்ப்பு ஜல்லிதான் ஆனால் கொஞ்சம் கோமாளித்தனமான முறையில்.,

இது போன்ற கோமாளித்தனமான செய‌ல்க‌ள் செய்வது தமிழ்மணிக்கு புதிதல்ல., த‌மிழ்ம‌ணியின் விவாத‌ங்க‌ளே கோமாளித்த‌ன‌மான‌துதான் என்று ச‌மீப‌த்தில் ஒரு ப‌திவில் ப‌டித்தேன், "அவரோடு விவாதம் இவரோடு விவாதம்" என்று சட்டை கிழித்துக்கொள்ளாத குறையாக தமிழ்மணி புரண்டு புரண்டு அரற்றிக் கொண்டிருந்த சமயத்தில் கார்க்கி என்பவர் அந்த பதிவினை எழுதியிருக்கிறார்., மேலும் தமிழ்மணி விவாதம் என்று போட்டிருக்கிற பதிவுகளை சென்று பார்த்து நானும் கூட‌ பல முறை ஏமாந்ததுண்டு ஏனெனில் அங்கு தமிழ்மணியும் அவரது கும்பலை சேர்ந்த ஏனைய பூணூல்களும்தான் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பார்களே தவிர, தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த பதிவர் இருக்க மாட்டார், தனியாக அரற்றிக் கொண்டிருப்பதைதான் தலைப்பில் விவாதம் என்று தமிழ்மணி குறிப்பிட்டிருப்பார்.,

சரி இது போன்ற தமிழ்மணியின் கோமாளித்தனமான விவாத(?) முறைகளை நகைச்சுவையோடு விளக்குகிறது இப்பதிவு, இதில் கார்க்கியின் த‌னிப்ப‌ட்ட‌ கருத்துக்க‌ள் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌, இந்த‌ ப‌திவில் இருக்கும் ந‌கைச்சுவை கார‌ண‌மாக‌வும், த‌மிழ்ம‌ணி விவாத‌ம் என்ற‌ பெய‌ரில் அடித்துவ‌ந்த‌ கூத்தினை இந்த‌ ப‌திவு சிறப்பாக‌ அம்ப‌ல‌ப்ப‌டுத்துவ‌தாலும் இத‌னை இங்கே ப‌திகிறேன். இனி த‌மிழ்மணி விவாதம் என்கிற பெயரில் நடத்தும் கோமாளிக் கூத்துக‌ளை கார்க்கியின் சொற்க‌ளில் ப‌டித்து சிரிப்போம் வாருங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளே...

தமிழ்மணி ஒரு கோமாளியா?: பரபரப்புத் தகவல்கள்!!

தமிழ்மணம் வட்டாரங்களில் கோமாளிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ஒவ்வொரு முறை கோமாளிப் பஞ்சம் ஏற்படும் போதும் புதிது புதிதாக எதாவது ஒரு தெருப்புழுதி தோன்றி கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டேயிருப்பான்கள்.. அந்த வகையில் எனது இரண்டாண்டு தமிழ்மண வாசக அனுபவத்தில் எவர்கிரீன் கோமாளி ஜோடிகள் அரவிந்தன் நீலகண்டனும், ஜடாயுவும்தான். சமீப காலமாக அவர்கள் வீற்றிருக்கும் அந்த முதலிடத்துக்கு பயங்கரமான ஒரு ஆபத்து தோன்றி இருக்கிறது தமிழ்மணி என்பவர் வடிவத்தில்!* மார்க்சியத்தை உடைத்துக் காட்டுவோம் என்று முயன்ற பலரும் பரிதாபகரமாக மண்ணைக் கவ்விவிட்ட நிலையில் புதிதாக நமது தமிழ்மணி மேற்படி முயற்சிகளை ஆரம்பித்து இருக்கிறார். உண்மையில் நமது மூளைக்கு வேலை தரும் வகையில் ஏதாவது கேள்விகள் கேட்டிருப்பார் என்று முதலில் நான் நினைத்துக் கொண்டு தான் அவர் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன்.. பிறகு தான் தெரிந்தது.. நீல்ஸின் பர்மெனெண்ட் ஜாபுக்கே இவர் குண்டு வைக்கப் பார்க்கிறார் என்று..

அவர் சமீப காலத்தில் நிகழ்த்திக் காட்டிய சர்க்கஸ் வித்தைகளில் எனக்குப் பிடித்த சில வித்தைகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.. நீங்களும் சிரித்து மகிழலாம்.. வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, வாந்தி பேதி, சீத பேதி என்று ஏதாவது ஏடாகூடம் ஆகிவிட்டால் நான் ஜவாப் அல்ல! இப்போதே சொல்லி விடுகிறேன்.

ஒரு புத்தகத்தை அதன் முன்னுரையை மட்டும் படித்து விட்டு அட்டை டூ அட்டை இவ்வளவு தான் மேட்டர் என்று சொல்வது என்பது நமக்கெல்லாம் கொஞ்சமாவது கூசும்.. நுனிப்புல் மேயும் கூமுட்டை கூட அவ்வாறு விவாதிக்க கூசுவான். ஆனால் அந்தோ பரிதாம் நமது டமிள்பெல்லுக்கு அந்தளவுக்குக்கூட இங்கிதமோ, வெட்கமோ, கூச்சமோ, கிடையவே கிடையாது. குறைந்த பட்சம் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய நானயம் கூட இல்லை.. உலகமயம் பற்றி ஒரு நூலில் தோழர் இராயகரன் சிறப்பாக எழுதியிருக்கிறார்.. அதற்கான முன்னுரையை மட்டும் வாசித்து விட்டு பெரிய புடுங்கியைப் போல நம்ம புத்திசாலி மொத்த புத்தகத்திற்கும் மறுப்பு எழுதிக் கொண்டிருக்கிறது!

அதில் தலைப்பில் நம்ம புத்திசாலி சொல்லியிருக்கும் காரணம் என்ன தெரியுமா? “கம்யூனிஸ வார்த்தைகளை போட்டு எழுதப்பட்டிருப்பதால், இந்தகட்டுரையையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறேன்” அடடா.. என்ன ஒரு அறிவு! என்ன ஒரு அறிவு! இவரு பெரிய செவுரு… இவரு வந்து விவாதத்துக்கு எடுத்திட்டா எல்லோரும் போயி கைகட்டி பதில் சொல்லனுமாம்ல? எனக்குத் தெரிந்து தோழர்கள் கடுமையான வேலை நெருக்கடியின் மத்தியிலும் மதிப்பான நேரத்தை செலவு செய்தும் இனையத்தில் பரவலாக இருக்கும் so called அறிவு ஜீவிகள் மத்தியில் “இப்படியும் ஒரு மாற்றுப் பார்வை” இருக்கிறது என்பதை நிறுவிக்காட்டவே இனைய விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். இது போன்று மண்ணாங்கட்டிகள், தெருப்புழுதிகள் போன்ற கழிசடைகளிடம் வந்து அரட்டைக் கச்சேரி நடத்தவெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்க நியாயமில்லை.

( அப்ப நீ மட்டும் ஏண்டா…? என்று கேட்பது புரிகிறது.. செல்லா போன்ற அஷடுகளுக்குக் கூட நேரம் ஒதுக்கிய நான் இன்று எனக்குப் பிடித்த கோமாளிகளான நீலகண்டன் / ஜடாயு இடத்திற்கு போட்டி போடும் தமிழ்மணிக்கும் போனால் போகிறதென்று ஒரு அரைமணி நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.. அதாவது… தமிழ்மணி வார்த்தையில் சொன்னால்… “இவர் பதிவுகளில் சட்டையைப் பிய்த்துக் கொண்டு அலைகிறவனின் வார்த்தைகள் அதிகம் தென்படுவதால் இதையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறேன்”)

ஒக்கே பேக் டு த மேட்டர்..

இதில் இவருக்கு அங்கே கொஞ்சம் அனானி நன்பர்கள் வேறு இருக்கிறார்கள்.. பெயர்கள் காமெடியாக இருக்கும் “பழைய அனானி” “புதிய அனானி” “ரெண்டுக்கும் நடுப்புற அனானி” “புதிய அனானி வெர்ஷன் 2.1.0″ இப்படி எத்தனை பேரில் வந்தாலும் கொண்டை மட்டும் ஒன்றே! மொதல்ல கொண்டைய மறைங்கோ அம்பிகளா! இதில் அவருக்கு என்னா சவுரியம்னா.. முதல் அனானியா அவரு வரும்போது ஒரு விஷயத்தை உளரியிருப்பார்.. அதற்கு நமது தோழர்கள் பதில் கொடுத்திருப்பார்கள்.. கொஞ்சம் அசந்த நேரமா பாத்து ரெண்டாவது அனானிய வந்து அதே மேட்டரை வேறு வார்த்தைகளில்
கேட்பார்… நாமும் அதான் சொல்லியாச்சே என்று சும்மா மட்டும் இருந்து விட்டால் - கேம் ஓவர்.. நம்ம தல மூனாவது அநானியா வந்து, “இரண்டாவது அனானி கேட்டதற்கு நன்பர் தியாகு ஏன் பதில் சொல்லலை?” என்று ஒரே மடக்காக மடக்கி விடுவார்.. மொத்தத்தில் “பொழப்புக் கெட்டவன் பொண்டாட்டி தலைய செரச்சான்” என்பது போல இவர் புல்டைம் ஜாபாக இதே வேலையாகவே இருக்கிறார்..

இப்போது இவர் “விவாதத்திற்கு” எடுத்துக் கொண்டிருப்பது புராதன பொதுவுடைமை பற்றி. “எச்சூஸ்மி இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்பது போல் தான் இவர் ஆரம்பத்தில் தொடங்குவார்.. நாமும் முன்பக்கமாக மட்டும் பார்த்து விட்டு படித்துப் பார்த்தால் தான் முழு மேட்டரும் புரியும்… அவசரப்பட்டு பதில் சொல்ல இறங்கி விட்டு பின்னால் “ரொம்ப நேரம் நல்லாத்தானய்யா பேசிக்கிருந்தான்…?” என்று புலம்பி பிரயோசனமில்லை..

உதாரணமாக இப்போது அவரிடம் போய்,

“பொதுவுடைமை என்பது உற்பத்தி சாதனங்கள் எல்லோருக்கும் பொதுவான உடைமையாக இருக்கும் ஒரு சமுதாயத்தைக் குறிப்பது, அதிலும் வர்க்கமற்ற, பிரிவுகளற்ற சமுதாயத்தைக் குறிப்பது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இங்கே சமூக அமைப்பு முறை அப்படித்தான் இருந்தது.. இது உலகில் பல பகுதிகளில் காணப்படும் குகை ஓவியங்கள் மூலமும், அகழ்வாராய்ச்சி மூலமும் நிரூபனமாகி இருக்கிறது” என்று சீரியஸாக சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அதற்கு அவர்,

“கற்களை எப்படி உற்பத்தி சாதனம் என்று சொல்ல முடியும்? குகையில் வரையப்பட்ட ஓவியம் குகையில் மட்டும் தான் செல்லும்.. வெளியே செல்லாது செல்லாது.. வர்க்கம் ஏன் இல்லை? அதையெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது” என்று “விவாதிப்பார்” அதே நேரம் அல்லையில் அனானியாக ஊடுருவி, இதே “கேள்வியை” வேறு மாதிரி ஒரு தரம் கேட்டு வைத்துக் கொள்வார் - “அதெப்படி புராதனம் என்று சொல்ல முடியும்? கற்கள் இப்போது கூடத்தான் இருக்கிறது, அப்படியென்றால் அது புராதனமாகதல்லவா?”

இப்போது உண்மையான அக்கறையுடன் அங்கே விவாதிக்கப் புகுந்த நமது தோழருக்கு தலை பம்பரம் போல சுழல ஆரம்பித்து விடும்.. சரி ரெண்டும் ஒரே மாதிரி கேள்வி தானே ஒன்றுக்காவது பதில் சொல்வோம் என்று சொல்லி விட்டு வந்தால், ரெண்டு நாள் கழித்து பதில் சொல்லாமல் விட்ட அந்தக் “கேள்வியை” தனியே கட் பேஸ்ட் செய்து ஒரு பதிவாக போட்டு “இரண்டாவது அனானி நன்பர் தியாகுவுக்கு கேள்வி” என்று ஒரு தனிப்பதிவாக போட்டு விடுவார்..

இது இப்படியே தொடரும்.. எங்கே எதற்கு பதில் சொன்னோம், எந்தெந்த அவதாரத்தில் வந்து என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்று
ஒரு எழவும் புரியாது. இதே புல் டைம் ஜாபாக வைத்திருப்பவருக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் தோழர்கள் தங்கள் பல சொந்த வேலைகளுக்கு மத்தியில் இந்த கிறுக்குத்தனங்களையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு அரட்டைக் கச்சேரியை நடத்திக் கொண்டிருப்பது இயலாத காரியம்.

மொத்தத்தில் வடிவேலுவின் பஞ்சாயத்துப் போலத்தான் நமது தமிழ்மணியின் விவாத முறையும்,

“என்னடா கையப் புடிச்சி இழுத்தியா?”

“என்ன கையப்புடிச்சி இழுத்தியா”

“இல்லப்பா பக்கத்து ஊருக்கும் நமக்கும் ஏற்கனவே தகறாறு.. நீ ஏன் அந்தப் பொண்ணு கையப் புடிச்சி இழுத்தே?”
“என்ன கையப்புடிச்சி இழுத்தியா?”

“அது வந்துப்பா….”

“என்ன வந்துப்பா…?”

“இல்ல….”

“என்ன இல்ல..?”

இப்படியாக அவர் “விவாதித்துக்” கொண்டேயிருப்பார்.. எனக்கென்னவோ கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால்
நீலகண்டன் டெப்பாசிட்டு காலியாகிவிடும் போல் தான் இருக்கிறது. இந்த இடத்தில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், பேசாமல்
இவன் பேசப் பேச ஒதுங்கி நின்று பார்த்து சிரித்து ரசித்து மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான். இவனும் உண்மையடியான் போல தனியே
குரைத்துக் கொண்டு நிற்பான். இல்லையா.. அவனே “இரண்டாவது அனானி” பழைய அனானி, புத்தம் புதிய அனானி, புதிய அனானி ரிலீஸ் வெர்ஷன் 2.1.0 என்று அவன் மனம் திருப்தி அடையும் வன்னம் ஏதாவது ஒரு கமெண்டைப் போட்டு சுவத்தில் சொரிந்து கொள்ளும் எருமை போல சுயஇன்பத்தில் ஆழ்ந்து கிடப்பான்..

பொதுவான குறிப்பு :- பொதுவாக ஒருவன் தன்னைச் சுற்றிலும் உள்ள மக்கள் படும் துன்பங்களைப் பார்த்து(அதிலும் இந்தியாவில் நம்மைச் சுற்றியுள்ள நான்கில் ஒருவன் இரவு பட்டினியோடு படுத்துறங்குகிறான், பத்தில் எட்டுப் பேர் நாளுக்கு இருபது ரூபாய்கள் மட்டும் சம்பாதிக்கும் நிலையில் இருக்கிறார்கள்) இதையெல்லாம் மாற்றியமைக்க மாட்டோமா என்னும் தவிப்பில், அந்த மக்கள் மேல் இருக்கும் காதலின் பேரில் கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்கிறான். ஒருவன் வந்து உனது சித்தாந்தம் தவறு என்று சொல்வானானால் அவன் அதற்கு மாற்று என்ன என்பதை முன்வைத்து தான் உரையாட வேண்டும். வெறுமனே எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் “எதிர்க்க” முடியும். அப்படிச் செய்வது பொருட்படுத்தத் தக்கதல்ல!

தோழர்களுக்கு ஒரு குறிப்பு:- தமிழ்மணியின் உத்தி பைத்தியகார உரையாடல் உத்தி. இவனுக்கு பதில் சொல்வது நமது தொண்டைத்தண்ணியை நாம் தெரிந்தே வீணடிக்கும் வேலை என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது. நீங்கள் ஏற்கனவே அவனுக்கு கொடுத்த பதில்கள் உண்மையில் உங்களது அக்கறையை காட்டுகிறது. ஆனால் நமது அக்கரைக்கோ, பொருட்படுத்தலுக்கோ இவன் தகுதியானவன் அல்ல. எனவே நாம் இந்த அரட்டைக் கச்சேரியில் இறங்குவதை விட எதார்த்த நிலைகளைப் பற்றி மேலும் பல பதிவுகளை எழுதுவதே சிறந்தது! இது எனது தனிப்பட்ட
கருத்து மட்டும் தான் - மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.
*தமிழ்மணி கும்பல் அம்பலப்படுவதற்கு முன் கார்க்கி இந்த் கருத்தை தெரிவித்திருக்கிறார், ஆனால் தமிழ்மணி கும்பலிலேயே அரவிந்தன் நீலகண்டன் என்ற‌ இந்துமதவெறி பாசிஸ்ட் இருப்பதாக நமது பதிவுகளுக்கு பிறகு நண்பர்கள் குறிப்பிகின்றனர், நானும் அந்த சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன், அப்படியானால் அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌னின் கோமாளித்த‌ன‌த்திற்குரிய‌ முத‌லிட‌த்திற்கு த‌மிழ்ம‌ணி மூல‌மாக‌ ஆப‌த்து ஏற்ப‌ட‌வில்லை, அவ‌ரே த‌மிழ்ம‌ணி கும்ப‌லில் இணைந்து த‌ன‌து முத‌லிட‌த்தை த‌க்க‌வைத்துக் கொண்டிருக்கிறார் என்றாகிறது.

முற்போக்காளர்களை மோதவிட வாய்ப்பு தேடும் தமிழ்மணி கும்பல்

தமிழ்மணி(எ)பார்ப்பனமணியின் இந்த சதிச்செயலை கண்டிக்கும் பார்ப்பன எதிர்ப்பாளர்களே, உங்கள் கண்டனங்களை இங்கே பதிவு செய்யுங்கள், "பெரியாரியவாதிகள் மெள‌னம் சாதிக்கிறார்க‌ள்" என்று திமிராக‌ பேசும் த‌மிழ்ம‌ணி கும்ப‌லுக்கு எதிராக‌ உங்க‌ள் குர‌லை உய‌ர்த்துங்க‌ள்...

'தமிழ்மணி' என்கிற பெயரில் எழுதிவ‌ரும் பதிவர் கம்யூனிச எதிர்ப்பாளர், ஜனநாயகவாதி என்ற முகமூடியில் எழுதியிருந்த இந்துத்துவ கருத்துக்களையும், சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகவும், இணையத்திலிருக்கும் முற்போக்காளர்களை மோதவிடும் நோக்கத்தோடும் அவர் எழுதியிருந்த கருத்துக்களையும் என்னுடைய கடந்த சில பதிவுகளில் எடுத்துக்காட்டியிருந்தேன், அத்தோடு அவரது பதுவுகளில் “பழைய அனானி” என்கிற பெயரில் எழுதி வந்த இந்துத்துவ வெறியனின் திராவிட வெறுப்பியல் கருத்துக்களையும் கூட எடுத்துக்காட்டியிருந்தேன்.

இதுவரை நாம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாத
தமிழ்மணி(எ)பார்ப்பனமணி சரிந்து போன தனது இமேஜை தூக்கிநிறுத்துவதற்காகவும், இனியாவது தன்னை இந்துத்துவ எதிர்ப்பாளன் போல காட்டிக் கொண்டு முற்போக்காளர்களை மோதவிடும் சதியில் தொடர்ந்து ஈடுபடுவதற்காகவும், தங்களுக்கு தாங்களே குண்டு வைத்து சதிச் செயலில் ஈடுபட்ட இந்துத்துவவெறிபிடித்த பயங்கரவாதிகளை எதிர்ப்பதாக ஆங்கிலத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.,

கம்யூனிஸ்ட்கள் ஜனநாயகவாதிகள் அல்ல என்று கூறியபடி அவர்களுக்கு எதிராக தொடர்ந்து பதிவிட்டு வந்த தமிழ்மணி, குஜராத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களை கொன்ற ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்ட்களையோ, அவர்களது பாசிச பரிவாரங்களையோ கண்டித்து இதுவரை எழுதியதில்லை என்பது குறிப்பிடதக்கது, வர்ணாசிரம அடுக்கின் கீழ்நிலையில் இருக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்து வரும் ஜனநாயகவிரோத பார்ப்பனீயம் பற்றியும் இதுவரை அவர் கணடித்து எழுதியதில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் அவரது உண்மை முகத்தை அம்பலப்படுத்தி சம்பூகனில் வந்த கட்டுரைகளுக்கு பிறகு இப்பொழுது “தனக்குத்தானே குண்டு வைத்துக் கொண்ட இந்துமுன்னனியின்” சதிச் செயலை கண்டிப்பதை போல பதிவு போட்டு பாசாங்கு காட்டியிருக்கிறார்(அந்த பதிவு அனைவருக்கும் புரியும்படி தமிழிலும் இல்லை என்பதோடு அது இந்துத்துவததை கண்டிக்கவில்லை மாறாக குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அந்த மூவரை மட்டுமே கண்டிக்கிறது) இருப்பினும் கூட சக பயங்கரவாதிகள் சதியில் இறங்கி மாட்டிக்கொண்டுவிட்ட நிலையில் அவர்களை எதிர்த்து பதிவிட வேண்டிய நிர்பந்தம் தமிழ்மணி(எ)பார்ப்பனமணிக்கு ஏற்பட்டிருப்பது உண்மையில் பரிதாபகரமானதுதான்.,

“பழைய அனானி” என்ற பெயரில் எழுதி வரும் இந்துத்துவ வெறியனை நாம் அம்பலப்படுத்தி தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இதுவரை பதிலளிக்காத அந்த உத்தமன், எனக்கு கம்யூனிச லேபிள் ஒட்டுவது, அசுரன் என்று எனக்கு நாமகரணம் சூட்டுவது, நான் கூறிய கருத்துக்களை திரித்து கூறுவது, வதந்தி கிளப்புவது போன்ற நேர்மையற்ற ஆர்.எஸ்.எஸ் பாணி வாதங்களை கையாள துவங்கியிருக்கிறான். தமிழ்மணியினுடைய பதிவின் பின்னூட்டத்தில் அவன் தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கு எனது எதிர்வினையை இங்கே பதிகிறேன்

பெரியார் கம்யூனிஸத்திற்கு எதிர்த்தில்லை ஆனால் அவர் இங்கிருக்கும் கம்யூனிஸ்ட்களைத்தான் எதிர்த்தார் என்று தகுந்த ஆதாரங்களோடு சென்ற பதிவில் எடுத்துக்காட்டியிருந்தேன், ரஷிய புரட்சியின் 50வது ஆண்டு விழாவையொட்டி பெரியார் நடத்திய விடுதலை பத்திரிக்கை 1966ல் சிறப்பு மலர் வெளியிட்டதையும், அதில் எழுதிய தந்தை பெரியார்,


"இந்நாடு கம்யூனிச நாடாவதே என் விருப்பம். சோசலிசம், கம்யூனிசம், சமதர்மம் பரவுவதற்காக என்று இரசியாவே இங்கு வந்தாலும் நான் வரவேற்பேன்"

(9.2.1966 விடுதலை)

என்று எழுதியதையும், தனது இறுதி உரையில்


"இந்தக் கம்யூனிஸ்டே(இந்தியாவிலிருப்பவர்கள்) வந்துவிட்டான் என்றால், அவன் காசுக்கு என்றால் என்ன வேணும்னாலும் பண்ணுவானே, அவனல்லவா சத்தம் போட வேண்டும் எனக்கு பதிலாக? எங்களை தவிர நாதியில்லை இந்த நாட்டில்"(19.12.1973)

என்று அவர் பேசியதையும், எடுத்துக்காட்டியதோடு, தந்தை பெரியார் இங்கிருக்க கூடிய கம்யூனிஸ்ட்களைத்தான் எதிர்த்தாரேயொழிய அவர் என்று கம்யூனிச கொள்கைகளை எதிர்த்ததில்லை என்றும் எழுதியிருந்தேன்.

இதற்கு பதில் சொல்லுகிற பழைய அனானி எனது கருத்தை எப்படி திரிக்கிறார் பாருங்கள்,

//பெரியாரின் வாழ்க்கையில் அவர் ஆதரவு தந்தவை கம்யூனிஸ்டுகள் மட்டும் அல்ல். 20 வருடங்கள் அவர் தி மு கவை எதிர்த்து காமராஜர் ஆட்சிக்காக காங்கிரசுக்கு பிரசார செய்தார். அதனால் அவர் காங்கிரஸ் ஆதரவாளர் , தி மு கவின் எதிரி என்று சொல்ல வேண்டும். பிறகு அவரே காங்கிரஸை விட்டு தி மு கவை ஆதரிதார் அதனால் வரை திமுகவுக்குச் சொந்தம், காங்கிரஸ் எதிரி என்று சொல்லவேண்டும். அவர் ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர் விடுதலை அளிக்கக் கூடாது என்று வாதிட்டார் அதனால் அவரை பிரிட்டிஷ் ஆதரவாளர் என்று சொல்ல வேண்டும். கீழ்வெண்மணிபிரசினையின் போது கம்யூனிஸ்டுகளை எதிர்த்தார் அதனால் அவரை கம்யூனிஸ்டு எதிரி என்று சொல்ல வேண்டும்.//

நான் எழுதியிருந்தது பெரியார் என்றுமே கம்யூனிஸ கொள்கைகளை எதிர்க்கவில்லை, தவறான நிலைப்பாடுகளோடு செயல்பட்டுவந்த கம்யூனிஸ்ட்களையே அவர் எதிர்த்தார் என்று., அவர் கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டுமே அவர் ஆதரித்து வந்தார் என்று நான் கூறியது போல எனது கருத்தை திரிக்கும் பழைய அனானி, "அவர் தி.மு.கவையும் ஆதரித்தார், காங்கிரசையும் ஆதரித்தார்" என்றெல்லாம் நம்மிடம் கூறுகிறார்.,

திராவிட வெறுப்பியல் கருத்து கொண்ட திருவாளர் பழைய அனானி அவர்களே நான் கூறிய கருத்தை கவனமாக படியுங்கள், கம்யூனிச கொள்கைகளை பெரியார் என்றுமே எதிர்த்ததில்லை என்றுதான் நான் கூறியிருக்கிறேன், அப்படி அவர் எதிர்த்திருந்தால் எடுத்துக்காட்டுங்கள், அப்படியொரு கருத்தை ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் தங்களது கடைகளில் வைத்துவிற்கிறார்களே, ம.வெங்கடேசன் எழுதிய "ஈ.வெ.ராவின் மறுபக்கம்" என்ற புளூகுமூட்டை புத்தகம், அதிலிருந்து கூட நீங்கள் எடுத்துக்காட்ட முடியாது.

//இப்படிப் பட்ட முரணபாடுகளை அவரே அறிந்திருந்தார். அந்தந்த காலகட்டத்தில் , எதுமக்களுக்கு நல்லது என்று தோன்றுகிறதோ அதைச் செய்வது தான் தன் வேலை என்றும் , முன்னுக்குப் பின் முரணாய் இருப்பது பற்றி தனக்குக் கவலை இல்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அவர் பகத் சிங்கையும், கம்யூனிச விளக்கத்தையும் வெளியிட்டுரிக்கிறார் தான் ஆனால், அதன் அடிப்படை காரணம் என்ன என்பது நாம் ஆராய வேண்டும். அவர் தன்னளவில் நாத்திகக் கருத்துகளையும் , மனித ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் மதச் சிந்தனைகளையும் எதிர்த்தார். அவருக்கு முன்பு ஸ்தூலமாய் இருந்த இந்து மதத்தின் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தார். //

"நான் நாத்திகன் ஏன்?" என்ற புத்தகத்தை வெளியிட்ட தந்தை பெரியார், பகத்சிங் வெள்ளையர்களுக்கு எதிராக‌ போராடிய‌ கார‌ண‌த்துக்காக‌ மட்டும் அதை வெளியிடவில்லை, பகத்சிங் ஒரு நாத்திகர் என்ற காரணத்திற்காக மட்டும் அதை வெளியிடவில்லை, குறிப்பாக பகத்சிங் ஒரு பொதுவுடைமையாளர் என்ற காரணத்துக்காகவே அவர் அந்த புத்தகத்தை வெளியிட்டார், அதனை அவர் அந்த‌ புத்த‌க‌த்தின் பின்னிணைப்பில் இருக்கும் குடியரசு பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடுகிறார். அத‌னால்தான் "ஆதாரம்: நான் நாத்திகன் ஏன்? எனற புத்தகத்தின் பின்னிணைப்பு" என்பதாக நான் குறிப்பிட்டேன்.,

"நான் நாத்திகன் ஏன்?" என்ற புத்தகத்தை இந்து மத அநீதிகளுக்கு எதிராக தந்தை பெரியார் வெளியிட்டார் என்று சொல்வதை கூட வாதத்திற்காக ஏற்றுக்கொள்ளலாம், "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை" அவர் ஏன் வெளியிட வேண்டும், அதில் இந்து மத அநீதிக்கு எதிராக ஒன்றும் இருக்காதே, பின்பு ஏன் பெரியார் அதை வெளியிட்டார், ஸ்தூலமாய் இருந்த இந்து மத அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த தந்தை பெரியார் "சுயமரியாதை சமதர்ம கட்சியை" தொடங்கி பொதுவுடைமை பிரச்சாரம் செய்யவேண்டிய அவசியம் என்ன? சொல்லுங்க‌ள் ப‌ழைய‌ அனானி, பெரியார் கம்யூனிச கொள்கை என்றால் என்னவென்றே அறியாதவராக இருந்தாரா? அதனை ஒரு நாத்திக கொள்கை என்பதாக மட்டும் புரிந்து வைத்திருந்தாரா? இது பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் பேசும் பொழுது பெரியார் குறிப்பிட்டார்


ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம்
பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர். "பணக்காரன் ஒழிந்தால் ஜாதி ஒழியும்" என்கின்றனர். ஆனால், ஜாதி இருப்பதால்தானே அவனிடம் பணம் போய்ச் சேருகிறது என்பதை உணருவதில்லை.
(13.4.1955 அன்று, திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை. )

ஜாதிய வேற்றுமைக்கு எதிராக போராடாமல் வர்க்க வேற்றுமைக்கு எதிராக பேசும் இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக பெரியார் பேசியதுதான் மேலே இருப்பது, அதில் அவர் கூறும் வார்த்தையை கவனியுங்கள் "ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி." கம்யூனிச கொள்கையை தமிழகத்திற்கு எடுத்துவந்தவர் தந்தை பெரியார் என்பதன்றி இந்த வார்த்தைக‌ளுக்கு வேறு என்ன‌ பொருள் இருக்க‌ முடியும்?

அடுத்து கூறுகிறார் "கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர்." இங்கிருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கு கம்யூனிச கொள்கையே தெரியவில்லை அதனால்தான் சாதி ஒழிப்பு பற்றி பேசாமல், வர்க்க வேற்றுமை பற்றி பேசுகின்றனர் என்கிறார்.,

கம்யூனிசம் தெரியாத கம்யூனிஸ்ட்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியினரையே விமர்சித்த தந்தை பெரியாரைத்தான் அவர் கம்யூனிச கொள்கைகள் என்றாலே என்னவென்று அறியாதிருந்தது போலவும், நாத்திகவாதத்திற்காக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பதிப்பித்தது போலவும் கூறுகிறார் பழைய அனானி.

//அவரே பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் "நான் ஏன் கிருஸ்துவன் அல்ல" நூலையும் வெளியிட்டிருக்கிறார். ரஸ்ஸல் கம்யூனிச சித்தாந்தத்தை எதிர்த்தவர். அதனால். பெரியாரும் அதனால் கம்யூனிச எதிரி என்று சொல்லலாமா? இல்லை. ரஸ்ஸலை அவர் எடுத்துக் கொண்டது அவர் நாத்திகக் கருத்துகளுக்காக.//

ரஸ்ஸலின் கம்யூனிச எதிர்ப்பு புத்தகங்களையா பெரியார் தமிழில் வெளியிட்டார்? அவரது நாத்திகவாதம் பேசும் புத்தகத்தை அந்த நோக்கத்திற்கெனவேதான் வெளியிட்டார், ரஸ்ஸல் என்றாலே யார் என்று தெரியாத என்னை போன்றவர்களுக்கு இன்றுவரை "பெட்னர்ட் ரஸ்ஸல்" என்பவரை "நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல" என்ற புத்தகம் எழுதியவராகத்தான் தெரியும்., பெரியார் அவரை எங்களுக்கு அவரை நாத்திகவாதியாகத்தான் அறிமுகப்படுத்தினாரேயொழிய கம்யூனிச எதிர்ப்பாளாராக அறிமுகம் செய்துவைக்கவில்லை.,

ஆனால் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை' ஜாதிய வேற்றுமை, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு என எல்லா ஏற்ற தாழ்வுகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் அவர் வெளியிட்டாரேயொழிய நாத்திக கருத்துக்காக‌ வெளியிட‌வில்லை என்ப‌த‌னை சாத‌ர‌ண‌மாக‌ பார்க்கும் பொழுதே புரிய‌ கூடிய‌ ஒன்று.

//இதெல்லாம் தெரியாமல் பெரியாரைக் கம்யூனிஸ்டாய்க் காண்பித்து பெருமைப் பட்டுக் கொள்வது கம்யூனிஸ்டுகளின் தந்திரம் தானே தவிர வேறில்லை.//

பெரியார் த‌ன‌து இறுதி மூச்சுவ‌ரை க‌ம்யூனிச‌த்தை ஆத‌ரித்தே வ‌ந்தார் என்கிற‌ உண்மை புரியாம‌ல் அவ‌ரை க‌ம்யூனிஸ்ட்க‌ளுக்கு எதிராக‌ நிறுத்தி, பெரியாரிய‌வாதிக‌ள், க‌ம்யூனிஸ்ட்க‌ள் இருவ‌ரையும் மோத‌ வைத்து வீழ்த்த‌ வேண்டும் என்று எண்ணுவ‌து அப்ப‌ட்ட்ட‌மான‌ பார்ப்ப‌ன‌ த‌ந்திர‌ம்தானே த‌விர‌ வேற‌ல்ல.,

இந்த சதி திட்டத்தை அம்ப‌ல‌ப்ப‌டுத்துப‌வ‌ரை கம்யூனிஸ்டாக‌ லேபிள் ஒட்டி த‌ன‌து வ‌ழ‌க்க‌மான‌ பிர‌ச்சார‌த்தில் இற‌ங்குவ‌து, சித‌ம்ப‌ர‌ம் கோவிலில் த‌மிழில் பாட‌ முய‌ன்ற‌ ஆறுமுக‌சாமியை ஒரு வ‌ம்ப‌ராக சொல்வதற்கும், இந்து ம‌த‌ புர‌ட்டுக‌ளை அம்ப‌ல‌ப்ப‌டுத்தும் அக்னிஹோத்ர‌ம் தாத்தாச்சாரியை, அவருக்கு புராணமே தெரியாது என்று வ‌சைபாடி பிர‌ச்சார‌ம் செய்வதற்க்கும் ஒப்பான‌ ஆரிய‌ பார்ப்ப‌ன‌ த‌ந்திர‌ம்தானே த‌விர‌ வேற‌ல்ல.

//அவர் அந்தக் காலகட்டத்தில் கம்யூனிசக் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்ததில் வியப்பில்லை. அந்தக் காலகட்டத்தில் , ரஷ்யப் புரட்சி வெகுவாக கால்னியாதிக்க நாடுகளிடையே நம்பிக்கையை விதைத்திருந்தது. ஸ்டாலினின் கொலைகள் இன்னமும் பரவ்லாய்த் தெரிய ஆரம்பிக்கவில்லை. அமெரிக்கா வியத்நாமை ஆக்கிரமித்தது கம்யூனிச ஆதரவு அலை வீச இன்னொரு முக்கிய காரணம். ஆனால் காலப் போக்கில் கம்யூனிஸ்டுகளின் கொடூரங்கள் வெளியே தெரியவரலாயின. ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் நடந்தவையும், சைபீரியா சிறைச்சாலைக் கொடுமைகளும், ஆள்மறைதல் போன்ற எதேச்சாதிகாரமும் தெரிய வந்த பிறகு, ஐரோப்பாவில் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த ஆதரவு குறைந்தது. சோஷல் டெமாக்ரடிக் கட்சிகள் உருவாயின. மக்களின் நலத்திட்டங்களுக்கு மூலதன் வளர்ச்சியும் அதனால் கிடைக்கும் வரிப்பணமும் மிக அவசியம் என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். இதாலி , ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகளும் கூட புரட்சி போன்ற கையாலாகாத கோரிக்கையைக் கைவிட்டு , மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தலாயினர். கிட்டத்தட்ட அதே போல் இந்தியாவிலும், வலது இடதுசாரி கம்யூனிஸ்டுகளும் தேர்தலில் பங்கு பெற்று வளர்ந்தனர்.//


இது ஒரு அப்ப‌ட்டமான பொய் அல்ல‌து அறியாமை என்று சொல்வ‌தை த‌விர‌ வேறு என்ன‌ சொல்ல‌ முடியும், ஸ்டாலின் கொலைகார‌ர் என்ப‌தான‌ க‌ருத்துக்க‌ள் 1956க‌ளிலேயே வெளிவந்திருக்கின்றன‌, பெரியார் 1966ல் விடுதலை ப‌த்திரிக்கையின் சார்ப்பாக ர‌ஷிய‌ புர‌ட்சியின் 50வ‌து ஆண்டுவிழா ம‌ல‌ர் கொண்டுவ‌ந்து இந்த‌ நாடு க‌ம்யூனிச‌ நாடாவ‌துதான் என‌து விருப்ப‌ம் என்று எழுதுகிறார், 1973ல் த‌ன‌து இறுதியுரையில் க‌ம்யூனிச‌த்தின் மீது த‌ன‌க்கிருக்கும் ஈர்ப்பை வெளிப்ப‌டுத்துகிறார், இப்ப‌டியிருக்கும் பொழுது த‌ந்தை பெரியார் ஏதோ ஒன்றுமே தெரியாமல், எல்லோரும் போகிற‌ வ‌ழியில் ஆட்டும‌ந்தை போல‌ க‌ம்யூனிச‌த்துக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌து போல் எழுதுகிறார் ப‌ழைய‌ அனானி.,

//இந்த வரலாறு தி.கவினருக்குத் தெரியும். அவர்கள் சட்டரீதியாகவும், வன்முறை தவிர்த்த போராட்டங்களையும் கைக்கொண்டு பெரியார் வழியில் போராடுகிறவர்கள். அவர்களுடன் இணைகிற கம்யூனிஸ்டுகள் தி க வினரை வளைத்துப் போட எண்ணி தி க வினரைவிட அதிகமாய் பிராமண எதிர்ப்பு வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த கருத்துகளுக்கு, அசுரன் போன்றவர்களிடமிருந்தும், திராவிட வேடம் போடும் அசுரக் குஞ்சுகளிடமிருந்தும் பதில் வருகிரது. தி க வினர் உண்மையை உணர்ந்து மௌனம் சாதிக்கின்றனர்.//

பிராம‌ண‌ எதிர்ப்பு என்று ப‌வ்ய‌ம் காட்டுகிற‌ ப‌ழைய‌ அனானிக்கு பார்ப்பன எதிர்ப்பாளர்கள் ச‌ட்ட‌ ரீதியாக‌த்தான் போராட‌ வேண்டும் என்ப‌தில் எவ்வ‌ள‌வு அக்க‌றை, ஏன் நாங்க‌ள் ச‌ட்ட‌த்தை மீறி இற‌ங்கினால் பூணூல்க‌ளும், குடுமிக‌ளும் அறுத்தெறிய‌ப்ப‌டும் என்கிற‌ ப‌ய‌மா? அல்ல‌து இந்த‌ ச‌ட்ட‌ம் சூத்திர‌ன் என்ற‌ ப‌ட்ட‌த்தை இன்னும் எங்க‌ள் த‌லையில் சும‌த்தி வைத்திருக்கிற‌தே அதையே நிலைக்க‌ வைக்க‌ வேண்டும் என்கிற‌ எண்ண‌மா? அல்ல‌து இந்த‌ ச‌ட்ட‌ம் அவர்களுக்கு பாதுகாப்பாக‌ இருக்கிறதே, அந்த பறிபோய்விடக்கூடாது என்கிற‌ பாதுகாப்பு உண‌ர்ச்சியா?

அசுர‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் இன்று திராவிட‌த்திற்கு ஆத‌ரவாக‌ பேசுகிறார்க‌ள் என்றால் அது பெரியாரிய‌த்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி, சாதி ஆதிக்க‌தை ஒழிக்காமல், ஏழை ப‌ணக்கார‌ன் என்ற‌ பேத‌ம் ஒழிய‌ வேண்டும் என்று குர‌ல் கொடுத்த‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் இன்று சாதி ஆதிக்க‌த்தை ஒழிக்க‌ வேண்டும் என்று பெரியாரிய‌வாதிக‌ளோடு கைகோர்க்கிறார்க‌ள் என்றால் அது பெரியாரிய‌வாதிக‌ளும், பார்ப்ப‌ன‌ எதிர்ப்பாள‌ர்க‌ளும் ம‌ன‌முவ‌ந்து வ‌ரவேற்க‌ வேண்டிய‌ ஒன்று.

உண்மையான‌ க‌ம்யூனிச‌ம் என்ப‌து சாதி ஆதிக்க‌த்தை ஒழிக்க‌ வேண்டும் என‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் இன்று சொல்கிறார்க‌ள் என்றால் அந்த‌ உண்மையான‌ க‌ம்யூனிச‌த்திற்காக‌ த‌வ‌றான‌ நிலைப்பாடு கொண்டிருந்த அந்த‌ கால‌த்திய‌ மார்க்சிஸ்ட்க‌ளோடு இடைய‌றாது போராடிய‌ பெரியாருக்கு இன்றைய‌ க‌ம்யூனிச‌வாதிக‌ள் ந‌ன்றி கூற‌ வேண்டும். பெரியாரை அப்ப‌டித்தான் அவ‌ர்க‌ளும் பார்க்கிறார்க‌ள் என்று நான் நினைக்கிறேன்.,

இன்று எந்த‌ க‌ம்யூனிஸ்டும் த‌ன‌து கொள்கைக்கு நேரெதிராக‌ கோல்வால்க‌ருக்கு உரிமை கோர‌வில்லையே(தமிழ்நாட்டில் ஒரு சொறிபிடித்த நாய்கூட அவனை சொந்தம் கொண்டாடாது என்பது வேறு விசயம்), பெரியாருக்குத்தானே உரிமை கோருகிறார்க‌ள், அது பெரியாரின் சாதி எதிர்ப்புக்கும் பார்ப்ப‌ன‌ எதிர்ப்புக்கு கிடைத்திருக்கும் ப‌ரிசு.,

ம‌ற்ற‌ப‌டி த‌மிழ்ம‌ண‌த்தில் பார்ப்ப‌ன‌ எதிர்ப்பாள‌ர்கள் உண்மையை உண‌ர்ந்து மெள‌ன‌ம் சாதிக்கிறார்க‌ள் என்பதெல்லாம் ப‌ழைய‌ அனானி த‌ன்னைத்தானே தேற்றிக்கொள்வ‌த‌ற்கு சொல்லிக்கொள்ளூம் வாதங்கள்தான்.

த‌மிழ்ம‌ணி(எ)பார்ப்ப‌ன‌ம‌ணியை அம்ப‌ல‌ப்ப‌டுத்திய‌த‌ற்கு வாழ்த்து தெரிவித்து இங்கு ப‌ல‌ பின்னூட்ட‌ங்க‌ள் வ‌ந்திருக்கின்ற‌ன‌ அத்த‌னையும் அசுரன் போன்ற கம்யூனிஸ்ட்கள் போட்ட‌வையா? பின்னூட்ட‌மிட்டிருக்கும் எல்லோருமே திராவிட‌ ஆத‌ர‌வு க‌ருத்து கொண்ட‌வ‌ர்க‌ள் போட்ட‌வைதானே., வேண்டுமானால் பழைய‌ அனானிக்கு நிரூபிப்ப‌த‌ற்காக‌ தோழ‌ர்க‌ளுக்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் என‌து வேண்டுகோளை இங்கே வைக்கிறேன்,

ந‌ண்ப‌ர்க‌ளே, முற்போக்காள‌ர்க‌ளை மோத‌விடும் பார்ப்ப‌ன‌ ச‌தியை நான் என‌து க‌ட‌ந்த‌ ப‌திவுக‌ளிலும் இந்த‌ ப‌திவிலும் அம்ப‌ல‌ப்ப‌டுத்தியிருக்கிறேன், இந்த‌ ச‌தியை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ள், க‌ண்டிப்ப‌வ‌ர்க‌ள், இங்கு பின்னூட்ட‌த்தின் வாயிலாக‌ உங்க‌ள் க‌ண்ட‌ண‌ங்க‌ளை ஓரிரு வார்த்தைக‌ளிலாவ‌து பதிவு செய்யுங்க‌ள்!!

ந‌ம‌து மெள‌ன‌ம் பார்ப்ப‌ன‌ ச‌திக்கு அனும‌திய‌ளிப்ப‌தை உண‌ர்ந்து, அந்த‌ மெள‌ன‌த்தை உடைந்த்தெறிந்து உங்க‌ள் குர‌லை உய‌ர்த்துங்க‌ள்!!

'ஆர்.எஸ்.எஸ்'காரர்கள் உயிருக்கு ஆபத்து!!!

நாட்டில் தீவிரவாதமும் வன்முறையும் பெருக்கெடுத்திருக்கும் இன்றைய‌ நிலையில் ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னனிகாரர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லாத ஆபத்தான‌ நிலை ஏற்பட்டுள்ளது.


'ராமன் ஒரு குடிகாரன்' என்று வால்மீகி ராமாயணத்திலிருக்கும் ஒரு உண்மையை கூறிய காரணத்திற்காக ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையே தலையை எடுப்போம் என்று கூறிய இந்துத்துவவாதிகள் தங்களது உயிருக்கும், தலைக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் சுதந்திரமாக உலாவிய‌ அமைதி பூங்காவான தமிழ்நாட்டிலேயே இந்த நிலை ஏற்பட்டிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது.


கடந்த மாதம் 24ம் தேதி தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பும் அதையொட்டிய கைதுகளும் இதனை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.,


தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னனி அலுவலகங்கள் இயங்கிவந்தன. கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி இரவு 8.45 மணியளவில் அந்த‌ அலுவ‌ல‌க‌த்தை பூட்டிவிட்டு அனைவரும் சென்றுவிட்ட நிலையில் அதன் க‌த‌வ‌ருகே இர‌ண்டு பைப் வெடிகுண்டுகள் பெரும்சத்தத்தோடு வெடித்த‌ன‌, இவை சக்தி குறைந்த சாதாரண வெடிகுண்டுகள் என்று அதிகாரிக‌ளே கூறிய‌ போதும் கூட‌ அனைத்து ப‌த்திரிக்கைகளும் அங்கு ச‌க்திவாய்ந்த‌ வெடிகுண்டு வெடித்த‌தாகவே எழுதின, ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்த அதே சமயத்தில் தென்காசி பேருந்து நிலையத்தில் தேனி போவதற்காக‌ நின்று கொண்டிருந்த‌ ஆட்டோவிலும் குண்டுவெடித்தது அதில் ஒரு முதிய‌வ‌ர் காய‌ம் அடைந்தார்.


யார் இப்ப‌டியெல்லாம் குண்டுவைத்திருப்பார்க‌ள் என்று ம‌க்க‌ளோ, போலீசோ யோசித்து நேர‌த்தை வீண‌டிக்க‌கூடாது என்று அவ‌ர்களது சிர‌ம‌த்தை குறைக்கும் வ‌கையில் த‌மிழ‌க‌ ஆர்.எஸ்.எஸ். த‌லைவ‌ர் மாரிமுத்து "தமிழகத்தில் பயங்கரவாதிகள், மாவோயிஸ்ட் நக்சலைட்கள் போன்றவர்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருவதையே இச்சம்பவம் உணர்த்துகிறது." என்றும் "இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்." என்றும் அறிக்கைவிட்டார், த‌மிழ‌க‌ பார‌தீய‌ ஜ‌ன‌தா க‌ட்சி போராட்டமே ந‌ட‌த்தியது.,


இந்த‌ நிலையில்தான் த‌மிழ‌க‌ காவ‌ல்துறை இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளை கைது செய்திருக்கிறது.



இந்து முன்ன‌னியை சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு குண்டுவைத்ததாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர், இத‌ன் மூல‌மாக‌ ஆர்.எஸ்.எஸ் அலுவ‌ல‌க‌த்திற்கு அந்த‌ அமைப்பை சேர்ந்தவ‌ர்க‌ளே குண்டு வைத்ததும், அந்த பழியை இஸ்லாமிய ச‌கோத‌ர‌ர்களின் மீது சும‌த்தவே இந்த கேவலமான‌ செயலில் அவர்கள் ஈடுபட்டதும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து, "தீவிர‌வாதிக‌ளின் அடுத்த‌ குறி தென்காசிதான்" என்று இந்து முன்ன‌னி இராம‌.கோபால‌ன் சில‌ நாட்க‌ளுக்கு முன்பு கூறிய‌ நிலையில் இந்த‌ குண்டுவெடிப்பு அவ‌ரை க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்க‌ளால் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்டிருப்ப‌தும் இங்கு குறிப்பிட‌த்தக்கது.,

தி.மு.க‌வின் ஆட்சியில் வ‌ன்முறை பெருத்துவிட்ட‌து என்று உட‌ம்பின் அத்துனை துவார‌ங்க‌ளின் வெளியாக‌வும் ச‌த்த‌மிட்டுக்கொண்டிருந்த‌ சோவும், ஜெயாவும் ம‌த‌க்க‌ல‌வ‌ர‌த்தை உருவாக்கும் இந்த‌ கேடுகெட்ட‌ வன்முறை கும்ப‌லை க‌ண்டிப்ப‌த‌ற்கு த‌ன‌து ஆசன‌ வாயையாவது திறப்பார்க‌ளா என்றுதான் தெரிய‌வில்லை, அந்த வாயையே அவ‌ர்க‌ள் திற‌ந்தாலும் கூட‌ "இஸ்லாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளை த‌ப்புவிப்ப‌த‌ற்காக‌ இந்த‌ அர‌சு ஹிந்துத்துவ‌வாதிக‌ளின் மீது பொய் வ‌ழ‌க்கு போடுகிற‌து" என்றுதான் அது பேசும். சக்தி வாய்ந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக நேற்று வரை பீதி கிளப்பிய பத்திரிக்கைகள், அந்த சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்தது இந்துத்துவ பயங்கரவாத கும்பல்தான் என்பதை இப்பொழுது எழுதவில்லை. எப்பேர்பட்ட நடுநிலையான பத்திரிக்கைகள்.

எது எப்ப‌டி இருந்தாலும் இனி ஜாக்கிர‌தையாக‌ இருக்க‌வேண்டிய‌து ஆர்.எஸ்.எஸ் இந்துமுன்ன‌னி தொண்ட‌ர்க‌ள்தான், எவ்வளவுதான் அவர்கள் ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ கைதேர்ந்த‌ கொலைகார‌ர்க‌ளாய் இருந்தாலும் கூட‌, அதே போன்று ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ இன்னொரு ஆர்.எஸ்.எஸ் கொலைகாரனாலேயே அவ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் அவர்களூக்கு மிகப்பெரும் சவாலாய் அமைந்திருக்கிறது.

இன்று இஸ்லாமிய‌ர்க‌ள் மீது ப‌ழி போடுவ‌த‌ற்காக‌ த‌ங்க‌ள‌து அலுவ‌ல‌க‌த்திலேயே குண்டு வைத்துக்கொண்ட‌ ஆர்.எஸ்.எஸ்கார‌ர்க‌ள், நாளை இராம‌.கோபா‌ல‌ன் போன்ற ஹிந்து த‌லைவ‌ர்க‌ளின் க‌ட்ட‌ளையால் த‌ங்களது க‌ட்சி ஊழிய‌ர்க‌ளையே போட்டுத‌ள்ளூம் வாய்ப்பு இருக்கிற‌து, ஆக‌வே இந்துத்துவவாதிக‌ளே உஷார், இஸ்லாமிய‌ர்க‌ளின் மீது ப‌ழி போடுவ‌த‌ற்காக‌ நாளை நீங்க‌ளும் ப‌லி க‌டாவாக்க‌ப்ப‌ட‌லாம்.

கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...

எவ்வளவு தூரம் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் "நான் ரொம்ப உத்தமனாக்கும்" என்று அங்கலாய்த்து கொள்வதற்கும், தனது வழக்கமான புரளி மூட்டைகளை திரும்ப திரும்ப‌ அவிழ்த்து விடுவதற்கும் ஒரு அசட்டுத்துணிச்சல் வேண்டும், இந்த அசட்டு துணிச்சலானது பார்ப்பனர்களுக்கு இயல்பிலேயே கை கூடிய ஒன்று.,

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் சட்டமன்றத்திலேயே "நான் ஒரு பாப்பாத்தி" என்று பிரகடனப்படுத்திக் கொண்ட ஜெயலலிதா.,

எப்பொழுதுமே ஆரிய கொழுப்பேறி அதிகார போதையில் திரியும் ஜெயலலிதா இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த போதையின் உச்சத்தில் சட்டமன்றத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியிருக்கிறார், வன்முறை வெறியாட்டத்தின் முழு உருவமான ஜெயலலிதா, கலைஞர் அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பேசியிருப்பதோடு, சபை உறுப்பினர்களின் கேள்விகளூக்கெல்லாம் பதிலளிக்க துப்பில்லாமல் மூத்த உறுப்பினரான “இனமானப் பேராசிரியர்” என்று கலைஞரால் புகழப்பட்ட பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டவர்களை தரக்குறைவாக‌ பேசியதோடு அவர் கொடுத்த பதிலடி தாங்கமுடியாமல் சபையை விட்டு வெளிநடப்பும் செய்திருக்கிறார். டான்சி வ‌ழ‌க்கில் நீதிம‌ன்ற‌த்தால் க‌ண்டிக்க‌ப்ப‌ட்டு, அந்த‌ நில‌த்தை திரும்ப‌ த‌ந்துவிடுவ‌தாக‌ க‌த‌றிய‌ இந்த‌ டான்சி ராணி,தி.மு.க‌ அர‌சு ஊழ‌ல் புகாருக்காக‌ முன்பு டிஸ்மிஸ் செய்யப்ப‌ட்ட‌து என்றும் புளுகியிருக்கிறார்.

இப்ப‌டி தன்னை ப‌ற்றி எழுப்பும் எந்த‌ கேள்விக‌ளுக்கும் ப‌தில‌ளிக்காம‌ல் "நீ ரொம்ப யோக்கியமா? " என்ற‌ பாணியில் எதிரணியின‌ரை அச‌ட்டுத்துணிச்ச‌லோடு தாக்குவ‌து, பொய்மூட்டைக‌ளை அவிழ்த்துவிடுவ‌து என்ப‌தெல்லாம் எல்லோரும் ந‌ன்க‌றிந்த‌ பார்ப்ப‌ன‌ த‌ந்திர‌ங்க‌ள்தான்.

இது அரசியல் களத்தில் ஒரு உதாரணம் என்றால் இணையதளத்தில் இந்த பார்ப்பன‌ அசட்டு துணிச்சலுக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் நமது தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணிதான், கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் அவர் திராவிட இயக்கத்தின் மீது வெறுப்பு கொண்ட பின்னூட்டங்களை ஆதர‌வளித்து அனுமதித்திருப்பதை சென்ற பதிவில் எடுத்துக்காட்டியோடு அவரது தளத்தில் "பழைய அனானி" “அனானி 2” என்ற பெயர்களில் தொடர்ந்து உலாவந்த பார்ப்பன இந்துமதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு அவர் பேராதரவு அளித்தையும் சுட்டிக்காட்டியிருந்தேன், இவ்வளவுக்கு பிறகும் கூட நான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காத தமிழ்மணி கும்பல் “நானும் நாத்திகன்தான், பெரியார் ஆதரவாளன்தான்” என்று கூறி தனது சதிச்செயலுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்று முயன்று முயன்று பார்க்கிறது.

பழைய அனானி என்ற பெயரில் எழுதும் இந்துமத வெறியன் பதிலளிக்க துப்பில்லாமல், “சம்பூகனாக எழுதுவது பதிவர் அசுரனா?” என்று ஆருடம் பார்த்துக் கொண்டிருக்கிறான்,. ஆனால் இதற்கு முன்பு அவனை யார் என்று நண்பர்கள் வினவிய பொழுது அவன் அளித்திருக்கும் பதிலை பாருங்கள்.

“அனானியாய் வந்து ஆட்டம் போடுவது என்பதன் பொருள் எனக்குப் புரியவில்லை. வலையுலகில் எல்லோருமே அனானிகள் தான். கருத்துகள் தான் முக்கியம். மெய்ப்பொருள் காண்போமே.” (பதிவு இங்கே)
கருத்துக்கள்தான் முக்கியம் என்று கூறிய இந்த பழைய அனானிக்கு அவரது கருத்துக்களின் வாயிலாகவே அவர் ஆரிய பார்ப்பன இந்துமத வெறிபிடித்த பாசிசவாதி என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறேன், அதனை மறுக்க வக்கில்லாமல், இது கம்யூனிஸ்ட்கள் வேலை என்று கதற துவங்கி இருக்கிறது தமிழ்மணி கும்பல் .

நான் பதிவர் அசுரன் தான் என்று வதந்தி கிளப்புகிறார்கள், அசுரன் என்ன ஆர்.எஸ்.எஸ்காரனா? அவர் ஏன் சம்பூகனாக எழுத வேண்டும், அவர் பதிவுகளை நான் படித்த வகையில் அவரும் பார்ப்பனீயத்தை எதிர்ப்பதாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார், பெரியாரை ஆதரித்துத்தான் எழுதியிருக்கிறார், பின்பு எதற்காக அவர் சம்பூகனாக எழுத வேண்டும்?

தனது கொள்கைக்கு நேரதிராக 'த‌மிழ்'மணி என்று பெயர்சூட்டிக் கொண்டு வெட்கங்கெட்ட முறையில் சமஸ்கிருதத்திற்கு ஆதரவளித்து எழுதிக் கொண்டிருக்கும் உன்னைப்பற்றி உனது கருத்துக்களிலிருந்தே அம்பலபபடுத்தி எழுதினால் அதனை மறுக்க துப்பில்லாமல் கிசுகிசு பேசும் ஆரிய பார்ப்பன வெறியனே உனது வேலைகள் இனி இங்கு பலிக்காது. வேறு ஏதாவது பெயரில் வரமுடியுமா என்று யோசி, உனது கார்யகர்த்தனிடம் (ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிரணைப்பாளன்) கேட்டுப்பார் அவன் வேறு எப்படி மோதவிட்டு இரத்தம் குடிக்கலாம் என்று புது யோசனை சொல்வான்.

த‌மிழ்ம‌ணி என்ப‌து செல்வ‌ன் என்னும் ப‌திவ‌ர்தான் என்ப‌தாக‌வும், அந்த‌ கும்ப‌லில் அதிய‌மான், அரவிந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் இருப்ப‌தாக‌வும் பின்னூட்ட‌த்தில் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள், ஆதார‌ம் காட்டுகிறார்க‌ள் எனினும் கூட‌ இந்த‌ தொழில்நுட்ப‌ ஆத‌ராங்க‌ளை விட‌வும் த‌மிழ்ம‌ணி த‌ன‌து வாயால் கொடுக்கிற வாக்குமூல‌ங்களை ஆதாரமாக கொண்டே அவர் ஒரு ‘பார்ப்பன’மணி என்பதை நான் அம்பலப்படுத்த‌ விரும்புகிறேன்

சரி அவர் போட்டிருக்கும் சமீபத்திய‌ பதிவினையும் அதில் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அவரது அசட்டுத்துணிச்சலையும் இனி பார்ப்போம்.

//சிவனடியார் ஆறுமுகசாமி - சிதம்பரம் - தமிழ் வழிபாடு போன்றவற்றில் என் கருத்துக்கள் பெரியார்தாசனின் கருத்துக்களை ஓட்டியவை (நான் நாத்திகன். ஆனால், அதனை முன்னிருத்தாதவன்).//

தமிழ்மணி நாத்திகராம், எப்ப‌டிப்ப‌ட்ட‌ நாத்திக‌ர் என்று நினைக்கிறீர்க‌ள், பார்ப‌ன‌ ப‌னியா சிந்த‌னை என்று நாத்திக‌ர்க‌ளும், க‌ம்யூனிஸ்ட்க‌ளும் ஒதுக்கி த‌ள்ளூம் இந்துத்துவ கறை படிந்த‌ சிந்த‌னைக‌ளூக்கு வ‌க்கால‌த்து வாங்கும் நாத்திக‌வாதி, ந‌ம்ப‌வில்லையானால் இதோ த‌மிழ்ம‌ணி கூறியிருப்ப‌தை பாருங்கள்


//இயற்கையோடு இணைந்து வாழக்கோரும் இந்திய சிந்தனையை பார்ப்பனிய பனியா என்று தினந்தோறும் காலைமுதல் மாலைவரை திட்டுவது நீங்கள்தானே//(ப‌திவு இங்கே)

இப்ப‌டி பார்ப்ப‌னீய‌ ப‌னியா சிந்த‌னைக‌ளுக்கு வ‌க்கால‌த்து வாங்கிய‌ த‌மிழ்ணி இன்று த‌ன்னை நாத்திக‌வாதி என்று கூறிக்கொள்கிறார், அத‌னை நாம் ந‌ம்ப‌ வேண்டும், இப்ப‌டி நாம் கூறிய‌ உட‌னே, "இந்திய‌ சிந்த‌னை என்று பொதுவாகத்தானே கூறினேன்" கூறினேன் என்று த‌மிழ்ம‌ணி ச‌ப்பைக‌ட்டு க‌ட்டுவார், இவ‌ர‌து இந்திய‌ சிந்த‌னை எப்ப‌டிப்ப‌ட்ட‌து என்று அறிந்து கொள்ள‌ அவர‌து இன்னொரு ப‌திவிலிருக்கும் ஸ்டேட்ம‌ண்டை க‌வ‌னித்தால் நாம் அதனை தெளிவாக‌ புரிந்து கொள்ள‌ முடியும்


//அதே போல, பண்டைய இந்தியாவின் தொடர்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். இன்று தொடர்பு மொழியாக இருப்பது ஆங்கிலம். இரண்டின் மீது வெறுப்பு கொண்டிருப்பவர்களும்
மக்கள் விரோதிகளே.//(பதிவு இங்கே)

இதுதான் த‌மிழ்ம‌ணியின் இந்திய‌ சிந்த‌னை, அதாவ‌து ச‌ம‌ஸ்கிருத‌த்தாலும் பூணூலாலும் க‌ட்டி இணைக்க‌ப்ப‌ட்ட‌ பார்ப்ப‌ன மேலாதிக்க‌ம் கொண்ட இந்தியாதான், பார்ப்பணமனி புளகாங்கிதம் அடையும் இந்தியா, அந்த பண்(ணா‌)டைய‌ இந்தியாவில் தோன்றிய‌ பண்(ணா)டை சிந்த‌னைக‌ளான‌ வேத‌ம், ஸ்மிருதி போன்ற‌வைக‌ளை, நாத்திக‌வாதிக‌ளான‌ பெரியாரிய‌வாதிக‌ளும், மார்க்சிய‌வாதிக‌ளும் ம‌றுக்கின்ற‌ கார‌ண‌த்தால்தான் அவ‌ர்க‌ள் மீது சீற்ற‌ம் கொள்கிறார், த‌மிழ்ம‌ணி(எ)பார்ப்ப‌ன‌ம‌ணி.

சமஸ்கிருதத்தால் இணைக்கப்பட்ட இந்தியாவை கனவு காண்கிறாரே தமிழ்மணி இது எந்த சிந்தனையின் தொடர்ச்சி என நினைக்கிறீர்கள், இதோ,


இந்த எல்லா மொழிகளுக்கும்(தமிழ், வங்காளம், மராட்டி, பஞ்சாபி
போன்றவை) ஜீவ ஊற்றாக உணர்வூட்டி வருவது மொழிகளுக்கெல்லாம் அரசி போன்ற தேவமொழியான
சம்ஸ்கிருதம் ஆகும். அதனுடைய பொருட்செறிவினாலும், ஆன்மீக தொடர்பினாலும், அதுவே நம் நாட்டு மக்கள் கருத்தை வெளிப்படுத்த உதவும் பொதுமொழியாக இருக்கும் தகுதியுடையது
-(ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை' 2 பாகம் பக்.49)
நமது தேசிய மொழி பிரச்சணைக்கு வழி காணும் முறையில் சமஸ்கிருதம் அந்த இடத்தை பெறும்வரை, வசதிக்காக ஹிந்தி மொழிக்கு நாம் முன்னுரிமை தர வேண்டியிருக்கும்
-(ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை' 2 பாகம் பக்.51)

ந‌ம‌து அன்பிற்குரிய‌ த‌மிழ்ம‌ணி(எ)பார்ப்ப‌ன‌மணி, இந்தியாவின் தொட‌ர்பு மொழி ச‌ம‌ஸ்கிருதம்தான் என்பதாக‌ வ‌ரிந்துக‌ட்டி வாதாடுவ‌த‌ன் இர‌க‌சிய‌ம் இப்பொழுது புரிகிறதா நண்பர்களே?

ச‌மஸ்கிருத‌த்தாலும், இந்தியாலும் இணைக்க‌ப்ப‌ட்ட‌ இந்த இந்துராஷ்டிர‌ம் ப‌ற்றி அய்யா பெரியாரின் க‌ருத்தை பாருங்க‌ள்


“தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது.”

சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு



இப்பொழுது புரிந்திருக்குமே தமிழ்மணி எப்படிப்பட்ட நாத்திகவாதி என்று, நவீண வகை ஜனநாயகவாதிகள் போல, இவர் இந்து ராஷ்டிரம் பேசுகின்ற நவீண வகை நாத்திகவாதி.

அடுத்து அவ‌ர் கூறுகிறார் சித‌ம்ப‌ர‌ம் விவாக‌ரத்தில் பெரியார்தாச‌னின் க‌ருத்துதான் அவ‌ருடைய‌ க‌ருத்தாம்.,

அட‌ அட‌ இப்பொழுது க‌ம்யூனிஸ்ட்க‌ளை திட்டுவ‌த‌ற்காக‌ பெரியார்தாச‌னோடு போய் ஒட்டிக்கொள்ளும் த‌மிழ்ம‌ணி சென்ற ப‌திவில் அவ‌ரை ப‌ற்றி எழுதிய‌ வ‌ரியை பாருங்க‌ளேன்.

//பெரியார்தாசன் சிவனை கேவலமாக பேசியிருக்கிறார். மருதையன் நாத்திகர். சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையிலேயேகடவுள் இல்லை, கடவுளை பரப்பியன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி போன்றவற்றை கூறப்போகிறீர்களா? சிவனெல்லாம் ஒரு கடவுளா என்பவற்றை பேசுவீர்களா?//
(பதிவு இங்கே)

இப்ப‌டியெல்லாம் சென்ற‌ ப‌திவில் நாத்திக‌ர்க‌ளை நோக்கி கேள்வி எழுப்பிவிட்டு, பெரியார்தாச‌ன் சிவ‌னை நோக்கி கேவ‌ல‌மாக‌ பேசினாரே என்று சின‌ந்து பேசிவிட்டு, இன்று "பெரியார்தாச‌னின் நிலைப்பாடும் என‌து நிலைபாடும் ஒன்றுதான், நானும் நாத்திக‌ன்தான்" என்று ஒருவ‌ர் பேசுவாரேயானால் அவ‌ர் எவ்வ‌ள‌வு பெரிய‌ அயோக்கிய‌னாக‌ இருக்க‌வேண்டும், ந‌ம்மை எவ்வ‌ள‌வு தூர‌த்திற்கு முட்டாள் என்று அவ‌ர் நினைக்க‌ வேண்டும். நான் கூறிய‌ பார்ப்ப‌னீய‌ அச‌ட்டுத்துணிச்ச‌ல் த‌மிழ்ம‌ணியிட‌ம் எவ்வ‌ள‌வு இருக்கிற‌து பார்த்தீர்க‌ளா, ந‌ண்ப‌ர்க‌ளே?

//ஆனால், இது சம்பந்தமாக மகஇக என்ற கம்யூனிஸ்டு இயக்கம் இதனை உபயோகித்து ஆள் சேர்க்க இறங்கியபோது, இதன் அபாயத்தை உணர்த்தும் விதமாக பதிவுகள் எழுதினேன். கம்யூனிஸ எதிர்ப்பை வழக்கம்போல, பார்ப்பன ஆதரவு, திராவிட எதிர்ப்பு என்று திரிக்கும் வேலைகள் நடந்துகொண்டிருப்பது எனக்கு அதிர்ச்சி இல்லை. இதனை எதிர்பார்த்தேன்.//

என்ன‌ அபாய‌த்தை, உண‌ர்த்தும் வித‌மாக‌ ப‌திவுக‌ள் எழுதினீர்க‌ள், த‌மிழ் க‌ருவறையில் நுழைந்துவிடும் அபாய‌த்தை உண‌ர்த்துவ‌தாக‌வா, ஏதோ நீங்க‌ள் இந்த‌ ப‌திவு எழுதிய‌ பிற‌கு அந்த‌ ஒரு ப‌திவை வைத்து உங்க‌ளை 'திராவிட‌ எதிர்ப்பு' 'பார்ப்ப‌ன‌ ஆதரவு' ப‌திவ‌ர் என்று கூறிய‌து போல‌ பேசுகிறீர்க‌ளே த‌மிழ்மணி, உங்க‌ள் ப‌திவில் ப‌ல‌ கால‌மாக‌ ப‌ழைய‌ அனானி என்ற‌ பெய‌ரில் "திராவிட‌ இன‌வெறி அர‌சிய‌ல்" என்றும் "கேவ‌ல‌மான‌ திராவிட‌ அர‌சிய‌ல்" என்றும் திராவிட‌ எதிர்ப்பு பின்னூட்ட‌ங்க‌ள் போட்டு வந்திருக்கிறார், நேற்றைய‌ இந்த‌ ப‌திவிலே அதனை நான் எடுத்துக்காட்டியிருக்கிறேன். இப்ப‌டி போட‌ப்ப‌ட்ட‌ பின்னூட்ட‌திலிருக்கும் இந்த‌ க‌ருத்துக்க‌ளுக்கு ஒருமுறை கூட‌ நீங்க‌ள் எந்த‌ ஆட்சேப‌னையும் தெரிவிக்க‌வில்லையே அத‌ன் கார‌ண‌ம் என்ன‌ த‌மிழ்ம‌ணி?

//மேற்குலகின் ஏஜண்டாக தெரசாவும் கத்தோலிக்க திருச்சபையும், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவ என் ஜிஓக்களும் செயல்படுகின்றனவோ, அதே போல சீனாவின் ரஷியாவின் ஏஜண்டாக இந்தியாவின் கம்யூனிஸ்டு கட்சிகளும் அவர்களின் என் ஜி ஓக்களும் செயல்படுகின்றன என்பதையும் நேரடியாக எழுதியுள்ளீர்களா? படிக்க விரும்புகிறேன்.
என்னைப்பொருத்தமட்டில், எவ்வாறு தெரசாவின் புனித பிம்பம் மேற்குலகால் இந்தியாவில் கட்டமைக்கப்படுகிறதோ அதே போல, ரஷியர்களாலும் சீனர்களாலும், இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள், அறிவுஜீவிகள் புனித பிம்பமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய கருத்தாக்க நாணயத்தின் இரண்டு பக்கங்களே இவர்கள்.
ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. மேற்குலகின் புனித பிம்பங்கள் உருவாக்கத்தின் இடையில் ஒரு சிலருக்கு ஆறுதலோ, உணவோ பால்பவுடரோ, தற்காலிக மன ஆறுதலோ கிடைக்கிறது.// (பதிவு இங்கே)


இப்ப‌டி ஒரு ப‌திவிலே நீங்க‌ள் எழுதியிருக்கிறீர்க‌ள், அதாவ‌து மேற்குலக மதமான‌ கிறிஸ்த‌வ‌த்தின் ஏஜென்டாக‌ தெர‌சாவும், க‌த்தோலிக்க‌ திருச்ச‌பையும், கிறிஸ்த‌வ‌ என்.ஜி.ஓக்க‌ளூம் செய‌ல்ப‌டுவ‌தாக‌ குறிப்பிட்டு அவ‌ர்க‌ளோடு க‌ம்யூனிஸ்ட்க‌ளையும் ஒப்பிட்டு, இவ‌ர்க‌ள் இருவ‌ருமே ஏகாதிப‌த்திய(அதாவ‌து கிறிஸ்த‌வ‌ ஏகாதிப‌த்திய‌ம்) க‌ருத்தாக்க‌த்தின் இர‌ண்டு நாண‌ய‌ங்க‌ள் என்று முடிவுக்கு வ‌ந்து

//மேற்குலகின் புனித பிம்பங்கள் உருவாக்கத்தின் இடையில் ஒரு சிலருக்கு ஆறுதலோ, உணவோ பால்பவுடரோ, தற்காலிக மன ஆறுதலோ கிடைக்கிறது.//

இப்ப‌டி குறிப்பிடுகிறீர்க‌ள், என‌க்கு தெரிந்த‌ வ‌ரையில் 'கிருத்துவ‌ ஏகாதிப‌த்திய‌ம்' என்ற‌ க‌ருத்தாக்க‌மே இந்துத்துவ‌ வெறியர்களுடையது, அதை விட 'பால்பவுடருக்காக' மதம் மாறுகிறார்கள் என்று மதம்மாறுகின்ற மக்களை பார்த்து இழிவுபடுத்துவதும், அலறுவதும், அச்சுஅசல் இந்துமதவெறியர்களுக்கே உரிய கருத்து, இப்ப‌டி ஒரு இந்துத்துவ‌ க‌ருத்தை வைத்திருக்கும் பார்ப்ப‌ன‌ வெறியரான‌ நீங்க‌ள் "நான் திராவிட‌ எதிர்ப்பாள‌ன் அல்ல" என்று கூறினால் எவ‌னும் வாயால் சிரிக்க‌மாட்டான் தமிழ்மணி.

//சமீபகாலமாக ஒரு டிரண்ட் நட்ந்துவந்துகொண்டிருக்கிறது. அது திராவிட/பார்ப்பன எதிர்ப்பு பதிவர்களை குறி வைத்து அவர்களை கம்யூனிஸ்டு கட்சிக்குள் உள்ளிழுக்கும் விதமாக கம்யூனிஸ்டுகள் (ஒரே ஆளா, அல்லது கும்பலா என்று தெரியாது) பல பதிவுகளை துவங்கி ஒரே கட்டுரையை பல்வேறு இடங்களில் பதிந்தும் ஒரு திட்டமிட்ட அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தனர்.//

ப‌ல‌ கால‌மாக‌வே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு டிர‌ண்ட் ந‌ட‌ந்துவ‌ருவ‌தாக‌ எங்க‌ள‌து ந‌ண்ப‌ர்க‌ளும் தோழ‌ர்க‌ளும் கூறுகிறார்க‌ள் த‌மிழ்ம‌ணி, அதாவ‌து இஸ்லாமிய‌ர்க‌ளின் பெய‌ரில் ஆபாச‌ ப‌திவு தொட‌ங்கி எழுதுவ‌து, ந‌டுநிலை நாட‌க‌மாடி சிண்டு முடிவ‌து, நேற்று கூட‌ எங்க‌ள‌து அ.மு.க‌ ந‌ண்ப‌ர்க‌ள் இது போன்ற பார்ப்ப‌ன‌ ச‌தி ஒன்றை அம்ப‌ல‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள், இஸ்லாமிய‌ர் பெய‌ரிலும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் பெய‌ரிலும் ப‌திவுக‌ளை தொட‌ங்கி இருவ‌ரையும் மோத‌விடும் ச‌தியை க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள்,க‌ம்யூனிஸ்ட்க‌ளையும் ம‌ற்ற‌ முற்போக்காள‌ர்க‌ளையும் மோத‌விடும் ச‌தியை நீங்க‌ள் செய்து கொண்டிருக்கிறீர்க‌ள், இதெல்லாம் எத‌ற்காக‌ பார்ப்ப‌ன‌ர்க‌ள் செய்கிறார்கள், த‌ங்க‌ளுடைய‌ மேலாதிக்க‌ம் கொண்ட‌ இந்த‌ ச‌மூக‌த்தை க‌ம்யூனிஸ்ட்க‌ளோ பெரியாரிய‌வாதிக‌ளோ மாற்றிவிட‌க்கூடாது என்ப‌துதான் அவ‌ர்க‌ள‌து நோக்க‌மாக‌ இருக்கிற‌து. இதற்காக‌ ப‌ல‌ர் சேர்ந்து ஒரு ப‌திவை எழுதுவ‌து, ப‌ல‌ ப‌திவை ஒருவ‌ர் எழுதுவ‌து என்று பார்ப்ப‌ன‌ர்க‌ள் ப‌ல்வேறு திட்ட‌மிட்ட‌ அனுகுமுறையை கையாண்டு வ‌ருகிறார்க‌ள்.

//இதன் விளைவுகள் நீண்டவை.//

ஆனால் பார்ப்ப‌ன‌ர்க‌ள் கையாளும் இந்த‌ கேவ‌லமான‌ உத்தியின் விளைவுக‌ள் எப்பொழுதுமே புஸ்வாண‌ம்தான் என்று ந‌ண்ப‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள், பார்ப்ப‌ன‌ர்க‌ள் இப்ப‌டியெல்லாம் ச‌திச்செய‌லிலே இற‌ங்கி ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் கையும் க‌ள‌வுமாக‌ வ‌ச‌மாக‌ மாட்டிய‌துதான் த‌மிழ்ம‌ண‌த்தின் க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறாக‌ இருக்கிற‌து.


//கடந்த நூற்றாண்டில் ஒரு பெரிய வீழ்ச்சியை கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டில் சந்தித்தார்கள். அது பற்றி "கலைஞருக்கு பாரத ரத்னா" என்ற பதிவில் சுட்டியிருந்தேன்.

திராவிட முன்னேற்ற கழகமும், பெரியாரிய சிந்தனைகளும், அன்றைக்கு பிரபலமாக இருந்த கம்யூனிஸ்டு சிந்தனைகளுக்கும், காங்கிரஸ் சிந்தனைகளுக்கும் மாற்றாக வந்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இனத்தினரின் எழுச்சியாக வந்தது.//

இப்படியாக ஆரம்பித்து தனது அபத்தங்களை அள்ளித்தெளித்திருக்கிறார் தமிழ்மணி, திராவிட‌ இய‌க்க‌ங்க‌ள் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ளை ஒழித்துக்க‌ட்டுவ‌த‌ற்காக‌வே உருவாக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து போல‌ எழுதியிருக்கிறார், அத‌ற்கு பின்பு வழ‌க்க‌ம் போல‌ க‌ம்யூனிச எதிர்ப்பு ஜ‌ல்லி, இடையே பா.ஜ‌.க‌ ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை கொண்ட‌ இயக்க‌ம் என்ற‌ ப‌ச்சை புளுகு வேறு.,

சரி, அவரது வ‌ழ‌க்க‌மான‌ க‌ம்யூனிச‌ எதிர்ப்பு ஜ‌ல்லிக‌ளை புற‌ந்த‌ள்ளிவிட்டு, ம‌ற்ற‌ விச‌ய‌ங்க‌ளின் மீது ம‌ட்டும் க‌வ‌ன‌ம் செலுத்துவோம், த‌மிழ்ம‌ணி கூறுகிறார் அன்று பிர‌ப‌ல‌மாக‌ இருந்த‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ளுக்கு, பெரியாரிய‌ இய‌க்க‌மும், தி.மு.க‌வும் மாற்றாக‌ இருந்த‌தாம் இது எவ்வ‌ள‌வு பெரிய‌ அப‌த்த‌ம். க‌ம்யூனிஸ கொள்கை த‌மிழ‌க‌த்தில் பிர‌ப‌ல‌மான‌த‌ற்கு காரண‌மே த‌ந்தை பெரியார்தான்,

"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை" தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்து தனது குடியரசு பத்திரிக்கையில் வெளியிட்டவர் தந்தை பெரியார், பகத்சிங்கை வெள்ளை அரசாங்கம் தூக்கிலிட்ட பொழுது, தேசபக்தர்கள் என்று தம்மை கூறிக்கொண்டவர்கள் எல்லாம் அஞ்சி நடுங்கி அதனை கண்டிக்க தயங்கிய நேரத்தில், பகத்சிங் ஒரு பொதுவுடைமைவாதி என்ற காரணத்துக்காகவே தனது குடியரசு பத்திரிக்கையில் ஆதரித்து எழுதியதோடு வெள்ளை அரசாஙக்த்தை கண்டிக்கவும் செய்தார் அய்யா பெரியார்(ஆதாரம்: "நான் நாத்திகன் ஏன்" புத்தகத்தின் பின்னிணைப்பு).,

தனது இறுதி மூச்சுவரை தந்தை பெரியார் கம்யூனிச கொள்கைகளின் மீது ஈர்ப்பு கொண்டவராகவே இருந்தார், அதற்கு எவ்வளவோ ஆதாரங்களை காட்டமுடியும், அவர் கம்யூனிஸ்ட்களோடு கொண்டிருந்த முரண்பாடு என்பது நடைமுறையை அடிப்படையாக கொண்டது, பிறவி இழிவுக்கு எதிராக‌ ஒரு சமுதாய புரட்சிக்காக போராடாமல், ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிப்பதாலோ அரசியல் புரட்சி நடத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதாலோ எதுவும் நடந்துவிடாது என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்தாக இருந்தது ஆனால் இறுதிமூச்சுவரை அவர் கம்யூனிச கொள்கைகளை என்றுமே எதிர்த்ததில்லை.,

இரசியா போய் அங்கு கம்யூனிஸ்ட்களால் ஏற்பட்டிருக்கும் அபாரமான வளர்ச்சியையும், அங்கு நிலவும் சமத்துவ உறவினையும் கண்டுவந்த பெரியார் கம்யூனிசத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், அதற்கு பின்பு அவர் பேசிவந்த மேடைகளில் தீவிர பொதுவுடைமை வாடை வீசியது, இதற்காக அவரை வெள்ளை அரசாங்கம் தண்டிக்க முற்பட்டது. இது பற்றி ஒரு கூட்ட‌த்தில் அவ‌ர் பேசும் பொழுது இப்ப‌டி குறிப்பிட்டார்

"நான் இர‌சியாவுக்கு போவ‌த‌ற்கு முன்பே, பொதுவுடைமைத் த‌த்துவ‌த்தை சுய‌ம‌ரியாதை இய‌க்க‌த்துட‌ன் க‌ல‌ந்து பேசிவ‌ந்த‌து உண்மைதான், ர‌சியாவில் இருந்து வ‌ந்த‌வுட‌ன் அதை இன்னும் தீவிர‌மாக‌ பிர‌ச்சார‌ம் செய்த‌தும் உண்மைதான்."

(23.3.1936 பட்டூக்கோட்டையில் பேசியது)

பிறவி இழிவை ஒழிக்கும் சமூக புரட்சிக்கென பெரியார் செயலாற்றினாலும் கூட‌பொதுவுடைமைக் கொள்கை மீதான‌தனது பற்றையும், பிரச்சாராத்தையும் அவர் எப்பொழுதுமே விட்டுவிடவில்லை, இதன் காரணமாகத்தான், அவர் நடத்திவந்த விடுதலை பத்திரிக்கை, ரசிய புரட்சியின் 50வது ஆண்டு மலரை 1966ல் கொண்டுவந்தது. அதில் எழுதிய‌ த‌ந்தை பெரியார் இப்ப‌டி எழுதினார்.

"இந்நாடு க‌ம்யூனிச‌ நாடாவ‌தே என் விருப்ப‌ம். சோச‌லிச‌ம்,
க‌ம்யூனிச‌ம்,ச‌ம‌த‌ர்ம‌ம் ப‌ர‌வுவ‌த‌ற்காக‌ என்று இர‌சியாவே இங்கு வ‌ந்தாலும் நான் வ‌ர‌வேற்பேன்"

(9.2.1966 விடுத‌லை)

மேற்க‌ண்ட‌ அவ‌ருடைய‌ வாக்கிய‌ம் அவ‌ர் க‌ம்யூனிச‌த்தின் மீது எந்த‌ அள‌வுக்கு ஈர்ப்பு கொண்டிருந்தார் என்ப‌தை நிரூபிக்கிற‌த‌ல்ல‌வா? முத‌லாளித்துவ‌மும் த‌னிம‌னித‌ சொத்துரிமையும் ஒழிய‌ வேண்டுமென்று பெரியார் எழுதியதை பாருங்க‌ள்

"என‌வே, த‌னிம‌னித‌ சொத்துரிமை ஒழிய‌ வேண்டும்,பிற‌ர் உழைப்பில் ப‌டோடோப‌ வாழ்க்கை ந‌ட‌த்துவ‌தும், அதிக‌ப‌டியான‌ பொருள்க‌ளூக்கு அதிப‌தியாய் இருப்ப‌தும் பெருமையான‌ வாழ்க்கை என்று க‌ருதுகிற‌ மூட‌ந‌ம்பிக்கை ஒழிய‌ வேண்டும், இதில் க‌வுர‌வமும், மரியாதையும் இல்லை என்ப‌து தெளிவாக்க‌ப்ப‌ட‌வேண்டும்"

இப்ப‌டி பேசிய‌ பெரியாரைத்தான் க‌ம்யூனிச‌த்திற்கு எதிராக‌வே க‌ட்சி தொட‌ங்கி முத‌லாளிக‌ளுக்கு சேவை செய்த‌து போல‌ புளுகுகிறார் த‌மிழ்மணி.,

பெரியார், புக‌ழ்பெற்ற‌ அவ‌ர‌து இறுதிப் பேருரையிலே பேசிய‌ சொற்கள் அவரது உள்ளக்கிடக்கையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. க‌ம்யூனிச‌ கொள்கை என்ப‌து அனைத்து வ‌கை ஏற்ற‌த்தாழ்வுக‌ளுக்கும் எதிரான‌து, அது சாதிய‌ இழிவையும் க‌ண்டிக்க‌ வேண்டும் என்று உண‌ர்ந்திருந்த‌ த‌ந்தை பெரியார், அத‌னை செய்யாத‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் மீது த‌ன‌து வெறுப்பை வெளிப்ப‌டுத்துகிறார்

"இந்த‌க் க‌ம்யூனிஸ்டே(இந்தியாவிலிருப்பவர்கள்) வ‌ந்துவிட்டான் என்றால், அவ‌ன் காசுக்கு என்றால் என்ன‌ வேணும்னாலும் ப‌ண்ணுவானே, அவன‌ல்ல‌வா ச‌த்த‌ம் போட‌ வேண்டும் என‌க்கு ப‌திலாக‌? எங்க‌ளை த‌விர‌ நாதியில்லை இந்த‌ நாட்டில்"(19.12.1973)

உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக
இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.

(27.4.1953 அன்று, மன்னார்குடி வல்லூரில் ஆற்றிய உரை.)

பெரியார் பார்ப்பன கட்சிகளாக இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் எதிர்த்தாரே ஒழிய கம்யூனிச கொள்கைக‌ளை எதிர்க்க‌வில்லையென்ப‌த‌ற்கு இப்படி நாம் பல ஆதாரங்களை எடுத்துக்காட்ட முடியும்., ஆனால் த‌மிழ்ம‌ணி என்கிற‌ 'பார்ப்ப‌ன‌'ம‌ணி எந்த‌ ஆதாமும் இல்லாம‌ல் பிர‌ப‌ல‌மாக இருந்த‌ க‌ம்யூனிச‌த்திற்கு மாற்றாக‌ பெரியாரிய‌ம் வ‌ந்த‌து என்று கூறுகிறார், ஆனால் உண்மையில் க‌ம்யூனிச‌த்தை இந்த‌ நாட்டில் பிர‌ப‌ல‌ப்ப‌டுத்தியதே த‌ந்தை பெரியார்தான்.,

உண்மைகள் இப்படி இருக்கும் பொழுது தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்கேற்ப பெரியாரிய கொள்கைகளை கம்யூனிசத்திற்கு எதிராக நிறுத்துகிறார். தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணி.

இப்படி அவர் நிறுத்துவதன் நோக்கம் என்ன என்பதை நாம் சொல்லுவதை காட்டிலும், அவரது இந்துத்துவ சகலப்பாடியான கால்கரி சிவா இட்டிருக்கும் பின்னூட்டத்திலிருந்து எடுத்துக்காட்டுவது இங்கு சிறப்பாக இருக்கும்

கால்கரி சிவா said...
எப்பிடியோ கருநாநிதியை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக திருப்பிவிட்டீர்கள்?

ஐயா தாங்கள் சதுரங்கத்தில் புலியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் சரியா?

சரியான அரசியல்வாதி ஐயா தாங்கள்.(பதிவு இங்கே)

த‌மிழ்ம‌ணியின் நோக்க‌த்தை, அவ‌ரது வெற்றியை பாராட்டும்வித‌மாக‌ கால்கரி சிவா அவ‌ர‌து பின்னூட்ட‌த்தில் இப்ப‌டி குறிப்பிட்டிருக்கிறார்.

//நக்ஸ்லைட்டுகளால் எந்த தொழில் முன்னேற்றம் இல்லையோ அதே தொழில் முன்னேற்றத்தை தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அடையும்போது அதனை கெடுக்கும் வேலையையும், அந்த தொழிற்துறையால் படித்து பட்டம் பெற்று வேலையில் இருக்கும் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்து தன்னை வளர்ப்பதையும் கம்யூனிஸ்டு இயக்கங்கள் செய்து வருகின்றன.//

முற்போக்காளர்களை மோதவிட்டு இரத்தம் குடிக்க துடிக்கும் தமிழ்மணியின் கட்டுரை, இப்படி இராம‌கோபாலய்ய‌ர் பிராண்டு நக்ஸலைட்டு பூச்சாண்டி காட்டியபடி தொடர்கிறது.

இப்ப‌டியாக‌ தொடர்ந்து கொண்டே போகும் த‌மிழ்ம‌ணியின் அப‌த்த‌ங்க‌ள், அத்த‌னைக்கும் நாம் ப‌தில‌ளிக்க‌ இற‌ங்கினால் நாளை நம்மால் ப‌திவு போட‌ முடியாது ஏனென்றால் த‌லை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சுற்றி பைத்திய‌ம் பிடித்துவிடும்.,

இத‌ற்கெல்லாம் ப‌திலளித்து த‌மிழ்ம‌ணியை நாம் அம்ப‌ல‌ப்ப‌டுத்துவ‌தை காட்டிலும், ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறியன் ஒருவன் திராவிட இயக்கங்களின் மீது வெறுப்பை கக்கி தமிழ்மணியின் தளத்தில் போட்டிருந்த பின்னூட்டங்களை பற்றியும், அதனை அவர் எந்த ட்சேபனையும் இல்லாமல் பதிவாக எடுத்துப் போட்டு அவனை ஊக்கப்படுத்தியது பற்றியும் இரண்டு நாட்களுக்கு முந்தைய பதிவில் விளக்கமாக எடுத்துக்காட்டியிருக்கிறேன், இந்த பதிவிலேயே தமிழ்மணி வெளியிட்டிருக்கும் இந்துத்துவ கருத்துக்களை எடுத்துக்காட்டியிருக்கிறேன். இதெற்கெல்லாம் அவ‌ர் என்ன‌ ப‌தில‌ளிக்கிறார் என்ப‌தை கேட்டாலே போதுமான‌து, ஒரு மிகச்சிற‌ந்த‌ குட்டிக்க‌ர‌ண‌ காட்சியை நாம் காண‌ முடியும்., அல்ல‌து க‌ம்யூனிச‌ ச‌தி என்ற‌ அல‌ற‌லை கேட்க‌ முடியும்.,

குறிப்பு: பாரதீய ஜனதா ஒரு ஜனநாயக கட்சி என்று அவர் தெரிவித்திருக்கும் கருத்திற்கு எனது எதிர்வினையை, கட்டுரையின் நீளம் கருதி பின்பு தனிப்பதிவாக போட முயற்சிக்கிறேன்.