‘தமிழ்மணி’ கும்பலில் RSS இந்துமதவெறி பாசிசவாதிகள் - கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதை.

பார்ப்பன எதிர்ப்பாளர்களே, இந்த பதிவை அவசியம் படியுங்கள், உங்களை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளுங்கள், இந்த சூழ்ச்சிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டு முறியடிக்க ஆயத்தமாகுங்கள்.,

கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதையாகிவிட்டது தமிழ்மணி விவகாரம், கம்யூனிச எதிர்ப்பு பதிவுகள் எழுதுவதாய் காட்டிக்கொண்டு தமிழர்க்கு விரோதமாகவும், முற்போக்காளர்களை மோதவிடும் நோக்கத்தோடும் தமிழ்மணி என்ற பெயரில் ஒருவர் எழுதி வந்தார்.

இவர் ‘தமிழ்மணி’ என்று பெயர் சூட்டிக்கொண்டிருப்பது நயவஞ்சகமானது என்றும், தமிழ்மணி என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்து கொண்டு ஜனநாயக விரோத ஆரிய பார்ப்பன ஆதரவு கருத்துக்களையும், தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களையுமே அவர் எழுதி வருகிறார் என்பதையும் நமது கடந்த பதிவுகள் அம்பலப்படுத்தின‌, அதனை தமிழ்மணி வெளிப்படுத்தியிருந்த கருத்துக்களின் வாயிலாகவே நாம் செய்திருந்தோம்.

நாம் கேட்டிருந்த கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கிறேன் என்று தனது பார்ப்பன முகத்தை மீண்டும் வெளிப்படுத்திக் கொண்ட தமிழ்மணி, இதுவரையிலும் நாம் எழுப்பிய விமர்சணங்களுக்கு, குற்றச்சாட்டுகளுக்கு மறுப்போ, விளக்கங்களோ தெரிவிக்காமல் அமைதி காக்கிறார்.(இப்படி எழுதிய பிறகு உங்கள் பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன் என்று கூறி ஏதாவது எழுதக்கூடும்)

இந்த நிலையில் தமிழ்மணியை அம்பலப்படுத்தியதற்காக பல நண்பர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார்கள், சிலர் தனிமடல் வாயிலாக “தாங்களும் தமிழ்மணி என்ற பெயரில் வந்த பதிவுகளை கவனித்து வந்ததாகவும்”, “அது உள்நோக்கம் கொண்டது என கருதி வந்ததாகவும்” கூறியிருப்பதோடு, தமிழ்மணி தளத்தை 2க்கு மேற்பட்டவர்களால் நிர்வகிக்கிறார்கள் என்றும், அந்த கும்பல் ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறி பாசிஸ்ட்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள்.,

தமிழர் வழிபாட்டுரிமையை மறுக்கும் தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் பார்ப்பன பதிவரை அம்பலப்படுத்த போய், இப்போது அந்த வலைப்பூவை தனியொரு நபரால் நிர்வகிக்கப்படவில்லை என்றும் அதை நிர்வகிக்கும் கும்பல் ஆரிய இந்துமத வெறி ஆர்.எஸ்.எஸ் கும்ப லோடு கூட்டனி போட்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதும் இப்போது வெளியாக துவங்கியிருக்கிறது. அதற்கான ஆதாரங்களை தனிமடலில் நண்பர்கள் தெரிவித்திருக்கிறார்கள், ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறி பாசிஸ்ட் என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது தமிழ்மணி பதிவில் “பழைய அனானி” என்ற பெயரில் தொடர்ந்து பின்னூடமிட்டு வரும் நபரைத்தான், “யாரோ பின்னூட்டமிடுவதற்கு நானா பொறுப்பு” என்று தமிழ்மணி கூறிவிடமுடியாது, இன்றுவரை தமிழ்மணியின் அனைத்து பதிவுகளிலும் இந்த பழைய அனானி என்பவர் பின்னூட்டமிட்டு வந்திருப்பதோடு, தமிழ்மணியை யாராவது கேள்வி எழுப்பினால் தானாகவே முன்வந்து பதிலளிக்கும் அளவிற்கு அவரோடு கருத்தில் ஒன்றிப்போனவர், தமிழ்மணி யும் அவருக்கு தனது தார்மீக ஆதரவை தெரிவித்து வந்திருக்கிறார்.

பழைய அனானி என்ற பெயரில் எழுதும் இந்துமத வெறியன் சிறுபாண்மை மக்கள் மீது வெறுப்பையும், இந்துமதவெறியையும் நுட்பமாக வெளிப்படுத்தி வந்த ஆதாரங்களை நண்பர்கள் கொடுத்திருக்கிறார்கள், பழைய அனானி என்ற பெயரில் எழுதுபவர் தமிழ்மணத்திலிருந்து விரட்டப்பட்ட ஒரு ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியன் என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள்., அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை எனினும் 'பழைய அனானி' என்பவர் தமிழ்மணி தளத்தில் வெளியிட்டிருக்கும் கருத்துக்களை பார்த்தால் நமக்கும் அது உண்மைதானோ என்ற‌ சந்தேகம் எழுகிறது. இதோ தமிழ்மணி தளத்தில் பழைய அனானி என்ற பெயரில் அந்த இந்துமதவெறியன் உதிர்த்திருக்கும் கருத்துக்கள். இன்று நடுநிலைவாதி போலவும், பெரியாரிய ஆதரவாளர் போலவும் நாடகமாடும் தமிழ்மணி, இந்த கருத்துக்களையெல்லாம் எந்த ஆட்சேபனையும் இல்லாமல் பதிந்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.


ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியான மிகச்சாதாரண நரேந்திர மோடியை பெரும் கொலைபாதகன் என்று வருணித்துக் கவிதை எழுதி ஏதோ சில நூறு மக்களின் சாவு தம்மை உருக்குவது போலப் பகல் வேடம் போடும் இந்தத் தியாகு.,.(பதிவு இங்கே)

இந்த அளவு கேவலமான போலித்தனம் இனவெறி அரசியல் இயக்கமான திராவிட இயக்கத்தால்தான் சாத்தியம். ஆனல் தியாகுவின் கூட்டம் அந்த அரசியலிலும் ஊறித்தானிருக்கிறது. அதனால் நான் மேலே சொல்லும் எதுவும் இந்தக் கூட்டத்தின் அமானுஷ்ய மனதை, காலனியாதிக்கத்துக்கு கிருத்தவ ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்ட சிந்தனையைத் தொடாது என்று எனக்குத் தெரியும்..(பதிவு இங்கே)

அந்த வகைச் சிந்தனை மாவோயிசக் கொலைகாரர்களுக்கும், ஸ்டாலினியப்
பாதகர்களுக்கும், அருகே தமிழகத்தில் இனவெறித் திராவிட அரசியல்வாதிகளுக்கும்தான் உரித்தானது. நவீன ஜனநாயக வாதிகளுக்கு இந்த வகைச் சிந்தனை வெறுப்பூட்டுவது..(பதிவு இங்கே)


இஸ்லாமிய பயங்கர வாதத்திற்கு மக்கள் பலியாகும் போதெல்லாம், அவர்களை இஸ்லாமிய பெயர்தாங்கிகள் என்று கூறும் இஸ்லாமிய மேதாவிகள் மாதிரி நீங்கள் போல் போட்டும், வடகொரியாவும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்று சொல்கிறீர்கள்.(பதிவு இங்கே)

உங்களுக்கும் கிறுஸ்துவத்திற்கும் உள்ள ஒற்றுமையை. போப்
ஆசியாவில் கிறுஸ்துவிற்காக அறுவடை செய்ய வேண்டும் என்கிறார். நீங்கள் களை எடுத்தோம் என்கிறீர்கள்.

தமிழ்மணி கும்பல் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதிகள் பார்த்தீர்களா, நவீண வகை ஜனநாயகவாதிகள், அதனால்தான் நாம் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், ஏழை பணக்காரன் என்றிருக்கும் ஏற்றத் தாழ்வுகளையும் கேள்விகேட்பது அவர்களுக்கு வெறுப்பூட்டுவதாய் இருக்கிறது, அதனால்தான் இன இழிவை ஒழிப்பதற்காக குரல் கொடுக்கும் திராவிட அரசியலை இனவாத அரசியல் என்று கூறுகிறது, இந்த‌ பார்ப்ப‌ன‌ம‌ணி கும்ப‌ல்.

இப்படி திராவிட இயக்கத்தின் மீதும், திராவிட அரசியலின் மீதும் பழைய அனானி என்ற பெயரில் வெறுப்பு கக்கபட்ட பதிவுகளை அதன் அருகே இருக்கும் சுட்டிகளை தட்டி இன்றே பார்த்துவிடுங்கள் நாளை அதனை அவர் அழித்துவிடவும்கூடும்., தமிழ்மணி இன்று திராவிட அரசியலுக்கும் தமிழர்களுக்கு எதிரி இல்லை என்பது போல் வேடமிடுகிறாரே, அன்று ஏன் இது போன்ற விஷம கருத்துக்களை கண்டிக்காமல் அனுமதித்தார் என்று நாம் எழுப்பும் கேள்வியில் நியாயம் இருக்கிறதா இல்லையா?

தியாகு என்ற பதிவரோடு தமிழ்மணி ஒரு விவாதத்தை நடத்தியிருக்கிறார், பொதுவாக பதிவர் வட்டாரத்தில் தியாகு என்பவர் ஒரு ம.க.இ.க என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளாராக அறியப்படுவதாக தனிமடலில் அந்த நண்பர் கூறியிருக்கிறார்.

தியாகுவோடு நடந்த இந்த விவாதத்தின் பொழுது பழைய அனானி கூறியிருக்கும் கருத்தை பாருங்கள், "ந‌ரேந்திர‌ மோடி மிக‌ச் சாத‌ர‌ண‌மான‌வ‌ராம்" குஜ‌ராத்தில் ந‌ட‌ந்த‌து சில‌ நூறு ம‌க்க‌ளின் சாவாம், தியாகு என்ற கம்யூனிச பதிவரின் மீது கொண்ட கோபத்தோடு நிற்கவில்லை பழைய அனானி என்ற ஆர்.எஸ்.எஸ் வெறியன், பெரியாரிய இயக்கத்தின் மீதும் தனது நஞ்சை கக்குகிறான் பாருங்கள்

இந்த அளவு கேவலமான போலித்தனம் இனவெறி அரசியல் இயக்கமான திராவிட இயக்கத்தால்தான் சாத்தியம். ஆனல் தியாகுவின் கூட்டம் அந்த அரசியலிலும் ஊறித்தானிருக்கிறது.

திராவிட‌ இய‌க்க‌ம் ஒரு 'இன‌வெறி அர‌சிய‌ல் இய‌க்க‌ம்' என்று கூறியிருக்கிறான் இந்த‌ பழைய‌ அனானி, மேலும் தியாகு சார்ந்திருக்கும் இய‌க்க‌ம் அந்த‌ அர‌சிய‌லிலும் அதாவது திராவிட இயக்கத்தின் அரசியலிலும் ஊறித்தானிருக்கிறதாம். இந்த‌ மடலை ந‌ம‌க்கு அனுப்பியிருக்கும் தோழ‌ர், இந்த‌ க‌ருத்தினை குறிப்பாக‌ சுட்டிக்காட்டி இப்ப‌டி ப‌ல‌ நாட்க‌ளுக்கு முன்பிலிருந்தே கூறிவ‌ருவ‌து அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் என்ற‌ இந்தும‌த‌வெறிய‌ன்தான் என்ப‌தை அவ‌ன‌து வார்த்தைக‌ளிலிருந்தே எடுத்துக்காட்டியிருக்கிறார், இதோ அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் என்ற‌ ஆர்.எஸ்.எஸ் வெறிய‌ன் எழுதிய‌ வ‌ரிக‌ள்

நாசி இனவாத கோட்பாடும் மார்க்சிய வெறுப்பியலும் கலந்த விசித்திர பிறவியான மகஇக கும்பல் 'பார்ப்பனீய நவகாலனீய சதி' என முழங்கும்..(பதிவு இங்கே)

ஆக‌ பழைய‌ அனானி என்ற‌ பெய‌ரில் அங்கு எழுதி வ‌ருவ‌து அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் என்ற‌ இந்தும‌த‌ வெறிய‌ன்தான் என்ற‌ நாம் ச‌ந்தேக‌ம் கொள்வ‌த‌ற்கு அழுத்த‌மான‌ ஆதார‌மாக‌ இது அமைந்திருக்கிற‌து. அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் இந்தும‌த‌வெறி க‌ருத்துக்க‌ளை த‌மிழ்ம‌ண‌த்தில் எழுதிவ‌ந்த‌தோடு, அய்யா பெரியாரையும் ‘சிறியோன்' என்று கூறி கேவ‌ல‌ப்ப‌டுத்தி வ‌ந்த‌தாக‌வும், பின்பு ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ள் விவாத‌த்திற்கு அழைத்த‌ பொழுது, த‌மிழ்மண நிர்வாகத்தோடு சண்டையிட்டு ஓடிய‌தாக‌வும் ம‌ட‌ல் அனுப்பியிருக்கும் ந‌ண்ப‌ர் குறிப்பிடுகிறார்.

திர‌விட‌ இய‌க்க‌த்தோடு ம‌ட்டும் நிறுத்தாது ஒரு இந்தும‌த‌வெறி பாசிச‌வாதிக்கே உரிய‌ ப‌ண்போடு சிறுபாண்மை ம‌த‌ங்களின் மீதும், ம‌க்க‌ள் மீதும் வெறுப்பை கக்கியிருக்கிறான் இந்த‌ 'ப‌ழைய‌ அனானி' 'அனானி 2' ஆகிய‌ பெய‌ர்க‌ளில் எழுதிய‌ ஆர்.எஸ்.எஸ் வெறிய‌ன்(suspected அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன்). இப்ப‌டி எழுதிய‌ க‌ருத்துக்க‌ளுக்கெல்லாம் எந்த‌ ஆட்சேப‌னையும் தெரிவிக்காமல் பேராதரவோடு பதிப்பித்துவிட்டு இப்பொழுது வந்து நடுநிலை நாடகம் ஆடுகிறார் தமிழ்மணி (எ) 'பார்ப்பன'மணி.

இன்னும் பல ஆதாரங்களை நமக்கு தனிமடலில் நண்பர்கள் தெரிவித்திருந்தாலும் தமிழ்மணி கும்பலை பதம் பார்க்க இந்த பாசிச கருத்துக்களே போதுமானது என்று இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.,

இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக் கொண்டு போய் காந்தியாரை சுட்டு தள்ளிய ஆர்.எஸ்.எஸ் இந்துமத வெறி கும்பல், தமிழ்மணி என்ற பெயரில் தமிழ்மணத்தில் தமிழர்களுக்கு எதிராக இயங்க எத்தனிப்பதாய் தெரிகிறது, எச்சரிக்கை தமிழர்களே!!

முற்போக்காளர்களுக்கு இடையிலிருக்கும் முரண்பாடுகளை பயன்படுத்திக்கொண்டு அதனை பெரிதுபடுத்தி மோதவிடுவதையே தனது திட்டமாக கொண்டு செயல்பட்டிருக்கிறது பார்ப்பன தமிழ்மணி கும்பல், மருத்துவர் இராமதாசுக்கு ஆதரவாக பதிவிட்டதோடு, இராமதாசை ஜனநாயகவாதி அதனால் கம்யூனிஸ்ட்கள் திட்டுகிறார்கள் என்று எழுதியதையும், கலைஞர் கம்யூனிஸ்ட்களை சரியாக ஒடுக்கினார் அதனால் பாராட்டுக்கள் என்று எழுதியதையும், மருதையன் பார்ப்பனர் என்று பின்னூட்டத்தில் உரையாடிக்கொண்டதையும் இந்த பின்னனியிலேயே நாம் பார்க்க முடிகிறது.

வலைப்பூக்களில் கிடைக்கும் வசதிகளையும், வாய்ப்புகளையும் பார்ப்பன கும்பல் இது போன்ற சதி செயல்களுக்கு பயன்படுத்துகிறது, இன்று கையும் களவுமாக பிடிபட்டிருக்கும் இந்த கும்பல் நாளை வேறு ஏதாவது பெயர்களில் வரலாம், பார்ப்பன எதிர்ப்பாளர்களை, முற்போக்காளர்களை மோதவிட்டு ஆதாயம் அடைய முயலலாம், ஏன் அந்த முயற்சியில் வெற்றியும் பெறலாம், இதனை தடுக்க வேண்டுமானால் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் தங்களது தனிபட்ட வேறுபாடுகளை, கட்சி வேறுபாடுகளை கடந்து பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்ற அம்சத்தின் அடிப்படையில் இணைந்து ஒரு வலைபதிவில் தொடர்ந்து எழுதி பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட‌ யோசனை. இது குறித்து பார்ப்பன எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நாம் மேலும் உரையாடலாம்.

தமிழ்மணி (எ) 'இரட்டை நாக்கு அம்பி'யின் பொய்கள், புரட்டுகள்....

தமிழ் வழிபாட்டுரிமையை வலியுறுத்தி சிதம்பரத்தில் நடத்த பொதுக்கூட்ட அழைப்பிதழை போட்டு தமிழ்மணி சில கேள்விகளை எழுப்பியிருந்தார், அதிலிருந்த கேள்விகள் பொதுவாக நாத்திகர்களை நோக்கி எழுப்பப்பட்டிருந்ததாலும், தமிழ்மணி எழுதிய அப்பதிவு சமஸ்கிருத ஆதரவு பார்ப்பனீய உள்ளடக்கத்தை கொண்டிருந்ததாலும் அதற்கு பதிலளிக்கும் முகமாக இந்த பதிவினை போட்டு, தமிழ்மணியின் கேள்விகளுக்கு பதிலளித்து அதனை விளக்கியிருந்ததோடு, அடிப்படையான சில கேள்விகளையும் நான் எழுப்பியிருந்தேன்.

ஒரு நாள் முழுக்க அந்த பதிவு தமிழ்மண திரட்டியின் முகப்பிலேயே இருந்தது, காரணம் பதிவர் சதுக்கபூதம் என்பவர் தமிழ்மணிக்கு ஆதரவாக‌ நம்முடன் தொடர்ச்சியாக வாதிட்டார், கிட்டதிட்ட 80 பதிவர்களுக்கு மேல் அப்பொழுதே அந்த பதிவை படித்திருந்தனர், ஆனால் நாம் யாருக்காக விளக்கங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருந்தோமோ அந்த தமிழ்மணி இந்த பதிவினை படிக்கவில்லையாம்

//நண்பர் சம்புகன்,
உங்கள் பதிவுகளை இப்போதுதான் பார்த்தேன். அதனால், பதிவுக்கு பதில் எழுதாததற்கு மன்னிக்கவும். ஆனால், உங்களது இந்த கேள்விகளுக்கான பதில்களையும் ஏற்கெனவே பலர் கேட்டிருக்கின்றனர். அதற்கான பதிலையும் மறுமொழியாக என் பதிவிலேயே எழுதியிருக்கிறேன்
.//


என்று இப்போது கூறியிருக்கிறார். நாமும் நம்புவோமாக. தமிழ்மணி(எ)’பார்ப்பன’மணிக்கு எப்பொழுதுமே தூரப்பார்வைதான் போல தெரிகிறது, சீனா, ரஷ்யா, கம்போடியா, லாவோஸ், கியூபா, கொரியா, அமெரிக்கா என்று எப்பொழுதும் எல்லை கடந்து துலாவிக்கொண்டிருக்கும் தமிழ்மணி உள்ளூர் பிரச்சணைகளை பற்றியோ அதற்கான தீர்வினை பற்றியோ இதுவரை எழுதியதாக தெரியவில்லை மாறாக கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் மட்டுமே இதுவரை ஜல்லியடித்து வந்திருக்கிறார்.,

கம்யூனிஸ்டுகள் சர்வாதிகாரிகள் என்று ஒவ்வொரு பதிவிலும் எழுதி வந்திருக்கிறார், இது போன்ற பதிவுகளுக்கு நேற்று வரை பதிவிட்டு ஆதரவு தெரிவித்து வந்த நண்பர் சதுக்க பூதம் இன்று நமக்கு அனுப்பியிருக்கும் பின்னூட்டத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாக இருக்கும்

சதுக்கபூதம் said,


There seems to be some truth in ur
view.
Hindu-Hindi(sanskrit)-India facism is more dangerous than dictatorship

.

இதன் பொருள் என்னவென்றால் உங்களுடைய(சம்பூகன்) பார்வையில்(தமிழ்மணி விவகாரத்தில்)
உண்மை இருப்பதாக தெரிகிறது, இந்து இந்தி(சமஸ்கிருதம்) இந்திய பாசிசம் ஆகியவை
(கம்யூனிச‌)ச‌ர்வாதிகார‌த்தைகாட்டிலும் அபாய‌க‌ர‌மான‌வை.

சதுக்க பூதம் இப்ப‌டி கூறியிருக்கிறார், த‌மிழ்ம‌ணியின் ப‌திவுக‌ளை தொட‌ர்ந்து ப‌டித்து அத‌ற்கு பின்னூட்ட‌ம் இட்டு வ‌ந்த‌ ஒரு ப‌திவ‌ரே இவ்வாறு கூறியிருப்ப‌தன் மூல‌மாக‌ த‌மிழ்ம‌ணியை(எ) 'பார்ப்பன'மணியை தெளிவாக‌ புரிந்து கொள்ள‌முடிகிற‌த‌ல்ல‌வா, இத‌னை அனைத்து ப‌திவ‌ர்க‌ளும் ப‌டிப்பினையாக‌ எடுத்துக்கொண்டு, இது போன்று முக‌மூடி போட்டுக்கொண்டு வ‌ரும் பார்ப்ப‌ன‌ர்க‌ளிட‌ம் வெகு ஜாக்கிர‌தையாக‌ இருக்க‌ வேண்டும். இன்று தமிழ்மணி என்ற பெயரில் தமிழர்க்கு விரோதமாக எழுதும் இவர்கள், நாளை பெரியார் பெயரில் ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவாகவும் எழுதுவார்கள்.

ச‌ரி இனி த‌மிழ்ம‌ணி போட்டிருக்கும் ப‌தில்க‌ளை பார்ப்போம், இங்கு இன்னொரு விச‌ய‌த்தை குறிப்பிட்டாக‌ வேண்டும், த‌மிழ் வ‌ழிபாட்டுரிமைக்கு எதிராக‌ த‌மிழ்ம‌ணி தெரிவித்த‌ க‌ருத்துக்க‌ளை எடுத்துக்காட்டிய‌த‌ன் பின்னினைப்பாக‌த்தான் எனது கேள்விகளை தமிழ்மணிக்கு தொடுத்திருந்தேன், கேள்விக‌ளுக்கு பதிலளிக்கிறேன் என்ற பெயரில் எழுதியிருக்கும் தமிழ்மணி, அவரது கேள்விகளுக்கு நாம் அளித்த பதில்களையும், மறுப்புகளையும், நாம் தொடுத்த குற்றச்சாட்டுகளையும் புறக்க‌ணித்திருப்ப‌தால், த‌மிழ்ம‌ணி அவ‌ற்றை ஏற்றுக் கொண்டு த‌ன்னை ‘பார்ப்ப‌ன‌’ம‌ணி யாக‌ ஒத்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் நாம் பொருள்கொள்ள‌ வேண்டும்.

இங்கு அவ‌ர‌து கேள்விக‌ளும் ப‌தில்க‌ளும் வெவ்வேறு வ‌ண்ண‌த்தில் கொடுக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தோடு, அவ‌ர‌து ப‌தில்க‌ள் ப‌ற்றிய‌ என‌து குறிப்புக‌ளையும் அத‌ன் கீழே கொடுத்திருக்கிறேன். வாசகர்கள் படித்து 'பார்ப்பன'மணியை அடையாளங் கண்டு கொள்ளவும்.

நமது கேள்வி: அனைத்து த‌மிழ‌ர்க‌ளுக்கும் க‌ருவ‌றையின் உள்ளே சென்று த‌ன‌து மொழியில் வ‌ழிப‌ட‌ உரிமை இருக்கிற‌தா இல்லையா? இல்லை என்றால் ஏன்? இந்த போராட்டம் சரியா தவறா?


தமிழ்மணி பதில் : நிச்சயம் உண்டு. இருக்கவேண்டும்.

நமது குறிப்பு: நிச்ச‌ய‌ம் உரிமை உண்டு, கருவறையின் உள்ளே சென்று தனது மொழியில் வழிபடும் உரிமை இருக்க‌ வேண்டும் என்று ம‌ட்டும் கூறியிருக்கும் த‌மிழ்ம‌ணி இந்த‌ போராட்ட‌ம் ச‌ரியா? த‌வ‌றா? என்ற‌ கேள்விக்கும் ப‌தில‌ளித்திருந்தால் ந‌ன்றாக‌ இருந்திருக்கும் என்ப‌தோடு, த‌மிழ் வ‌ழிபாட்டுரிமையை ம‌றுத்து அராஜகம் செய்துவரும் சிதம்பரம் தீட்சித‌ ரெள‌டிக‌ளை க‌ண்டித்திருந்தால் இன்னும் இன்னும் சிற‌ப்பாக‌ இருந்திருக்கும். என்றோ வரப்போகும் கம்யூனிச வன்முறை குறித்து கவலைப்படும் தமிழ்மணி, இன்று நடந்து கொண்டிருக்கும் தீட்சிதர்களின் வன்முறை குறித்து கவலைப்படவேண்டாமோ?

நமது கேள்வி: சித‌ம்ப‌ர‌ம் கோவிலை ஏன் அரசுடைமையாக்க‌க்கூடாது?


தமிழ்மணி பதில்: அரசுடமை ஆக்குவதும் ஆக்காததும், அந்தந்த அரசாங்கத்தையும் அந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தவர்களையும் பொறுத்தது. எத்தனையோ கோவில்களை அரசுடமையாக்கியிருக்கிறார்கள். சிதம்பரத்தை ஆக்கினால் என்ன?
ஆனால், அரசுடமை என்ற பெயரில் திமுக அரசு செய்வது, செய்யக்கூடியது வேறு, கம்யூனிஸ்டுகளின் அரசுடமை கொள்கை வேறு. இதனை தனி பதிவாக எழுத முயற்சிக்கிறேன்.நமது குறிப்பு: அர‌சுடைமை ஆக்குவ‌தும், ஆக்காத‌தும் அந்தந்த‌ அர‌சாங்க‌த்தையும், தேர்தெடுத்த‌வ‌ர்க‌ளையும் பொறுத்த‌து என்று இப்பொழுது எழுதும் திருவாள‌ர் தமிழ்மணி(எ)’பார்ப்ப‌ன‌’ம‌ணி இர‌ண்டுநாட்க‌ளுக்கு முன்பு என்ன‌ எழுதினார் தெரியுமோ, இதோ பாருங்க‌ள்

//அதென்ன கோவிலை அரசுடைமையாக ஆக்குவது? அது காலம் காலமாக தனியார் கோவில். அதனை அவர்களே கட்டியிருக்கமாட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். எவனோ ராஜா அவர்களிடம் தாரை வார்த்தான் என்றே வைத்துக்கொள்வோம். அதற்கு என்ன இப்போது? இருந்துவிட்டு போகட்டுமே//

"நேற்று தீட்சிதர்களிடமே இருந்துவிட்டு போக‌ட்டுமே" என்று க‌ருத்து சொல்லிவிட்டு இன்று "அது அந்த‌ அர‌சாங்க‌த்தை பொறுத்தது" என்று ப‌தில் சொல்கிறார் இந்த இர‌ட்டை நாக்கு அம்பி. அதோடு "அரசுடைமை என்ற‌ பெய‌ரில் தி.மு.க‌ அர‌சு செய்வ‌து வேறு, க‌ம்யூனிச‌ அர‌சு செய்வ‌து வேறு" என்ற‌ த‌ன‌து வ‌ழ‌க்க‌மான கம்யூனிச எதிரிப்பு ஜ‌ல்லியையும் அவிழ்த்துவிடுகிறார் தமிழ்மணி.,

அய்யா தமிழ்ம‌ணி இப்போது என்ன‌ த‌மிழ்நாட்டில் க‌ம்யூனிச‌ அர‌சாங்க‌மா ந‌ட‌க்கிறது? தி.மு.க‌ அர‌சாங்க‌ம்தானே ந‌ட‌க்கிற‌து, இப்போது அர‌சுடைமையாக்குவ‌தால் என்ன‌ ஆப‌த்து வ‌ந்துவிட‌ப்போகிற‌து, இதுவ‌ரை ப‌ல‌ இல‌ட்ச‌ம் பொருட்க‌ள் அங்கிருக்கும் திருட்டு தீட்சித‌ர்க‌ளால் அபேஸ் செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து மேலும் அந்த‌ தீட்சித‌ர் கும்ப‌ல் இன்றைய‌ நிலையில் பெரிய‌ வ‌ன்முறை கூட்ட‌மாக‌ இருக்கிறது, இப்படியிருக்கும் பொழுது அந்த கோவிலை காப்பாற்ற வேண்டுமானால் அரசுடைமையாக்குவது அவசியமல்லவா? நாளை ப‌க்தி செலுத்துப‌வ‌ர்க‌ள் மீது க‌ம்யூனிஸ்ட்க‌ள் வ‌ன்முறையை ஏவிவிடுவார்க‌ள் என்று க‌வ‌லை கொள்ளும் நீங்க‌ள், ப‌க்தி செலுத்தி இறைவ‌னை பாட‌த்துடிக்கும் சிவனடியார் ஆறுமுக‌சாமி மீது வ‌ன்முறையை ஏவி கையை முறித்‌ததோடு அவரை கொல்லவும் சமயம் பார்த்துக்கொண்டிருக்கும் தீட்சித‌ர் கூட்ட‌த்தை அல்ல‌வா க‌ண்டிக்க‌ வேண்டும், இந்த‌ வ‌ன்முறை கும்ப‌லை நினைத்த‌ல்ல‌வா க‌வ‌லை கொள்ள‌ வேண்டும். அதை விட்டுவிட்டு என்றோ வரப்போகும் கம்யூனிச வன்முறை குறித்துமட்டும் நீங்கள் கவலை கொள்வதன் மர்மம் என்ன?

நமது கேள்வி: க‌ட‌வுள் பெய‌ரை குறிப்பிடாத‌ அந்த‌ மிக‌ச்சில‌ ச‌ங்க‌த்த‌மிழ் பாட‌ல்க‌ள் எத்த‌னை?

தமிழ்மணி பதில் : எனக்கு தெரியாது. ஆனால், திமுகவுக்கு கடவுள் பெயர் வராத தமிழ் பாடல்களே தமிழ் பாடல்கள், மற்றவையெல்லாம் அழிக்கப்படவேண்டும் என்று எந்த விதமான கருத்தும் இல்லை. ஆனால், கம்யூனிஸ்டுகள், வரலாற்றிலேயே கை வைப்பவர்கள். இதெல்லாம் பூர்ஷ்வா கலாச்சாரம் என்று அழித்தொழிப்பில் இறங்கியவர்கள். உதாரணமாக கலைஞர் தஞ்சை பல்கலைக்கழகத்தை தஞ்சை கோவில் பாணியில் வடிவமைத்திருக்கிறார். ஆனால், அது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் பூர்ஷ்வா கலாச்சாரம் என்று இடிக்கப்படும். இதனையே சீன கம்யூனிஸ்டுகளும், போல்போட் கம்யூனிஸ்டுகளும் செய்தார்கள். அதனையே இவர்களும் செய்வார்கள்.


நமது குறிப்பு: தெரியாம‌லேயே "க‌ட‌வுள் பெய‌ர் குறிப்பிடாத‌ ச‌ங்க‌த்த‌மிழ்பாட‌ல்க‌ள் மிக‌ச்சில‌" என்று எவ்வாறு கூறினீர்க‌ள் த‌மிழ்ம‌ணி. க‌ம்யூனிஸ்ட்க‌ள் வ‌ர‌லாற்றிலேயே கைவைப்ப‌வ‌ர்க‌ள் என்று க‌வ‌லை கொள்ளும் நீங்கள், 'அந்த‌ண‌ர் வ‌ர‌லாறு' என்ற‌ பெய‌ரில் புத்த‌க‌ம் எழுதி, ஆரிய‌ர்க‌ள் இந்த‌ நாட்டின் பூர்வ‌குடிக‌ள் என்று வரலாற்றையே இன்று திரித்து எழுதிக்கொண்டிருக்கும் பார்ப்ப‌ன‌ர்க‌ள் கும்ப‌லை க‌ண்டிக்காம‌ல் என்றோ வ‌ந்து க‌ம்யூனிஸ்ட்க‌ள் திருத்திவிடுவார்க‌ள் என்று க‌வ‌லை கொள்வ‌து ஏன்? அந்த‌ பார்ப்ப‌ன‌ கும்ப‌லும், சித‌ம்ப‌ர‌ம் தீட்சித‌ பொறுக்கி கும்ப‌லும் நெருங்கிய‌ தொட‌ர்பு கொண்ட‌வைதானே, NCERT புத்த‌க‌ங்க‌ளில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்ப‌ல் கைவைத்து திருத்தியதைவிட‌வா, க‌ம்யூனிஸ்ட்க‌ள் செய்துவிட‌ப்போகிறார்க‌ள்? இன்றும் இந்துத்துவவாதிகள் ந‌ட‌த்திக்கொண்டிருக்கும் ப‌ள்ளிக்கூட‌ங்க‌ளில் பிள்ளைகளுக்கு அ-என்றால் அயோத்தி, ஆ-என்றால் ஆரிய‌ன் என்றும் கூட சொல்லித்தரப்படுகிறதுதானே. இன்றைய‌ நிலையில் தொட‌ரும் இந்த‌ பாசிச‌ அட்டூழிய‌ங்க‌ளை க‌ண்டிக்க‌ வ‌க்கில்லாத‌ நீங்க‌ள் என்றோ வ‌ர‌ப்போகும் க‌ம்யூனிச‌ம் குறித்து ப‌தைப்ப‌து ஏன்?

மேலும் “கம்யூனிஸ்ட்கள் வந்து த‌ஞ்சை தமிழ் ப‌ல்க‌லை க‌ழ‌கத்தை இடித்துவிடுவார்கள்” என்ற உங்கள் பூச்சாண்டி இருக்கட்டும், முதலில் அந்த பல்கலை கழகம் பெரிய கோவில் போன்று வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்டிருக்கிறது என்று ஆதார‌மில்லாமல் எப்ப‌டி உங்களால் புளுக‌முடிகிறது.,

தமிழறிஞ‌ர்க‌ள் அம‌ருகின்ற‌ இட‌மாத‌லால் அந்த‌ ப‌ல்கலைக‌ழ‌க‌ம் ஒரு அர‌ண்மனையின் தோற்ற‌த்தில் கோட்டை போன்று வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்ட‌து, அதற்கு மைசூர் அர‌ண்மனையை மாதிரியாக‌ எடுத்துக்கொண்டிருக்கிறார்க‌ள், மேலும் அங்கிருக்கும் பெரிய‌ நூல‌க‌ம் பாராளூம‌ன்ற‌ வ‌டிவ‌த்தில் வ‌ட்ட‌மாக‌ வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து, இத‌னை நான் அந்த‌ ப‌ல்க‌லை க‌ழ‌க‌த்திற்கு சென்று பார்த்தவன் என்ற முறையிலும், அங்கிருக்கும் நூலகத்தில் ப‌டித்த‌வ‌ன், ஊழிய‌ர்களோடு உரையாடிய‌வ‌ன் என்கிற‌ முறையிலும் கூறுகிறேன், அந்த‌ ப‌ல்க‌லை க‌ழ‌க‌த்தின் வெளியே சோழ‌ர் கால‌த்தை நினைவுப‌டுத்தும் வ‌கையில் புலி சிலைக‌ள் நிறுவ‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன, நல்ல‌ வேளையாக‌ அது அய்ய‌ப்ப‌னின் வாக‌னம் அதனால் பொறித்து வைத்திருக்கிறார்கள் என்று க‌தைய‌ள‌க்காம‌ல் இருந்தீர்களே, அதுவரையில் மகிழ்ச்சி!!

நீங்க‌ள் எந்த‌ அடிப்ப‌டையில் அத‌னை கோவில் வ‌டிவில் க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்று கூறினீர்க‌ள் அது கோபுர‌ம் போன்ற‌ வ‌டிவ‌த்தை மேலே கொண்டிருக்கிற‌து என்ப‌தாலா? ம‌ன்ன‌ர் கால‌த்து கோட்டைக‌ள் எப்ப‌டி இருந்த‌து என்று உங்க‌ளால் கூற‌முடியுமா த‌மிழ்ம‌ணி, சில‌ப்ப‌திகார‌த்தை ப‌டித்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் விவ‌ர‌ம் புரியும், ம‌ன்ன‌ர் கால‌த்து அர‌ண்ம‌னைக‌ளும் கூட‌ கோபுர‌ம் போன்ற‌ வ‌டிவில்தான் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ன‌, இன்னும் சொல்ல‌ப்போனால் அந்த‌ கோபுர‌ங்க‌ளும் கூட‌ திராவிட‌ முறையிலான‌ அமைப்பு என்று சொல்ல‌ப்ப‌டுகிற‌து, இங்கிருக்கும் கோபுர‌ங்க‌ளும், வ‌ட‌நாடுக‌ளில் இருக்கும் கோபுர‌ங்க‌ளும் வ‌டிவ‌த்தில் ஒத்திருப்ப‌தில்லை, அத‌ற்கு கார‌ண‌ம் நான் முன்பே கூறிய‌து போல‌ இங்கிருக்கும் கோபுரங்க‌ள் திராவிட‌ முறைப்ப‌டி க‌ட்ட‌ப்ப‌ட்டவை என்ப‌துதான், இது குறித்து ஒரு க‌ட்ட‌ட‌க‌லை மாண‌வ‌ரை நான் தொட‌ர்பு கொண்டு கேட்ட பொழுது அவ‌ர் இங்கிருக்கும் க‌ட்ட‌ட‌ங்க‌ள் நான்கு வ‌கையில் ப‌குக்க‌ப்ப‌டுவ‌தாக‌ கூறினார், திராவிட‌ம், வேச‌ர‌ம், நாக‌ரம் என்று அவ‌ற்றின் மூன்று வ‌கைகளின் பெய‌ரை குறிப்பிட்ட‌தோடு தூக்கம் கலையாமலிருந்த காரணத்தால் அந்த‌ இன்னொரு வகையை புத்த‌க‌த்தை பார்த்து பிற‌கு கூறுவ‌தாக‌ கூறிச்சென்றார்.

ஆக‌ இங்கிருக்கும் க‌ட்ட‌ட‌ங்க‌ள் எல்லாம் இப்ப‌டி க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும் பொழுது அது கோவில் வ‌டிவில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌தாக‌ கூசாம‌ல் வ‌ரலாற்றை புர‌ட்டி, வ‌ர‌லாற்றிலேயே கைவைக்கிறீர்க‌ளே த‌மிழ்ம‌ணி, க‌ம்யூனிஸ்ட்க‌ள் வ‌ந்தால் வ‌ர‌லாற்றில் கைவைத்துவிடுவார்க‌ள் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டே த‌மிழ் ப‌ல்க‌லை க‌ழ‌க‌த்தின் வ‌ர‌லாற்றையே புர‌ட்டுகிறீர்க‌ளே த‌மிழ்ம‌ணி உங்க‌ளுக்கு வெட்க‌மாக‌ இல்லையா? தெரியாம‌ல் கூறின‌தாக‌ எடுத்துக்கொண்டாலும், எதுவும் தெரியாம‌லேயே இவ்வ‌ள‌வு ஆணித்த‌ரமாக‌ பேசுகிறீர்க‌ளே, அதுவும் க‌ண்ணுக்கு முன்னால் தெரியும் ஒரு க‌ட்ட‌ட‌ அமைப்ப்பு விசயத்திலேயே புரளி கிளப்பி புளுகும் நீங்கள், க‌ண்ணுக்கே தெரியாத‌ தூர‌தேச‌த்தில் க‌ம்யூனிஸ்ட்க‌ளால் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ கொலைக‌ள் ப‌ற்றி தின‌ம் தின‌ம் க‌தைய‌ள‌க்கிறீர்க‌ளே அதில் எந்த‌ அள‌வுக்கு உண்மை இருக்கும்.


நமது கேள்வி: ராம‌னையும் கிருஷ்ண‌னையும் வ‌சைமாறி பொழிவ‌து த‌வ‌றா?


தமிழ்மணி பதில்: மனிதர்களது கருத்துரிமையை எப்போதுமே நாம் உரத்த குரலெடுத்து காப்பாற்றவேண்டும். ராமனை கிருஷ்ணனை வசை மாறி பொழிவதற்கு தற்போது இருக்கும் உரிமை போலவே, கம்யூனிஸ்டுகளின் சாம்ராஜ்யத்தில் லெனின், மாவோ, போல்போட், ஸ்டாலின், மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோர் மீது வசை மாறி பொழிவதற்கு சுதந்திரம் வேண்டும். அது இருக்காது என்பதாலேதானெ நான் கம்யூனிஸ்டுகளை எதிர்க்கிறேன்? இந்த சுதந்திரம், கம்யூனிஸ்ட்கள் அமைக்கப்போகும் புரட்சி நாட்டில் இருக்குமா என்பதை அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். அப்படி குரலெடுத்து வசை மாறி பொழிபவர்களை எப்படி நடத்துவார்கள் என்பதையும் கேட்டுச் சொல்லுங்கள்.

நமது குறிப்பு: ம‌க்க‌ள‌து க‌ருத்துரிமையை காப்பாற்ற‌த்துடிக்கும் உங்க‌ள‌து ஜ‌ன‌நாய‌க‌ ப‌ண்பை நினைத்தால் அப்ப‌டியே புல்ல‌ரித்து போகிற‌து த‌மிழ்ம‌ணி, உண்மையில் நீங்க‌ள் க‌ருத்துரிமைக்கு குர‌ல் கொடுக்க‌ வேண்டும் என்று நினைத்தால் இன்றைய‌ நிலையில் இராம‌னையும், கிருஷ்ண‌னையும் விமர்சிப்பவர்களுக்காகத்தான் குர‌ல் கொடுக்க‌ வேண்டும்.,

"இராம‌ன் ஒரு குடிகார‌ன்" என்று வால்மீகி இராம‌ய‌ண‌த்தில் இருக்கும் ஒரு உண்மையை கூறிய‌ கார‌ண‌த்திற்காக‌ இங்கிருக்கும் ஒரு முத‌ல்வ‌ரின் த‌லையே விலை பேச‌ப்ப‌டுகிற‌து என்றால் பார்த்துக்கொள்ளுங்க‌ளேன் இன்று இந்தியாவில் இருக்கும் கருத்துரிமையின் இலட்சனத்தை., மேலும் இன்றைய‌ நிலையில் இந்தியாவில் இராம‌னை தேசிய‌ நாய‌க‌னாக‌ ஏற்றுக்கொள்ள‌வில்லை என்றால் முஸ்லீம்க‌ள் ஆயிர‌க்க‌ண‌க்கில் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌டுகிறார்க‌ள், முஸ்லீம‌க‌ள் இராம‌னை ஏற்றுக்கொள்ள‌ சொல்லி க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகிறார்க‌ள், ஆக‌வே திருவாள‌ர் த‌மிழ்ம‌ணி அவ‌ர்க‌ளே க‌ம்யூனிச‌ ஆட்சி வ‌ந்து அதில் ஸ்டாலின், லெனின், மாவோ குறித்து விம‌ர்சிக்க‌ க‌ருத்துரிமை கேட்டு இன்று போராடுவ‌தை காட்டிலும் இராம‌னையும், கிருஷ்ண‌னையும் விம‌ர்சிக்க‌வும் அந்த பார்ப்பன‌ கடவுளர்களை பற்றி உண்மைக‌ளை எடுத்துச் சொல்ல‌வும் கூடிய‌ நாத்திக‌ர்க‌ளின் க‌ருத்துரிமைக்காக‌வும், த‌ன‌து க‌ட‌வுளை ந‌ம்ப‌ வாய்ப்ப‌ளிக்கிற‌ முஸ்லீம்க‌ளின் சுத‌ந்திர‌த்திற்காக‌வும் குர‌ல் கொடுங்க‌ள்., இப்ப‌டி விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ளையும், வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ளையும் இன்று ஆர்.எஸ்.எஸ்கார‌ர்க‌ள் எப்ப‌டி ந‌ட‌த்திக்கொண்டிருக்கிறார்க‌ள் என்ப‌தையும் என‌க்கு கொஞ்ச‌ம் கேட்டு சொல்லுங்க‌ள்.


நமது கேள்வி: நீங்கள் தன்மான தந்தை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லை? ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் எந்த வகையில்? மறுக்கிறீர்கள் என்றால் எந்த வகையில்?


தமிழ்மணி பதில் : ஏன் மறுக்கவோ ஏற்றுக்கொள்ளவோ வேண்டும்? எல்லோருக்கும் அவரும் நாமும் இணையும் புள்ளிகள் ஏராளம் இருக்கும். அவரும் நாமும் பிரியும் புள்ளிகளும் ஏராளம் இருக்கும். அதுதானே ஒவ்வொருவரின் தனி இருப்பை அடையாளப்படுத்துகிறது? (பிரியும் புள்ளிகளை விட இணையும் புள்ளிகள் ஏராளம் என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்)

நமது குறிப்பு: தமிழ்மணி இது போன்ற பூடகமான பதில்கள் தேவையில்லை, நேரடியாக பேசுங்கள்? உங்க‌ளிடம் கேட்ப‌து என்ன‌வென்றால், பெரியாரை ப‌ற்றிய‌ உங்க‌ள் விம‌ர்ச‌ண‌ங்க‌ள் என்ன‌ என்ப‌துதான்? அதாவ‌து பிரியும் அந்த‌ சில‌ புள்ளிக‌ள் என்ன‌ என்ப‌துதான் என‌து கேள்வி. நேற்று எழுதிய‌ ப‌திவுக‌ளில் ஈ.வெ.இராம‌சாமி என்று ஆர்.எஸ்.எஸ்கார‌ர்க‌ள் போல‌ வ‌ன்ம‌ம் தெரிக்க‌ எழுதிய‌ நீங்கள், எங்க‌ளின் விடிய‌லுக்கு திசை காட்டிய‌ அந்த‌ கிழ‌வ‌னை ப‌ற்றி என்ன‌ விம‌ர்ச‌ண‌ம் வைத்துக்கொண்டிருக்கிறீர்க‌ள் என்று தெரிந்து கொள்ள‌த்தான் கேட்கிறேன், சொல்லுங்க‌ள்., பெரியார் வீட்டில் க‌ன்ன‌ட‌ம் பேசினார் என்று அப‌த்த‌ங்க‌ளை அவிழ்த்துவிடும் அயோக்கிய‌ சிகாம‌னியாகிய‌ நீங்க‌ள் எங்க‌ள் ப‌குத்த‌றிவு ப‌க‌ல‌வ‌னை ப‌ற்றி என்ன‌ குறை சொல்ல‌ப்போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள‌வே கேட்கிறேன் ப‌தில் சொல்லுங்க‌ள்.

கிழிந்து தொங்கும் தமிழ்மணி (எ) 'பார்ப்பன'மணியின் முகமூடி

தமிழ்மணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டு எழுதிய பார்ப்பன சமஸ்கிருதமனியை அம்பலப்படுத்தி இந்த பதிவு நேற்று வெளியானது, ஜனநாயக முகமூடியை அணிந்து கொண்டு கம்யூனிச எதிர்ப்பு என்கிற போர்வையில், தமிழர்களுக்கு எதிராகவும், இணையத்தில் முற்போக்காளர்களூக்கு இடையில் சிண்டு முடியும் நோக்கோடும் எழுதப்பட்டிருந்த தமிழ்மணியின் பதிவினை எடுத்து போட்டு அதில் ஒளிந்திருக்கும் பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்தியதோடு, பார்ப்பனமணிக்கு சில அடிப்படையான கேள்விகளையும் அந்த பதிவில் எழுப்பியிருந்தேன், கேள்விகளுக்கு பதிலளிக்கமாலும், நாம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்க வக்கில்லாமலும் ஓடிய தமிழ்மணி என்பவர் தான் உண்மையில் பார்ப்பனமணிதான் என்பதை இப்போது நிரூபித்திருப்பதோடு, குட்டு வெளியாகிவிட்டதே என்ற பதட்டத்தில் என்ன செய்வது என்று அறியாது, அசுரன் என்ற பதிவருக்கு பதில் எழுதும் சாக்கில் தனது சமஸ்கிருத ஆதரவு அடையாளத்தை காட்டியபடி அம்மணமாக நிற்கிறார்.

இது எந்த அளவுக்கு போயிருக்கிறது என்றால், தமிழ்மணியை நேற்று சமஸ்கிருதமணி என்று சுட்டிக்காட்டி நாம் எழுதிய பொழுது, தமிழ்மணிக்கு ஆதரவாக வந்து வாதாடியவர் பதிவர் சதுக்கபூதம் அவர்கள், இவர் தமிழ்மணி எழுதிய கம்யூனிச எதிர்ப்பு பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து பின்னூட்டம் போட்டுவந்திருக்கிறார் என்பதோடு தமிழ்மணியின் ஜனநாயக விரோத பார்ப்பனீய முகம் அறியாமல், அவரை ஒரு ஜனநாயகவாதி என்றும் நம்பிவந்திருக்கிறார் என்பதனை அங்கிருக்கும் பதிவுகளை படிப்பவர்கள் பார்க்கலாம், தமிழ்மணியின் ஜனநாயக முகத்திரை கிழிந்து இன்று உண்மை முகம் அம்பலமாகியிருக்கும் வேளையில் இப்பொழுது அவர் அங்கே போட்டிருக்கும் பின்னூட்டத்தை பாருங்கள்

சதுக்க பூதம் said...
//அதே போல, பண்டைய இந்தியாவின் தொடர்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். இன்று
தொடர்பு மொழியாக இருப்பது ஆங்கிலம். இரண்டின் மீது வெறுப்பு கொண்டிருப்பவர்களும்
மக்கள் விரோதிகளே.//
நீங்கள் கூறுவது தமிழ் நாட்டு கோவில் பற்றி.சமஸ்கிருதம்
எந்த காலத்தில் தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக இருந்தது?இந்த பதிவின் மூலம்
உங்களுடைய உண்மையான கம்யூனிச எதிர்ப்பின் அடிப்படை காரணம் சந்தேகத்தை
ஏற்படுத்துகிறது

தமிழ்மணியின் உண்மை அடையாளத்தை உணர்ந்து கொண்ட பதிவர் சதுக்க பூதத்திற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு பார்ப்பனர்களின் இந்த நாலாந்தர உத்தியை அனைத்து பதிவர்களூம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.

குறிப்பு: நேற்று நாம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமலும், மறுக்காமலும் அடுத்த பதிவை போட்டிருக்கிறார் பார்ப்பனமணி, ஆனால் இப்போதைய பதிவு துலக்கமாகவே அவரை அம்பலப்படுத்தியிருக்கிறது, தற்சமயம் நான் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அதை பற்றி எழுத முடியாத நிலையில் இருக்கிறேன், ஆனால் நிச்சயம் நாளை எழுதுகிறேன், நாம் இப்படியெல்லாம் எழுதுகின்ற நிலையில், இனி முதலுக்கே மோசமாகிவிடும் என்பதை உணர்ந்து எதையாவது சொல்லி வைப்போம் என்கிற நோக்கில் பார்ப்பனமணி நமக்கு பதிலளிப்பார் என்று நினைக்கிறேன், பதிவர் சதுக்கபூதத்தை தாஜா செய்யும் வேலையிலும் இறங்கக்கூடும். அல்லது நேற்றே நான் கூறியபடி எனக்கு கம்யூனிச லேபிள் ஒட்டி தனது வழக்கமான சங்கதிகளை அவிழ்த்துவிடுவார் என்று நினைக்கிறேன், பார்க்கலாம்.

தமிழர்களின் வழிபாட்டுரிமையை மறுக்கும் தமிழ்மணி(?)க்கு சம்பூகனின் கேள்விகள்!!

மனித உரிமை பாதுகாப்பு மையம் என்ற அமைப்பின் தலைமையில் சிதம்பரம் கோவிலில் தமிழில் வழிபடுகின்ற‌ உரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழர்கள் போடும் பிச்சையில் வயிறு வளர்த்துக்கொண்டு தமிழில் அர்ச்சிப்பதை தடுக்கும் திருட்டு தீட்சிதர்களிடமிருந்து கோவிலை பிடுங்கி தமிழக அரசே நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது, இந்த பொதுகூட்டத்தில் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளோடு மக்கள் கலை இலக்கிய கழகம் என்றவொரு அமைப்பும் கலந்து கொண்டிருக்கிறது, அதன் பொது செயலாளர் மருதையன் என்பவரும், பேராசிரியர் பெரியார்தாசனும் இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றியிருக்கின்றனர்., இந்த‌ நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்ற‌ அமைப்புக‌ளில் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ கழ‌க‌ம் என்ற அமைப்பினை க‌ம்யூனிச‌ அமைப்பு என்று கூறுகிறார்க‌ள். தமிழர்களின் வழிபாட்டுரிமைக்காகவும், ஆரிய பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்குதற்காகவும் கட்சி வேறுபாடுகளை தாண்டி மார்க்சியவாதிகளும், பெரியாரியவாதிகளும், அம்பேத்கரியவாதிகளும் மற்ற முற்போக்கு சக்திகளும் ஓங்கி குரல் கொடுப்பதும், ஒன்றினைந்து ஒரே மேடையில் கலந்து கொள்வதும், கைகோர்த்து போராடுவதும், உண்மையில் தமிழர்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய ஒரு நிகழ்வு.இது ஒருபுறமிருக்க இங்கு வலைப்பூக்களில் தமிழ்மணி என்ற பெயரில் ஒருவர் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக எழுதிவருவதாக தெரிகிறது, அப்படியே அவர் எழுதிக்கொண்டிருந்திருந்தால் நாம் இந்த பதிவை எழுதவேண்டிய அவசியம் இருந்திருக்காது, ஏனெனில் கம்யூனிசத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வாதாட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை, சாதி சழக்குகள் வேரோடி போயிருக்கும் இந்தியாவில், பார்ப்பன இனம் போன்ற ஒரு கொடூர இனத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தியாவில் நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், பாட்டாளி, புரட்சி இவையெல்லாம் பொருளற்ற வார்த்தைகள்தான்., இதனை உணர்ந்த காரணத்தால்தான் பெரியார் "பார்ப்பனீயம் இருக்கும் வரையில் கம்யூனிசம் வராது" என்று தீர்க்கமாகவே கூறினார். ஆகவே த‌மிழ்ம‌ணி க‌ம்யூனிச‌த்தை ம‌ட்டும் எதிர்த்திருந்தால் ந‌ம‌க்கு எந்த‌ க‌வ‌லையும் இல்லை ஆனால் அவ‌ர் க‌ம்யூனிச‌த்தை எதிர்க்க‌ போர்த்திருக்கும் ஜ‌ன‌நாய‌கப் போர்வையில் ம‌னித‌விரோத‌ பார்ப்ப‌ன‌ முக‌த்தைதான் மூடிக்கொண்டிருக்கிறாரோ எனறு எண்ணும்ப‌டி ஒரு ப‌திவை போட்டிருக்கிறார். தமிழ்மணி என்ற பெயருக்கடியில் சமஸ்கிருதமணி(யாட்டி) ஒளிந்திருக்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது.

த‌மிழன் தான் விரும்பிய‌ க‌ட‌வுளை த‌ன‌து மொழியில் வ‌ண‌ங்குவ‌த‌ற்கு உரிமை கிடையாது என்பதை வரலாற்றில் பார்ப்பனீயம் ப‌ல‌ கார‌ண‌ங்களை சொல்லி மறுத்திருக்கிறது, ம‌ழுப்பியிருக்கிறது, எதிரியை தூய்மையற்றவனாகவும் குற்றவாளியாகவும், நியாயமற்றவனாகவும் காட்டுவதன் மூலமாக தன்னை நியாயவானாக காட்டிக் கொள்வது என்பதே பார்ப்பனீயத்தின் பண்பாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் பொதுக்கூட்ட அழைப்பிதளை தனது வலைப்பூவில் போட்டிருக்கும் தமிழ்மணி என்ப‌வ‌ர் இந்த‌ ப‌திவை எழுதி க‌ம்யூனிஸ்ட்களுக்கு கேள்விக் கேட்கிறேன் பேர்வ‌ழி என்ற‌ பெய‌ரில் த‌மிழ‌ர்க‌ளின் வ‌ழிபாட்டுரிமையை ம‌றுத்திருப்ப‌தோடு, "த‌மிழ் மொழி வேசி மொழி, வழிபாட்டுக்குரிய மொழியல்ல‌" என்ற பார்ப்பன‌ மனுதர்மத்தை சொல்லாம‌ல் சொல்லியிருக்கிறார்.

அவர் கம்யூனிஸ்ட்களை நோக்கி எழுப்பியிருக்கும் கேள்விகளில் சில‌ பொதுப்படையாக நாத்திகர்களை நோக்கிய‌தாக‌ இருக்கிற காரணத்தால் ச‌ம‌ஸ்கிருத‌ம‌ணிக்கு மண்ணிக்கவும் தமிழ்மணிக்கு ப‌தில‌ளிக்க‌வும், அவ‌ரை கேள்விகேட்க‌வும் நாத்திக‌ர்க‌ளாகிய‌ ந‌ம‌க்கு தார்மீக‌ உரிமை இருக்கிற‌து என்று நினைக்கிறேன், மற்றபடி அவ‌ர் குறிப்பாக‌ க‌ம்யூனிஸ்ட்க‌ளை நோக்கி எழுப்பியிருக்கும் கேள்விக‌ளுக்கு கம்யூனிஸ்ட்கள்தான் வந்து ப‌தில‌ளிக்க‌வேண்டும்.

ச‌ரி இனி அவ‌ர‌து கேள்விக்குள் செல்வ‌த‌ற்கு முன் சில புரித‌ல்க‌ளை ஏற்ப‌டுத்திக் கொள்வோம்.,

த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து மொழியில் தாம் விரும்பும் க‌ட‌வுளை வ‌ண‌ங்குவ‌தையும், அர்ச்சிப்ப‌தையும் த‌டுப்ப‌த‌ற்கு ஆக‌ம‌ விதிக‌ள், ப‌ர‌ம்ப‌ரை உரிமை என்ற‌ ப‌ல்வேறு த‌ந்திரங்க‌ளை பார்ப்ப‌ன‌ கும்ப‌ல் ப‌ல‌ கால‌மாக‌ கையாண்டுவ‌ருகிற‌து, திராவிட மக்களை வேசி மக்கள் என்று கூறி கேவலப்படுத்தும் பார்ப்பனீயம் தமிழர்களின் மொழியான தீந்தமிழையும் "வேசிமொழி" "நீச மொழி" என்றும் பல்லாண்டு காலமாக கேவலப்படுத்திவருகிறது, அதையே சட்டமாக்கியும் வைத்துவிட்டது, அதனால்தான் தந்தை பெரியார் "சட்டப்படியும் சாஸ்திரபடியும் நம்மள தாசி மவன்னு சொல்றானே" என்று மேடைக்கு மேடை கூறினார்.

கடவுளை வழிபடவேண்டுமானால் தேவ மொழியான சமஸ்கிருதத்தில்தான் அர்சிக்க வேண்டும் என்று கூறிவருகிறது பார்ப்பன கும்பல். த‌மிழ‌ர்க‌ள் ஆத்திக‌ராயினும் நாத்திகராயினும் எவ‌ராயிருந்தாலும் ச‌ரி அவ‌ர்க‌ளை சூத்திர‌ர்க‌ள் என்று கூறி அவ‌ர்க‌ளை அவ‌மான‌ப்ப‌டுத்தியும் வ‌ருகிற‌து, இறைவ‌னையே நினைத்து நெஞ்சுநெக்குருகி வேண்டி துற‌வு வாழ்க்கை பூண்ட‌ குன்ற‌க்குடி அடிக‌ளாரானாலும் கூட‌ அவ‌ரும் சூத்திர‌ர்தான், என‌வே அவ‌ர் போன்ற‌ ஆதின‌ங்க‌ளும் க‌ருவ‌றைக்குள் செல்ல‌வோ குட‌முழுக்கு செய்ய‌வோ ஆக‌ம‌விதிப்ப‌டி த‌குதிய‌ற்ற‌வ‌ர்க‌ள் என்கிற‌து பார்ப்ப‌னீய‌ம். சூத்திர‌ர்க‌ள் என்ப‌த‌ற்கு மனுத‌ர்ம‌ சாஸ்திர‌ம் கீழ்க‌ண்ட‌ ப‌ட்டிய‌லை த‌ருகிறது

1. போரில் புறங்காட்டி ஓடியவன்.
2. போரில் கைது செய்யப்பட்டவன்.
3. பிராமணனிடத்தில் ஊழியம் செய்பவன்.
4. விபச்சாரி மகன்
5. விலைக்கு வாங்கப்பட்டவன்
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7. தலைமுறை தலைமுறையாய் அடிமை ஊழியம் செய்பவன்.
(மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் 8; சுலோகம் 4)

தமிழர்களையும் அவர்களது தாய்மொழியாம் இனிய தமிழ்மொழியையும் கேவலப்படுத்தும் பார்ப்பன கும்பலின் இந்த ஆரிய வெறி கொட்டத்தினை எதிர்த்து பெரியார் ஒரு பெரும் போராட்டமே நடத்தினார், பார்ப்பன புரோகித கும்பலின் அடிமடியிலேயே கைவைக்கும் வகையில் அனைவரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.,

"க‌ட‌வுள் இல்லை, கட‌வுள் இல்லை, க‌ட‌வுள் இல்ல‌வே இல்லை" என்று த‌ன‌து கடைசி மூச்சுவ‌ரை முழ‌ங்கி கொண்டிருந்த‌ த‌ந்தை பெரியார்தான், வைக்க‌ம் எனுமிட‌த்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலின் உள்ளே செல்லவும், கடவுளை தரிசிக்கவும் உரிமையற்றிருந்த பொழுது அவ‌ர்க‌ளுக்கு போராடி சிறை சென்றார், அந்த‌ உரிமையை பெற்றுத‌ந்தார், அத‌னால் "வைக்க‌ம் வீர‌ர்" என்றும் அழைக்க‌ப்ப‌ட்டார். எத்த‌னையோ ஆத்திக‌வாதிக‌ள் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை கோயிலுக்குள் அனும‌திக்க‌ ம‌றுத்த‌ பொழுது இந்த‌ நாத்திக‌வாதிதான் அவ‌ர்க‌ளுக்கான‌ உரிமையை போராடி பெற்றுத்த‌ந்தார், நாத்திக‌வாதிக‌ளான‌ சுய‌ம‌ரியாதை இய‌க்க‌த்தார்தான் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் வ‌ழிபாட்டு உரிமைக்காக‌ போராடி அடி உதை வாங்கினார்கள், அடுக்கடுக்காக வழக்குகளை சந்தித்தார்கள், சிறை சென்றார்கள்.

இப்படி பெரியார் நடத்திய போராட்டங்களின் பொருள் என்ன‌? அவ‌ர் அனைவ‌ரையும் ப‌க்தி செலுத்த‌ச் சொன்னார், கடவுள் நம்பிக்கை கொள்ளச் சொன்னார் என்பதா? அப்படியல்ல‌, அவ‌ர் அத‌னை ப‌க்தி சார்ந்த‌ பிர‌ச்ச‌ணையாக‌ அனுகுவ‌த‌ற்கு மாறாக உரிமை சார்ந்த‌ பிர‌ச்ச‌ணையாக‌ அணுகினார் என்ப‌துதான், இது போன்ற பல போராட்டங்களில் தந்தை பெரியாரோடு, தமிழ்திரு.குண்றக்குடி அடிகளாரும் துணை நின்று குரல் கொடுத்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.,
சரி இனி தமிழ்மணியில் கேள்விகளுக்கு செல்வோம், த‌மிழ்ம‌ணி கேள்வி எழுப்புகிறார், சிவ‌ன‌டியார் ஆறுமுகசாமி த‌லைமையில் பெரியார்தாச‌ன் பேசுகிறாரே "க‌ட‌வுள் இல்லை! க‌ட‌வுளை ப‌ர‌ப்பிய‌வ‌ன் அயோக்கிய‌ன்!! க‌ட‌வுளை வ‌ண‌ங்குப‌வ‌ன் காட்டுமிராண்டி!!!" என்று பேசுவாரா என்று கேட்கிறார். பெரியார்தாச‌ன் என்ன‌ பேசுவார் என்ப‌தை அறிய‌ இவ்வ‌ள‌வு ஆர்வ‌ம் காட்டுகிற‌ த‌மிழ்ம‌ணி, இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன்பே நிக‌ழ்ச்சி முடிந்துவிட்ட‌ கார‌ண‌த்தால் போய்வ‌ந்த‌வ‌ர்க‌ளை கேட்டு தெரிந்து கொள்ள‌லாம், இவ்வ‌ள‌வு எளிதான‌ வழி இருக்கும் பொழுது "என்ன‌ பேசுவார் என்ன‌ பேசுவார்" என்று ம‌ண்டையை போட்டு பிய்த்துக் கொண்டால், தமிழர்களின் தாலியறுக்க மண்டையை பிய்த்து வழுக்கையாய் போன‌ சோ க‌திதான் இவ‌ருக்கும் ஏற்ப‌டும்,.

த‌மிழ்ம‌ணிக்கு விழாவுக்கு போய் வ‌ந்த‌வ‌ர்க‌ள் யாரையும் தெரிய‌வில்லையானால் குன்றக்குடி அடிக‌ளார் மேடையில் வீற்றிருக்க‌ பெரியார் பேசிய‌ பேச்சுக்க‌ளை ப‌டித்து, ஒரு நாத்திக‌வாதி என்ன‌ பேசியிருப்பார் என்ப்தனை ஊகித்துக்கொள்ள‌லாம்.,

//இந்த கூட்டத்தை நடத்துவது அதிகாரப்பூர்வமான நாத்திக இயக்கமான மக்கள் கலை இலக்கிய கழகம். உங்களுக்கு கோவிலில் என்ன பாடினால் என்ன? அவர்கள் உருதுவில் பாடுகிறார்கள், ஸ்வாஹிலியில் பாடுகிறார்கள், அல்லது அல்லேலூயா என்று கத்துகிறார்கள்? அப்துல்காதருக்கும் அம்மாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பதுபோல, நாத்திகர்களுக்கும், கோவிலில் எந்த மொழியில் பாடுவதற்கும் என்ன சம்பந்தம்? புரியவில்லை என்றால் உதாரணம் தருகிறேன். என் வீட்டுக்குள் என் மனைவியை (பக்கத்து வீட்டுக்காரனுக்கு) புரியாத மொழியில் கொஞ்சுகிறேன் என்று பக்கத்து வீட்டுக்காரன் கேஸ் போடுவது போல இல்லை?//

எவ்வ‌ள‌வு புத்திசாலித்த‌ன‌மான‌ கேள்வி பார்த்தீர்க‌ளா, ந‌ம‌க்கு புரிய‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ உதார‌ண‌ம் வேறு கொடுத்திருக்கிறார், இந்த‌ உதார‌ண‌த்தை பார்க்கும் பொழுது என‌க்கு ஒரு உதாரண‌ம் தோன்றுகிற‌து, நாம் போகின்ற‌ வ‌ழியில் ஆணாதிக்க‌ சிந்த‌னை கொண்ட‌ ஒருவ‌ன் த‌ன‌து ம‌னைவியை போட்டு அடித்து துவைக்கிறான், அவ‌னிட‌ம் "ஏன்யா இப்ப‌டி செய்யுற‌ உன்னோட‌ ம‌னைவிதான, இப்படி போட்டு அடிக்கலாமா?" என கேட்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் "என்னோட‌ பொண்டாட்டி நான் போட்டு அடிக்கிறேன் கேட்கிறதுக்கு நீ யாருடா? நீ என்ன‌ அவ‌ள‌ வ‌ச்சிகிட்டிருக்கியா?" என்று கேட்கும் கேவ‌ல‌மான‌ ஆணாதிக்க‌ வக்கிர‌ம் பிடித்த‌வ‌ர்க‌ள் இந்த‌ நாட்டில் இருக்க‌த்தான் செய்கிறார்க‌ள், இது போன்ற பார்ப்ப‌ன‌ மேலாதிக்க வக்கிர‌ சிந்த‌னை கொண்ட‌ ம‌த‌ம்தான் பார்ப்ப‌ன இந்து ம‌த‌ம், நாம் அத‌னை கேள்வி கேட்டால் "நாங்க‌ என்ன‌ வேணும்னாலும் ப‌ண்ணுவோம், நீ நாத்திக‌வாதிதானே கேள்வி கேட்காத‌" என்ப‌துதான் பார்ப்ப‌ன‌ர்க‌ளின் குர‌லாக‌ இருக்கும் இத‌னைதான் இராம‌கோபால‌ய்ய‌ரிலிருந்து அத்த‌னை பேரும் பேசுகிறார்க‌ள், இங்கு தமிழ்மணி(எ)ச‌ம‌ஸ்கிருத‌ம‌ணி அய்ய‌ரும் அதையே எழுதியிருக்கிறார்.

நாத்திகவாதியாகிய உனக்கு கேள்வி எழுப்ப உரிமை இல்லை, நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வோம் என்று கூறுகிறார். என்ன வேண்டுமானாலும் என்றால் வரலாற்றில் நந்தனை எரித்தது போல் எரித்துவிடலாம் அல்லது சில ஆண்டுகளுக்கு முன்பு யார் துணையுமின்றி ஆறுமுகசாமி போராடிய பொழுது அவரை அடித்து துவைத்து வெளியே எறிந்ததே தீட்சிதர் கூட்டம் அப்படி கூட செய்யலாம்.,

"ஆத்திகர்களாகிய நாங்கள் எங்களுக்குள்ளேயே பிரச்சணையை தீர்த்துக் கொள்வோம்" என்பதுதான் தமிழ்மணியின் வாதம், பிரச்சணையை தீர்ப்பது என்பதை தமிழில் பாடவிரும்பும் ஆறுமுகசாமியையே தீர்த்துவிடுவது என்று கூட வைத்துக்கொள்ளலாம்.,

தமிழில் பாட விரும்பும் ஆறுமுகசாமி இன்றைய நிலையில் தீட்சிதர்களின் அச்சுறுத்தலால் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் இருக்கும் பொழுது அதை பற்றி பேச வாயெடுக்காத தமிழ்மணி, நாளை கம்யூனிச ஆட்சி வந்தால் அவரை கொண்றுவிடுவார்களோ என்று கவலைப்படுகிறார், "கொண்று விடுவீர்களா?" என்று கம்யூனிஸ்ட்களூக்கு கேள்வியும் எழுப்புகிறார். அதனால் கம்யூனிஸ்ட்களோடு சேர்ந்து போராடாதீர்கள் என்று ஆறுமுகசாமியையும் நம்மையும் எச்சரிக்கிறார்.

அட அட என்ன அக்கறை, யாரோடும் சேராவிட்டால் தீட்சிதர் பொறுக்கி கூட்டம் ஆறுமுகசாமியை இன்றே கொன்றுபோட்டுவிடுமே, சில ஆண்டுகளுக்கு முன்பு யார் துணையுமின்றி தன்னந்தனியாக ஆறுமுகசாமி தமிழில் பாட முயன்ற பொழுது அவரை அடித்து துவைத்து கையை முறித்து தூக்கி வெளியே வீசி அவரை கொன்றொழித்துவிட முயன்றது தீட்சிதர் ரெளடி கூட்டம். அந்த கொடூர கும்பல் இன்றும் வாய்ப்பு கிடைத்தால் அவரை அழித்தொழிக்கவும் தயங்காது., தமிழ்மணி ஏன் அதனை பேச மறுக்கிறார்? என்றோ வரப்போகும் கம்யூனிச ஆட்சியில் ஆறுமுகசாமிக்கு பாதுகாப்பு கொடுக்கவும், உரிமைக்குரல் கொடுக்கவும் இன்றே கிளம்பிவிட்ட தமிழ்மணி, ஆறுமுகசாமிக்கும், அவர் பாட நினைக்கும் தமிழ்மொழிக்கும் இன்றிருக்கும் அவல நிலையை பற்றி பேசாமல் இருப்பதன் மர்மம் என்ன?


//அதென்ன கோவிலை அரசுடைமையாக ஆக்குவது? அது காலம் காலமாக தனியார் கோவில். அதனை அவர்களே கட்டியிருக்கமாட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். எவனோ ராஜா அவர்களிடம் தாரை வார்த்தான் என்றே வைத்துக்கொள்வோம். அதற்கு என்ன இப்போது? இருந்துவிட்டு போகட்டுமே. பங்காரு அடிகளார் பிரம்மாண்டமாக கோவில் கட்டியிருக்கிறார். மக்களிடம் உண்டியல் வைத்து அவர்கள் கொடுத்த பணத்தில்தான் கட்டியிருக்கிறார். அதில் தமிழில் பஜனை பாடினால், அதன் உள்ளே போய் ரஷிய மொழியில் பாடு, அல்லது சீன மொழியில் பாடு என்று சொல்வீர்களா? முடிந்தால் நீங்கள் பக்கத்தில் ஒரு கோவிலை கட்டுங்கள். அதற்கு கூட்டம் சேருங்கள்.//


அட‌க்கொடுமையே அழைப்பித‌ளை எடுத்துப்போட்டிருக்கும் த‌மிழ்ம‌ணி அத‌னை முழுமையாக‌ ப‌டிக்க‌வில்லை என்று நினைக்கிறேன், ர‌ஷிய‌ மொழியிலோ, சீன‌ மொழியிலோ வ‌ழிப‌ட‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ யாரும் இங்கு போராட‌வில்லை த‌மிழ்நாட்டில் த‌மிழ்மொழியில் வ‌ழிப‌ட‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌த்தான் போராட்ட‌மே, ஏதோ சித‌ம்ப‌ர‌த்தில் தீட்சித‌ர்க‌ள் தீந்த‌மிழ் சொட்ட‌ சொட்ட‌ பாடிக்கொண்டிருப‌ப்து போல‌வும், க‌ம்யூனிஸ்ட்க‌ள் வ‌ந்து ர‌சிய‌ மொழியில் பாடு சீன‌ மொழியில் பாடு என்று போராடிய‌து போலவும் திசை திருப்புகிறார் த‌மிழ்ம‌ணி, அதென்ன‌ கோவிலை அர‌சுடைம‌யாக்குவ‌து என்று ஒரு அச‌ட்டுத்த‌ன‌மான‌ கேள்வியை வேறு கேட்கிறார், ம‌ன்ன‌ன் க‌ட்டினானோ எவ‌ன் க‌ட்டினானோ அந்த‌ கோவில் உருவான‌து இந்த‌ ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ளின் விய‌ர்வை துளியில், அவ‌ர்க‌ள் மொழி த‌மிழ், அவ‌ர்க‌ளின் உழைப்பில் உருவான‌ கோவிலை அர‌சாங்க‌ம் வைத்துக்கொள்வ‌தை விட‌ த‌ண்ட‌ச்சோறு தின்னும் தீட்சித‌ர்க‌ள் வைத்துக்கொள்வ‌துதான் நியாய‌மா?

இன்றும் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு‌ சுடுகாட்டுக்கும் செல்வ‌த‌ற்கு தனிப்பாதையையும், தேநீர் கடைக‌ளில் குடிப்ப‌த‌ற்கு த‌னிக்குவளையையும்தான் கொடுக்கிறார்கள் ஆதிக்க சாதி வெறியர்கள். அது போல‌ ச‌ம‌ஸ்கிருதம‌ணி சாரி த‌மிழ்ம‌ணி ந‌ம‌க்கு யோச‌னை சொல்கிறார் த‌மிழில் வ‌ழிப‌ட‌ வேண்டுமானால் உங்க‌ளுக்கென்று த‌னிக்கோவில் க‌ட்டி கூட்ட‌ம் சேருங்க‌ள், நாங்க‌ டெவ‌ல‌ப் ப‌ண்ணி வ‌ச்சிருக்கிற‌ பிசின‌சில‌ ம‌ண்ண‌ வாரி போடாதீங்க‌ என்கிறார்.


இப்ப‌டி பேச‌த்தொட‌ங்கி வ‌ழ‌க்க‌மான‌ த‌ன‌து பாணியில் மாவோ ஸ்டாலின் ப‌ற்றி க‌ம்யூனிஸ்ட்க‌ளுக்கு கேள்விக‌ளை கேட்டு கொண்டே இடையில் இன்னொரு விச‌ய‌த்தையும் சொருகிவிடுகிறார் தமிழ்மணி க‌வ‌னியுங்க‌ள்..

//சங்க இலக்கியங்களில் கடவுள் பெயர் குறிப்பிடாத பாடல்கள் மிகச்சில மட்டுமே மிஞ்சும் என்று நினைக்கிறேன். அவை என்ன என்ன என்று தணிக்கை செய்துவிட்டீர்களா?//

அட‌ ச‌ங்க‌ இல‌க்கிய‌த்தில் க‌ட‌வுள்பெய‌ர் குறிப்பிடாத‌ பாட‌ல்க‌ள் மிக‌ச்சில‌தானாம், ச‌ங்க‌ இல‌க்கிய‌த்தை அல‌சி ஆராய‌ந்திருக்கும் த‌மிழ்ம‌ணி எத்த‌னை பாட‌க‌ல்க‌ள் க‌ட‌வுள் பெய‌ரோடு இருக்கிற‌து என்றும் க‌ட‌வுள் பெய‌ர் குறிப்பிடாத‌ அந்த‌ மிக‌ச்சில‌ பாட‌ல்க‌ள் எத்த‌னை என்றும் குறிப்பிடுவாரா?

இப்ப‌டியாக‌ த‌மிழ்ம‌ணி என்ற நாம‌க‌ர‌ண‌ம் தாங்கியப‌டி க‌ம்யூனிஸ்ட்களூக்கு கேள்விகள் என்ற பெய‌ரில் விஷ‌த்தை க‌க்கிவிட்டு இறுதியில் பெரியாரிய‌வாதிக‌ளுக்கு த‌ட‌விக்கொடுத்து க‌ம்யூனிஸ்ட்க‌ளை நோக்கி கொம்பு சீவுகிறார் இந்த‌ த‌மிழ்ம‌ணி(எ)ச‌ம‌ஸ்கிருத‌மணி. பிரித்து வைத்து மோதவிட்டு பலன் அனுபவிப்பது, மேலாதிக்கம் செலுத்துவது பார்பணீயத்தின் பல்லாண்டு கால பழக்கம், இன்று திடீரென்று மாறிவிடுமா என்ன?

சரி நாமும் அவ‌ருக்கு சில‌ கேள்விக‌ளை வைப்போம்,

அனைத்து த‌மிழ‌ர்க‌ளுக்கும் க‌ருவ‌றையின் உள்ளே சென்று த‌ன‌து மொழியில் வ‌ழிப‌ட‌ உரிமை இருக்கிற‌தா இல்லையா? இல்லை என்றால் ஏன்? இந்த போராட்டம் சரியா தவறா?

சித‌ம்ப‌ர‌ம் கோவிலை ஏன் அரசுடைமையாக்க‌க்கூடாது?

க‌ட‌வுள் பெய‌ரை குறிப்பிடாத‌ அந்த‌ மிக‌ச்சில‌ ச‌ங்க‌த்த‌மிழ் பாட‌ல்க‌ள் எத்த‌னை?

ராம‌னையும் கிருஷ்ண‌னையும் வ‌சைமாறி பொழிவ‌து த‌வ‌றா?

நீங்கள் தன்மான தந்தை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லை? ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் எந்த வகையில்? மறுக்கிறீர்கள் என்றால் எந்த வகையில்?

குறிப்பு: தமிழ்மணியின் பதிவுகளை நான் வாசித்த வகையில் அவருக்கு கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் ஜல்லியடிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது என்றுதான் தோன்றுகிறது, அந்த காரணத்தால் என்னையும் கம்யூனிஸ்ட் என்று லேபில் ஒட்டி, இந்த பதிவுக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் தனது டீபால்ட் மேட்டர்களை அவிழ்த்துவிடுவார் என்று நினைக்கிறேன் பொறுத்திருந்து பார்ப்போம்.

பார்ப்பன கட்சிகளாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள்!!

"பணக்காரனை ஒழிப்பதைவிட பிறவி அந்தஸ்துக்காரனை ஒழிப்பது அவசியம்" என்ற தலைப்பில் அய்யா பெரியார் விடுதலையில் எழுதிய தலையங்கம்.


நம் நாட்டில் இன்றைய ஜனநாயக ஆட்சி என்பது, பொருளாதார சமத்துவம் என்னும் பேரால் உச்ச வரம்பு என்னும் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டு, ஒவ்வொருவனுக்கும் பூமி இவ்வளவுதான் வைத்துக் கொள்ள வேண்டும், ரொக்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும், தங்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று சட்டம் செய்து கொண்டு, அந்த அளவுக்கு மேற்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்து, இல்லாதவர்களுக்குக் கொடுக்கப் போவதாகத் திட்டமிட்டிருக்கிறது.

இன்றைய சமுதாய அமைப்பு நிலையில் இதற்கென்ன அவ்வளவு அவசியம், அவசரம் வந்தது? அந்தஸ்தும், சுகவாச வாழ்வும் பணத்தினால் மாத்திரம் இல்லையே! அப்படி ஏதாவது இருந்தாலும் அது நிரந்தரமானது அல்லவே!

இன்றைக்குப் பணக்காரனாக இருப்பவன் யாரும், அவனிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளாமலே நாளைக்கு ஏழையாக இல்லாதவனாக ஆகிவிடுகின்றான். அதுபோலவே, இன்று ஏழையாக இருப்பவன் நாளைக்குப் பணக்காரனாக ஆகிவிடுகின்றான்.

இதைவிட மோசமான பேத நிலைமை மக்களை வெட்கமும் வேதனையும் படத்தக்க நிலைமை; முட்டாள்தனமாகவும் மானங்கெட்டத்தனமாகவும்; அளவுக்கு அடங்காத அந்தஸ்தும் தேவையற்றதாக சுகபோகமும் உடைய நிலைமை, யாருக்கும் பயனற்ற தன்மையான சொத்து, செல்வம் உள்ள தன்மை ஏராளமாக ஒவ்வொரு மனிதனையும் பற்றிய தன்மை பல நம் நாட்டில் இருக்கின்றனவே! அவை பற்றி எந்த அரசாங்கம், எந்த ஆட்சி, எந்த சட்டசபை இதுவரை என்ன செய்தது? இதை மாற்றுவதை ஒழிப்பதை விடவா பணக்காரனை ஒழிப்பது இன்றைக்கு அவசரமாக ஆகிவிட்டது.

இது மாத்திரமா? தெருவில் உடைத்து எடுத்த கல்லைக் கொண்டு ஓர் உருவத்தை உருவாக்கிக் கொண்டு, ஒரு பிரத்யட்ச அடையாளமும் இல்லாமல் அதை மனிதன் அறிவிற்குப் புரியாதபடி கடவுள் என்ற சொல்லி அதற்குப் பெரிய கட்டடம் கட்டி அதைக் கோயில் என்று சொல்ல, அதற்கென்று ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி ரூபாய்கள் பெறுமானம் பெறும்படியான நிலங்களும், தங்கம், நவரத்தினம் மற்றும் பல உலோகங்களைக் கொண்ட பண்டங்கள் உடைய பல கடவுள்கள், பல கோயில்கள், பல நிர்வாகங்கள் இருந்து வருகின்றனவே அவற்றின் வாழ்விற்காக ஏராளமாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் சேர்க்கப்பட்டும், செலவழிக்கப்பட்டும் வருகின்றதே! அக்கிரமமான அந்தஸ்துக்கும், சுகபோகமான வாழ்விற்கும் இந்த அரசாங்கம் பரிகாரம் செய்கின்ற உச்சவரம்புத் திட்டம் ஏற்படச் செய்யாதது ஏன்? என்று கேட்கிறேன்.

சராசரி அந்தஸ்துக்கு மேற்பட்ட அந்தஸ்தும், சராசரி சுகபோக வாழ்க்கைக்கு மேற்பட்ட வாழ்வும், அனுபவமும், பலனும் பரவியும், இடையில் இருக்கும்படியான சோசலிசத்தை நமது அரசாங்கம் செய்ய உண்மையாய் யோக்கியமாய் கருதினால், முதலாவதாக நிலத்தினால், பணத்தினால், சொத்தினால் அல்லாமல் எவரும் பிறவியினால் உள்ள இழிவை ஏற்படுத்திக் கொண்டதும், அரசாங்கமும் சட்டமும் அனுமதித்து வருகிற அந்தஸ்தை, சுகபோகமாக (உழைக்காமல்) வாழ்கின்ற வாழ்வைக் கொண்ட அந்தஸ்தை ஒழித்து ஆக வேண்டும். அப்படி இல்லாமல் பணத்தினால் ஏற்பட்ட அந்தஸ்தை சுகபோக வாழ்வை ஒழித்துக் கட்டுவது என்பதற்காகச் சட்டம் செய்வதும், உச்சவரம்பு ஏற்படுத்துவதும் பிறவியினால் ஏற்படுத்திக் கொண்ட அந்தஸ்தையும் சுகபோக வாழ்வைப் பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும்தான் இது பயன்படும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், நம் நாட்டில் சாதி ஒழிப்புக் கிளர்ச்சி சமுதாயச் சீர்திருத்தம் என்பதை நாம் தொடங்கியதற்குப் பின்புதான் கம்யூனிசம் என்னும் பொதுவுடைமை முயற்சிக்கு ஒரு ஸ்தாபனம் தோன்றியது. அதுவும் பார்ப்பனராலேயே தொடங்கப்பட்டது. அதன் கருத்தும், காரணமும் மக்களைச் சமுதாயச் சீர்திருத்தம், ஜாதி ஒழிப்பு, கடவுள், மத, சாஸ்திர ஒழிப்புத்துறையில் பாமர மக்களுக்கு எண்ணம் போகாமல், அதை வேறு பக்கம் திருப்புவதற்கே ஆகும். விளக்கமாகக் கூறுவதானால், ஏராளமான பார்ப்பனர்கள்தான் இன்று பொதுவுடைமைக் கட்சியில், ஸ்தாபனத்தில் இருக்கிறார்களே ஒழிய, பாடுபட்டார்களே ஒழிய, தமிழர்கள் அவற்றில் தொண்டர்களாகத்தான் இருந்தார்கள்!

மக்களுக்கு ஏற்பட்ட பார்ப்பன வெறுப்பினால், நம் நாட்டில் பார்ப்பனர் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து விலகினாலும், அந்த இடத்திற்கு ஒரு மாற்றாளாகப் பூணூல் இல்லாத பார்ப்பனர் (சைவர்) தான் வர முடிந்தது. அப்படி வந்ததும் அந்தப் பொதுவுடைமை ஸ்தாபனத்தில் பகுத்தறிவோ, மூடநம்பிக்கை ஒழிப்போ தலைகாட்ட முடியாத ஸ்தாபனமாகத்தான் அமைந்து தொண்டாற்றி வருகின்றது. பிறவி அந்தஸ்தை ஒழிப்பதற்குப் பதிலாக அதை விட்டுவிட்டு, வாய்ப்பு அந்தஸ்தை ஒழிக்கப் பாடுபடுவது - பிறவி அந்தஸ்துக்காரரை நிரந்தர அந்தஸ்துக்கு - சுகபோக வாழ்வுக்காரராக ஆக்கத்தான் பயன்படுகிறது.

(28.9.1972 அன்று 'விடுதலை'யில் எழுதிய தலையங்கம்)

பதிலடி


பெரியாரின் பல கருத்துகளில் பிடிக்-காததை விட்டு விட்டு பிடித்ததை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் பேசியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு விருந்து வைக்கப்பட்டிருக்கும் மேஜையில், விசக்கிருமிகள் பரவியிருந்தால் எதை எடுத்தாலும் ஆபத்துதானே! அந்த மாதிரி பிடித்த விசயம், வேறு பல விருந்துகளில் கிடைப்பவையே. அங்கே அவற்றை எடுத்துக் கொள்வது, ஆபத்தைத் தவிர்க்கிற வழி என்று வழக்கமான தனது விசமத்தனமான பதிலை 7.11.2007 துக்ளக் இதழில் வழங்கியிருக்கிறார் திருவாளர் சோ.
ஆண்டாண்டு காலமாக எம் மக்களையும், நாட்டையும் பொய்களாலும், புரட்டுகளாலும் பக்தி போதை ஏற்றி, அறிவைக் கெடுத்து, சுரண்டிக் கொழுத்த கூட்டம் அப்படி எழுதுவதில் ஆச்சரியம் இல்லை.
பார்ப்பன பனியாக்களால் விளைந்த கேடு-களை, அவலங்களை அனுபவித்து உணர்ந்த-வர்கள் கூட, ஆற்றாமையால் வாய் மூடிக் கிடந்த கால கட்டத்தில், அத்தனை அக்கிரமங்-களையும் துணிந்து நின்று தோலுரித்துக் காட்டிய ஈரோடு எரிமலையின், ஒப்பற்ற போராளியின் விருந்தில் விசக்கிருமிகள் பரவியிருந்ததாக, இந்த விசக்கிருமி சொல்வது ஒன்றும் புதிதல்ல. புரிந்துகொள்ளக்கூடியதே!
நச்சரவங்களின் நடமாட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டே மேற்கண்ட கேள்வி பதில்.
பெரியார் வைக்கும் விருந்தில் விசக்கிருமி-கள் என்கிற சோ, அவருடைய துக்ளக்கில் வைக்கும் விருந்தையும் பார்ப்போம்.
அதே (7.11.2007) இதழில் இரு வேறு பக்கங்களில் மக்களைக் குழப்புவதிலும், மூடக் குட்டையில் மூழ்கடிப்பதிலும் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்து மகா சமுத்திரம் எனும் தொடரில், ஆதிசங்கரர் பிறப்பு பற்றி சொல்கிறபோது, சிவகுரு-ஆர்யாம்பாள் இணையருக்கு பரமசி-வன் ஆதிசங்கரராகப் பிறந்தார். எட்டு வயதில், தாய் குளித்துக் கொண்டிருந்த ஆற்றில் தானும் குளித்துக் கொண்டிருந்தார். தாய் குளித்து முடித்து கரை ஏறியதும் சங்கரரின் காலை முதலை ஒன்று கவ்வியது.
கரையிலிருந்த தாய் பதறுகிறாள். அப்போது சங்கரர் பேசுகிறார்:
இந்த ஆபத்திலிருந்து மீள்வதற்கு ஒரு வழி இருப்பதை நான் உணர்கிறேன். அதை நீ ஏற்றால் எனக்குத் துர்மரணம் ஏற்படாது. இப்போதே நான் சந்நியாசம் பெற்றுக்-கொண்டால், நான் வேறு பிறப்பை எய்திய-வனாவேன். சந்நியாசம் என்பது தனிப் பிறப்பு என்பதால் இந்தக் கண்டம் நீங்கி, முதலை-யிடமிருந்து நான் தப்பிக்க வழி ஏற்படும்... ஒருவன் சந்நியாசம் பெற்றால் அவனுடைய மூதாதையர் களில் இருபத்தியோரு தலைமுறையினருக்கு நற்கதி கிட்டும் என்று சாத்திரங்கள் சொல்கின்றன. உனக்கும் உன்னத கதி கிட்டும் என்கிறார்.
அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. வழக்கமான அண்டப்புளுகுகளும், மாயா ஜாலங்களும் தான். கோபம், ஆத்திரம் ஸ்பெசலிஸ்ட் துர்வாசரின் சாபத்தால் முதலை ஆனவன். பரமசிவனின் காலடியைப் பற்றுகிற-போது சாப விமோசனம். இதுதான் கதை.
அடுத்து, அதே இதழின் 34ஆம் பக்கத்தில் பார்ப்பன சோதிடர் ஒருவர் தமது விளம்-பரத்தில் மகாபாரதக் காட்சி ஒன்றை எடுத்து- வைக்கிறார். அதையும் பார்ப்போம்.
மகாபாரதத்தில் ஒரு சம்பவம். அகத்திய முனிவர் பிராயம் வந்தும் திருமணம் செய்து, கொள்ளாமல் கல்வி, ஆன்மீகப் பயிற்சி ஆகிய-வற்றில் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் காட்டில் செல்லும் போது, ஒரு மரக்கிளையில் மூன்று முதியோர்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை வணங்கி, விவரத்தைக் கேட்க, அவர்கள் சொன்ன பதில் அகத்தியரை வியப்பில் ஆழ்த்தியது.
அகத்தியரின் தந்தை, தாத்தா, முத்தாத்தா ஆகியோர்தான் அம்மூவர்கள் என்றும் அகத்தியர் திருமணம் செய்து கொள்ளாதவரை முத்தாத்தா பிரம்மலோகத்திற்குப் போக முடியாதென்றும் அவர்கள் விவரமாகக் கூறினர்.
தன் மூன்று தலைமுறை முன்னோர்களை நற்கதி அடைவிக்கும் பொருட்டு, அகத்திய முனிவர் லோபா முத்ரா எனும் மங்கையை மணந்து குழந்தைகளைப் பெற்றார் என்று விவரிக்கிறது மகாபாரதம்!
ஒரே (நாளிட்ட) இதழ். ஒரு பக்கத்தில் (22) முன்னோர்கள் நற்கதி அடைய சந்நியாசமே சிறந்த வழி என்று சாஸ்திரம் கூறுகிறதாம். இன்னொரு பக்கத்தில் (34) திருமணம் செய்து குடும்பம் நடத்துவதே சரியான வழி என்று மகாபாரதம் கூறுகிறதாம்! இமயம் போல் தெரிகிற எவ்வளவு பெரிய முரண்பாடு! தலை சுற்றுகிறதா இல்லையா?
முன்னோர்கள் மோட்சம் அடைய எதுதான் வழி என்று நாம் கேட்க மாட்டோமா?
விருந்தில் விசக்கிருமிகளை உலவ விடுவது யார் என்று இப்போது தெரிந்திருக்கும்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு காட்சியில் டி.எஸ்.பாலையா சொல்வார் ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே என்று.
அப்படியே நாமும் சொல்ல வேண்டியிருக்-கிறது. எச்சரிக்கை!

நன்றி: "உண்மை"

வர்க்கத்தைக் கூறுபோடும் சாதி- தஞ்சை மாநாட்டில் வழக்கறிஞர் பானுமதி உரை!!

“உலக நாடுகளில் உள்ளது தொழில் பிரிவினைதான்; இந்த நாட்டில்தான் தொழிலாளர் பிரிவினை இருக்கிறது” என்று வழக்கறிஞர் பானுமதி மே.19 இல் தஞ்சையில் கழகம் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் குறிப்பிட்டார். அவரது உரை:

அன்றைக்கு சம்பூகனை கொலை செய்தான் இராமன். இன்றைக்கு பூணூலை அறுத்ததற்காக நமது தோழர்களை கைது செய்திருக்கிறது இந்த அரசாங்கம். இதற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தால் இந்த சாதீய அமைப்பிற்கு பார்ப்பனீயத் திற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்திருந்தால் இப்படி தேசப் பாதுகாப்பு சட்டம் என்பது பாயும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாதியை ஒழிப்பது என்பது ஏதோ சாதாரண விசயம் இல்லைங்க. பல பேர் சொல்லுவாங்க சாதி எல்லாம் நில பிரபுத்துவ காலத்து மிச்ச சொச்சங்கள். அந்த நில பிரபுத்துவ காலம் முடிந்தாகிவிட்டது. பண்ணை அடிமை முறை முடிந்தாகிவிட்டது. எங்கங்க இருக்கு சாதி? என்று கேட்பவர்களும் உண்டு. எல்லா நாட்டி லும் நிலபிரபுத்துவ ஆட்சி ஒழிந்தது. முதலாளித்துவ ஆட்சி மலர்ந்தது. சாதிகள் ஒழிந்துவிட்டன என்று கூறினார்கள். அதை பொய் என்கிறார் அம்பேத்கர். சாதியையும் தொழிலோடு ஒப்பிட்டு, அது ஒரு தொழில் முறை. தொழில் பிரிவு என்பது உலகத்தில் எல்லா இடங்களிலும் இருந்திருக்கிறது, இந்தியாவில் மட்டும் அல்ல என்று கூறி சாதியத்திற்கு ஒரு சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார்கள். அதையும் பொய் என்கிறார் அம்பேத்கர். எல்லா நாட்டிலும் தொழில்களை பிரித்தார்கள், தொழிலாளர்களைப் பிரிக்கவில்லை. அது இந்தியாவில் தான் நடந்தது.

பார்ப்பனீயமும், சாதியமும் தொழிலாளர்களைப் பிரித்தது, தொழிலை வைத்து அல்ல! அதுவும் தொழி லாளர்களை எப்படிப் பிரித்தது, ஏணி அடுக்கு முறையில் யார் பெரியவன் தாழ்ந்தவன் என்று பிரித்தது. இடதுசாரி கட்சிகள் சொல்லுகிற மாதிரி பாட்டாளி வர்க்கங்கள் சம நிலையில் தான் இருக்க வேண்டும். ஆனால் இந்துத்துவத்தில் பாட்டாளி வர்க்கங்கள் படி நிலையில் இருக்கிறார்கள். இந்த படி நிலை மற்ற நாட்டில் உள்ளது போல் ஏதோ தொழில் அடிப்படையில் நடந்த பிரிவினை அல்ல. தொழி லாளர்களை சாதியத்தின் மூலம் பிரித்து வைத்திருக் கிறார்கள். இந்த சாதீயம் என்கின்ற அமைப்பு மட்டும் இன்று வரை இவ்வளவு தூரம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் இதற்கு ஏதோ ஒரு அடிப்படை இருக்க வேண்டும்.

இன்றைக்கும் அரசியலில் சாதி இல்லை என்றால் அரசியலை நடத்த முடியாது என்கின்ற சூழ்நிலை வந்தாச்சு. என்னங்க நாங்க சாதியில்லாமல் அரசியல் நடத்த முடியுமா? என்பதுதான் இன்று கேள்வி. சாதி அரசியலை வைத்து இன்றைக்கு சனநாயகம் நடந்து கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மட்டும் குறிப்பாக இந்த சாதீய முறை எப்படி இவ்வளவு கட்டுக் கோப்பாக இன்று வரையிலும் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றது என்றால் அதைத் தான் அம்பேத்கர் சொல்கிறார், சாதி ஒரு சிறப்புத் தன்மை யானது. அது தானே இயங்கிக் கொண்டிருக்கின்றது. அது ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தன்னை உருமாற்றிக் கொண்டு எழுந்து நின்று கொண்டிருக் கின்றது. சில பழக்க வழக்கங்களை நாம் கைவிட் டோம் என்றால் அது அழிந்து போகும். அதே மாதிரி சாதிய பழக்கங்களை கைவிட்டால் அது அழிந்து விடும். ஆனால், இந்த சாதிய அமைப்பு முறை மட்டும் அழியாமல் இருக்கிறது. இதைத் தொடர்ச்சியாக கைப்பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இதற்கு பின்னணியில் பார்ப்பனர்களின் பிடியில் இருக்கக்கூடிய வேதங்களும், சா°திரங்களும், புராணங்களும், சமய நம்பிக்கைகளும், சடங்குகளும் இருக்கின்றன. அவை அத்தனையுமே புனிதமானவை என்பதே பார்ப்பான் நமக்கு இட்ட கட்டளை. அதனாலேயே சாதியை புனிதமானது என்பதே பார்ப்பான் நமக்கு இட்ட கட்டளை. அதனால் சாதியும் புனிதமானது என்று காப்பாற்றிக் கொண் டிருக்கிறார்கள். யாராவது நீங்க எந்த சாதி என்று கேட்டால் நமக்கு அருவருப்பாக இருக்கின்றது.

நான் வழக்கறிஞராக முதன் முதலாக நீதிமன்றத்திற்கு சென்றபோது ஒரு வழக்கறிஞர் என்னை கேட்டார், நீங்க நம்மாளா எனக் கேட்டார். அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டேன். அதற்கப்புறம் என்கிட்ட அவர் பேசவே இல்லை. எதை முதலில் தேடுகிறார்கள்? நம்முடைய அடை யாளம் என்ன? இவர் வழக்குரைஞரா? என்ன படித்திருக்கிறார்? என்ற கேள்வி அல்ல. இவர் எந்த சாதியச் சேர்ந்திருக்கிறார் என்ற அடையாளத்தையே தேடுகின்றார்கள். அருவருப்பாகத்தான் இருக்கிறது. சாதியத்தைச் சொல்லும்போது. ஆனால் இந்த சாதியை புனிதமானது என்று கொண்டாடிக் கொண்டு பார்ப்பான் திணித்த அந்த பண்பாட்டை இன்று வரை நாம் கடைபிடித்துக் கொண்டிருக் கிறோம். இந்த புனிதத் தன்மையை வைத்துத்தான் சாதியம் இன்றைக்கும் உயிர் பெற்றுள்ளது. கேள்விக்கு அப்பாற்பட்டதாக்கப்பட்ட சாதிமுறை புனிதமாக ஆக்கப்பட்டது. இந்த சாதிமுறை புனிதம் என்றால் எல்லோருக்கும் ஒரு மரியாதை வந்துவிடும். அதை வணங்கவேண்டும் என நினைப்போம். காப்பாற்ற வேண்டும் என நினைப்போம். உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என நினைப் போம். பார்ப்பனீயம் என்ன கற்றுக் கொடுக்கிறது தெரியுமா? இந்தியாவிலுள்ள ஒவ்வொருவனுக்கும் உள்ள மிகப் பெரிய சொத்து என்பதே அவனுடைய சாதி என கற்றுக் கொடுத்திருக்கின்றான். எதுவுமே இல்லையென்றாலும் சாதி என்று ஒன்னு இருக்கு என்பதுதான்.

அதனால் தான், காரல் மார்க்ஸ் பாட்டாளி வர்க்கத்திடம் உங்களிடமிருந்து உடைத்தெறிவதற்கு உங்கள் கையில் உள்ள விலங்குகளைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்று கூறினார். ஆனால் இந்தியா வில் இருக்கக் கூடிய ஒவ்வொரு பாட்டாளி வர்க்கத் திற்கும் தான் பெற்ற சாதி ஒரு அடையாள சொத்தாக இருக்கிறது. அதனால்தான் இன்று வரையில் அதன் கை விலங்குகளை உடைக்க முடியவில்லை என்று அம்பேத்கர் கூறினார். அந்த சாதி அடையாளத்தைக் காப்பாற்ற விரும்புகிறார்கள். இந்த அடையாளத்தை ஒழுக்கம் என்கின்ற நெறியை வைத்தோ, பகுத்தறிவு என்கின்ற ஒரு தீயை வைத்தோ கொளுத்தி அழித்து விட முடியாது என்று கூறுகிறார் அம்பேத்கர்.

பகுத்தறிவு என்பது எல்லாவற்றையும் கேள்விக் குள்ளாக்குவது. பார்ப்பனீயம் என்பது கேள்வியே கேட்காதே என்பது. கேள்வியே கேட்காதே நான் சொல்வதை ஏற்றுக்கொள் என்கின்ற பார்ப் பனீயத்தை நீங்கள் பகுத்தறிவுக் கொண்டு எரிக்க முடியாது. அல்லது ஒழுக்கத்தைக் கொண்டு எரிக்க முடியாது. இது மிகப் பெரிய கற்கோட்டைப் போன்றது. இதற்கு இராணுவமாக நிற்கிறார்கள் பார்ப்பனர்கள் என்கிறார் அம்பேத்கர். இந்த இராணுவப் பாதுகாப்போடு உள்ள இந்த கற்கோட்டையை தகர்க்க வேண்டும் என்றால், அதற்கு அணுகுண்டும் பீரங்கியும் வைத்துத்தான் நீங்கள் சிதறலை உண்டாக்க வேண்டும். சாதீயம் என்ற அமைப்பை நீங்கள் உடைக்க வேண்டும் என்றால் பார்ப்பனீயம் சொல்லி வந்த வேதம், சா°திரம், சம்பிரதாயங்கள், புனிதம் என்கிற கருத்துக்களை உடைப்பதற்கு பீரங்கி போன்ற குண்டுகளைக் கொண்டு நீங்கள் துளைக்க வேண்டும் என்றார் டாக்டர் அம்பேத்கர்.
எதற்காக இதைத் தகர்க்க வேண்டும்? இருந்து விட்டுப் போகட்டுமே என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள். இது மிகப் பெரிய ஆபத்து என்பதை கண்டுக் கொள்ளாத ஒரு சமூகம் இருக்கிறது என்றால் அது இந்திய சமூகம் தான். நாம் சமூகம் என்று கூட கூற முடியாது. சமூகம் என்றால் எல்லோருடனும் ஒட்டி உறவாட வேண்டும், ஒற்றுமையோடும், சரிசமமாகவும், சகோதரத்துவடனும் நாம் வாழ்க்கை நடத்தினால் அதை ஒரு சமூகம் எனக் கூறலாம். இங்கே சமூகம் இல்லை; சாதிகளின் தனித்தனிக் கூட்டம்தான் வாழ்கிறது. தனித்தனியாக இருக்கக் கூடிய ஒவ்வொரு சாதியும் தனித்தனியாக இருக்கக் கூடிய ஒரு தேசம் என்று கூறுகிறார் அம்பேத்கர்.

பார்ப்பனீயமும் ஏகாதிபத்தியமும்

இந்த பார்ப்பனீயத்தை ஏகாதிபத்தியத்திற்கு இணையாக கூறுகிறார் அம்பேத்கர். ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை தொடர்ச்சியாக ஒடுக்கிக் கொண்டே வந்தால், அது ஏகாதிபத்தியம்.
பார்ப்பனீயத்தை ஒரு தேசியம் என்கிறார் அம்பேத்கர். அந்த தேசியத்திற்கு அரசியல் எல்லை தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட எல்லை பரப்பு தேவையில்லை. அதற்குள் தனித்தனி தேசங்களாக இருப்பதுதான் சாதிகள். நாமெல்லாம் தனித் தனி தேசங்களாக இருக்கிறோம், ஒவ்வொரு சாதியும் ஒரு தேசம். இப்படி தனித்தனி தேசங்களாக இருக்கக் கூடியவர்களை நாமெல்லம் ஒரு தனித் தனி தேசமா ஒரு சாதிக்காரனா நினைக்கிறோம் என்றால் இந்த சாதியை உடைக்கிறது எவ்வளவு பெரிய விசயம். இதை உடைத்தெறிய வேண்டும். இதிலே வசதியான ஒரு விசயம் என்ன வந்திருக்குன்னு சொன்னா, இன்றைக்கு சம காலத்தில் இந்த சாதி முறையை ஒழிக்கவில்லை என்றால் நாம் மீண்டும் மீண்டும் வளர்ச்சி அடையாமல் அடிமையாகவே அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு இப்ப இருக்கக்கூடிய புதிய பொருளாதாரக் கொள்கை மூலமாக அடிமைப்பட்டு செத்துவிடுவோம் என்பதுதான் உண்மை. இந்த நாட்டின் பிரிவினை எது? சாதி.

சாதியும் வர்க்கமும் ஒன்றாக இருக்கிறது. பணக்கார வர்க்கம் உயர்சாதி. ஏழை தாழ்ந்த சாதி. இப்படிப்பட்ட பிரிவினைகள் இருக்கும் போது அந்நிய ஏகாதிபத்தியம் யாரை இன்றைக்கு துணையாக கொண்டிருக்கிறது. இந்தியாவில் என்றால், இந்தியாவிலுள்ள உயர்சாதி வர்க்கமாக இருக்கக்கூடிய பார்ப்பனீயத்தின் துணையோடுதான் இந்தியாவில் நுழைந்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இந்தியாவில் ஏகாதிபத்தியம் ஒரு சுரண்டலை நோக்கி வரும்பொழுது அதற்கு ஆதரவாக இருக்கக்கூடிய பார்ப்பனியமும், அதைச் சார்ந்த உயர்சாதி வர்க்கங்களும் பிழைத்துக் கொள் வார்கள். ஆனால் உழைக்கும் வர்க்கங்களாக இருக்கக் கூடிய நாம் அழிந்து விடுவோம். அதாவது 40, 50 வருடத்திற்கு முன்பாக ஆப்பிரிக்க நாட்டில் இருக்கக் கூடிய மக்கள் நாம் தெருவில் இறங்கி நடப்போம் என்று கூட கற்பனைச் செய்து பார்த்திருக்க மாட் டார்கள். ஆனால் நடந்தது, இன்றும் ஏகாதி பத்தியத்தின் உண்மையான நிலையை நாம் உணர்ந்து கொள்ளவில்லை என்றால் நமக்கும் அந்த சூழல் ஏற்படும். இன்றைக்கும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ளவர்கள் ஏகாதிபத்தியத்தின் நிலையைப் புரிந்து கொண்டு போராடி வென்றெடுத்திருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக ஒரே சமூகமாக ஒரே மக்களாக போராடியதுபோல் இங்கு போராட முடியுமா? ஒன்றாக நின்று ஒரே சமூகமாக நின்று இந்திய மக்கள் போராட முடியாது, சாதி இருக்கின்றவரையில்!

பார்ப்பனீயம் இருக்கின்ற வரையில் அந்தப் போராட்டத்தை அனுமதிக்காது. ஆனால், இந்த நாட்டில் நாம் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் கூட பார்ப்பனீயத்தை ஒழித்தால்தான் முடியும். எல்லோரும் என்ன சொல்லிக்கிட்டுருக்காங்க? இன்டர்நெட் கம்ப்யூட்டரைப் பற்றி பேசும்போது எல்லாம் அமெரிக்காவில் இருக்கக்கூடிய எல்லாம் இந்தியாவிற்கு வந்துவிட்டது. இந்தியாவிலுள்ள எல்லா இளைஞர்களுக்கும் வேலை கிடைத்து விட்டது. இது மாபெரும் முன்னேற்றம் என் கிறார்கள். இது ஒரு மார்டன் பண்ணை அடிமை. நவீன பண்ணை அடிமை. அமெரிக்க ஏகாதிபத்தி யத்திற்கு இங்கு இருந்து வேலை செய்து கொடுக்கிற ஒரு பண்ணை அடிமைத்தனம்தான். இது மீண்டும் மீண்டும் உங்களை சாதிய வலைக்குள்தான் சிக்க வைக்க முடியும். இதிலிருந்து யாரும் விடுபடலை. பெரிய கம்ப்யூட்டர் இன்சீனியரா இருக்கிறவர்கூட தன் சாதி, கோத்திரம், குலம் பார்த்து பெண் தேடு கிறார். ‘இந்து’ பத்திரிகையை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் எடுத்துப் பாருங்க, தெரியும். சாதியத்தை அது வென்றெடுக்காது. ஏகாதிபத்தியத்தை நீங்க முறியடிக்க முடியாது. ஆனால், இந்த நாட்டிலுள்ள சாபக்கேடு என்ன தெரியுமா? சாதிக் கட்சிகளில் இருக்கக் கூடியவர்கள் எல்லாம் இந்த நாட்டின் யதார்த்த சூழ்நிலையாக இருக்கக்கூடிய சாதியத்தை யும், பார்ப்பனீயத்தையும கவனிக்காத விளைவுதான் இங்கு புரட்சி ஏற்படவில்லை.
ஒரு சகோதரர் பேசும்போது சொன்னார், இந்த ‘பெரியார் திராவிடர் கழகக்’ கொடியிலுள்ள நட்சத்திரம் புரட்சியின் அடையாளம் என்று! சாதியை ஒழிக்காமல் புரட்சி நடத்த முடியாது. அம்பேத்கர் கூறுகிறார் - இந்த நாட்டில் வெறும் ஏழை பணக்காரன் பிரச்சனை மட்டும் இருக்க வில்லை. இங்கு சாதிப் பிரச்சனை இருக்கு. இங்கு சாதி இல்லாத ஒரு பாட்டாளி வர்க்கத்தைப் பார்க்க முடியாது. அதனால் உங்களால் ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியாது. அது உண்மை. சாதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத வர்க்கப் போராட் டமும், சாதி வர்க்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாத சாதீயப் போராட்டமும் வென்றெடுக்க முடியாது என்பதுதான். சாதி என்பது ஒழிக்கப்பட வேண்டும். அம்பேத்கர் வழியில்தான் போராடித் தான் வெல்ல முடியும். சாதியமே இல்லை என்று சொல்லாதீர்கள். நமக்கு நடைமுறையில் உதாரணங்கள் இருக் கின்றன.

நேபாளத்தில் சாதி இருந்தது. நேபாளத்தில் மாவோ°டுகள் போராடி அந்த கட்டமைப்பைத் தகர்த்திருக் கிறார்கள். ஈழத்தில் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. போரா டிக் கொண்டிருக்கிற நம் தமிழர்கள், சாதியத்தைக் கட்டுக் குலைத்திருக் கிறார்கள். அது நடந்துக் கொண் டிருக்கிறது.
சாதியத்தை ஒழிப்பது என்பது முடியாது என்பதல்ல. அதை போராட் டத்தின் ஊடாக முறியடிக்க வேண்டும் என்பதுதான். அப்படி நாம் முறியடிக்க வில்லை என்றால் மீண்டும், மீண்டும் பார்ப்பனீயத்திற்கு அடிமையாகி ஒரு சாதாரண பூணூல் அறுப்புக்குகூட 10 வருடம் சிறையிருக்கக் கூடிய நிலை தான் வந்து சேரும்.

ஆகவே, சாதியம் என்பது ஒழிக்கப் படக் கூடியது என்று கூறி முடிக்கிறேன் - என்றார் வழக்கறிஞர் பானுமதி.

தொகுப்பு : சொ. அன்பு

"புரட்சி பெரியார் முழக்கம்" என்ற மாத இதழில் வெளியானது.