மதியம் ஞாயிறு, பிப்ரவரி 10, 2008

என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலே எழுதும் கிறிஸ்தவ முக்காடு போட்ட இந்துத்துவ கும்பல்..

பார்ப்ப‌ன‌ இந்துத்துவ‌ கும்ப‌ல்க‌ள் முற்போக்காள‌ர்க‌ள், சிறுபாண்மைய‌ர்க‌ள் மத்தியில் மோத‌லை ஏற்ப‌டுத்த‌ வேண்டும் என்ற திட்ட‌மிட்ட‌ அணுகுமுறையோடு த‌மிழ்ம‌ண‌த்தில் நுழைந்திருக்கிற‌து, அத‌ற்கேற்ப‌ ப‌ல்வேறு பெய‌ர்க‌ளில் த‌ள‌ம் ஆர‌ம்பித்திருக்கும் அக்கும்ப‌ல் தொட‌ர்ந்து மோதலை ஏற்ப‌டுத்துகிற வகையில் பதிவிட்டு வருவதோடு, சிறுபாண்மைய‌ர் பெய‌ரில் பெரியாரை வ‌சைபாடுவது போன்ற‌ வேலைகளையும் செய்து வ‌ருகிற‌து, இந்த‌ ச‌திதிட்ட‌ம் ப‌ற்றி இத‌ற்கு முன்பே அனானிக‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், த‌மிழ்ம‌ணி என்று பெய‌ரிட்டுக்கொண்டு த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிராக‌ எழுதி வ‌ந்த ஒரு கும்பலை நானும் என‌து க‌ட‌ந்த‌ ப‌திவுக‌ளில் அம்பலப்படுத்தியிருக்கிறேன், இந்த‌ நிலையில் ஜ‌ன‌நாய‌க‌விரோத‌, ம‌னித‌ விரோத 'பார்ப்ப‌ன‌'ம‌ணிக்கு ஜ‌ன‌நாய‌க‌த்தை ப‌ற்றி பேசும் அருகதை கிடையாது என்று இன்று காலையில் நாம் ப‌திவிட்ட‌ அடுத்த‌ ஒரு ம‌ணி நேர‌த்திற்குள் த‌மிழ்ம‌ண‌த்தில் பெரியாரை வ‌சைபாடி ஒரு ப‌திவு வெளியானது.,

முஸ்லீம் என்ற‌ பெய‌ரில் கிறிஸ்த‌வ‌ த‌ள‌ம் ந‌ட‌த்துவ‌தாக‌ காட்டிக்கொள்ளும் ஒரு பார்ப்ப‌ன‌ இந்தும‌த‌வெறி நாய் ஒன்று அதில் பெரியாரை ஒருமையில் எழுதியிருப்ப‌தோடு, தீண்டாமை ஒழிவ‌த‌ற்காக‌ ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை இஸ்லாமுக்கு மாற‌ச் சொன்ன‌ பெரியாரின் க‌ருத்துக்க‌ளை எடுத்துப் போட்டு அத‌னை முன்னுக்கு பின் முரணான‌து, பெண்ண‌டிமைத‌ன‌த்தை எதிர்த்த‌ பெரியார் இஸ்லாமுக்கு மாற‌ச் சொல்ல‌லாமா? என்ற‌வாறெல்லாம் கேள்வி எழுப்பியப‌டி பெரியாரின் மீதும், இஸ்லாத்தின் மீதும் த‌ன‌க்கிருக்கும் வெறுப்பை வெளிப்ப‌டுத்திக் கொண்டிருக்கிறது.,

1934ம் வ‌ருட‌த்தில் மதம் மாற‌ப்போவ‌தாக‌ அறிவித்து அம்பேத்க‌ர் பார்ப்ப‌ன‌ர்க‌ளிட‌மும், சாதி இந்துக்க‌ளிட‌மும் பெரும் க‌ல‌க்க‌த்தை ஏற்ப‌டுத்தினார், அந்த‌ த‌ருண‌த்தில் அவ‌ரை முழுமையாக‌ ஆத‌ரித்த‌ த‌ந்தை பெரியார், த‌ன‌து குடிய‌ர‌சு இத‌ழில் எழுதிய‌ த‌லைய‌ங்க‌மான‌து கிறிஸ்த‌வ‌ முக்காடு போட்டிருக்கும் இந்துத்துவ‌ வெறிய‌ன் எழுப்பியிருக்கும் கேள்விக‌ளுக்கு ப‌தில‌ளிக்க கூடிய‌ வ‌கையில் அமைந்திருப்ப‌தால் அதிலிருக்கும் க‌ருத்துக்கள் சில‌வ‌ற்றை இங்கே ப‌திகிறேன். இனி பெரியார் எழுதுகிறார்...


வெளிப்படையாய் நாம் பேசுவதானால், அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும் நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால், அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.

முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம்; கோஷம் இருக்கலாம்; கடவுள் இருக்கலாம்; மூடநம்பிக்கை இருக்கலாம்; மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம்; சமதர்மமில்லாமலும் இருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம்.மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்;

நாஸ்திகர்களுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; சமதர்மவாதிகளுக்கும், பொதுவுடைமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.ஆனால், தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும், புழுத்த விஷக்கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவ பிள்ளை, கிறிஸ்தவ நாய்க்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லிம் என்றோ அழைக்க இடமில்லாமலும் அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்றசமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு, "எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்" என்கின்றவன் போனால், இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும், "சரி, எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்" என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.


நமக்குக் கடிதம் எழுதின நண்பர், "இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது; இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது; பெண்களுக்கு உறை போட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்" என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது, பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம்.

இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும்,தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும், சிலமூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள்.அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம்சீர்திருத்தமடைந்து வரவில்லை; இந்து மதம் ஒழிந்துவருகின்றது என்று தான் சொல்லுவோம்.

இந்து மதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை; அதைச் சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்து மத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொறுத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும், தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொறுத்தது அல்ல.

இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய, சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள், அம்பேத்கர் வேறு மதத்துக்குப் போவதை அனுமதிக்கக் கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான் நியாயமாகுமா?

ஆதலால், அம்பேத்கருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன், அம்முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரருடையவும் கடமையாகும் என்பது நமது அபிப்பிராயம்.



(17.11.1935 "குடி அரசு' இதழில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்)

13 comments:

கோவி.கண்ணன் said...

சரியான பதிலடி.

காந்தியைக் கொன்ற கோட்சேயும் இஸ்லாமியராக அங்க அடையாளத்தை மாற்றிக் கொண்டானாம். அதே உத்தி போல் தெரிகிறது.

கொண்டையை மறைக்க முடியாதே.
:))

அசுரன் said...

பெரியாரின் எழுத்துக்களை அதன் நடைமுறைத் தேவையுடன் புரிந்து கொள்ளும் வகையில் இங்கு அறிமுகப்படுத்துகிறீர்கள். குறிப்பாக பார்ப்பன மத வெறி கும்பல் எழுப்பும் கேள்விகள் எல்லாம் புதிதானவை என்பதைப் போல சிலர் எழுதும் போது இவையெல்லாம் வரலாற்றில் ஏற்கனவே நமது பார்ப்பன எதிர்ப்பு முன்னோர்களால் எதிர் கொள்ளப்பட்டு பதில் சொல்லப்பட்டவைதான் என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகிறது பெரியாரின் இந்த கட்டுரை.

பார்ப்பன கும்பலின் நரித்தனத்தை தொடரந்து அம்பலப்படுத்தி வருவதற்க்கு வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள்
அசுரன்

Anonymous said...

http://tbcd-tbcd.blogspot.com/2008/02/blog-post_11.html

Read this

Sathiyanarayanan said...

அருமை தோழரே

╬அதி. அழகு╬ said...

மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு நாய் வேஷம் போடணுமா? போடுவான்.

தெரிஞ்ச செய்திதானே.

தமிழரங்கம் said...

பார்ப்பன(தமிழ்)மணி ஜனநாயகம் பேசுகின்றது. அதுவோ எப்படிப்பட்ட ஜனநாயகம்.

இந்தியாவில் நிலவும் பார்ப்பனிய மனுதர்ம ஜனநாயகம். அத்துடன் உலகைச் சுரண்டிச் சூறையாடும் ஏகாதிபத்தியம் ஜனநாயகம்;.

இதைத்தான் இந்த பார்ப்பண(தமிழ்)மணி ஜனநாயகம் என்கின்றது. இதை அந்த பார்ப்பன(தமிழ்)மணி மறுக்கட்டும் பார்ப்போம்.

கம்யூனிட்டுகள் இந்த இழிவான பொறுக்கிகளிள் ஜனநாயகத்தைத் தான் மறுக்கின்றார்கள். சாதியின் பெயரால் சுரண்டும் பார்பனியத்தையும், உலகமயமாதல் ஊடாக மக்களை சுரண்டித்தின்னும் எகாதிபத்திய ஜனநாயகத்தையும் மறுக்கினர். இதை கம்யூனிட்டுகள், ஜனநாயகமாக அங்கீகரிப்பதில்லை. ஏன், எந்த மக்கள் தான், இதை ஜனநாயகம் என்கின்றனர்.

சாதியின் பெயரால் ஜனநாயகம் பேசி தின்னும் பார்ப்பனியத்தை, சக மனிதனை சுரண்டித் தின்பதன் பெயரால் பேசும் ஏகாதிபத்திய ஜனநாயகத்தையும் ஒழித்துக்கட்டுவது, மனிதனின் அடிப்படையான உரிமையாகும் அதுவே அவர்களின் ஜனநாயகம். இதை மறுப்பதையே, பார்ப்பண(தமிழ்)மணி ஜனநாயகம் என்கினார்.

Anonymous said...

மீன்காரத் தெரு என்று ஒரு நாவல் வெளிவந்துள்ளது.அது முஸ்லீம்களிடையே உள்ள சாதி போன்ற பாகுபாடுகளைக் காட்டுகிறது.
தலித் முஸ்லீம்கள் நாங்கள், எங்களுக்கும் தலித்கள் போல் இட
ஒதுக்கீடு வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார்கள். முஸ்லீம்களிடையே உள்ள மேல்/
கீழ் பாகுபாடுகளை சச்சார் கமிஷனே
ஒத்துக் கொண்டுள்ளது.
எனவே ஏதோ இஸ்லாமிய சமூகத்தில்
பாகுபாடே இல்லை, இருந்ததில்லை
என்று கூறுவது பிதற்றல், பச்சைப்
பொய்.

சம்பூகன் said...

அந்த நாவல் நான் படித்ததில்லை அனானி, அத்தோடு ஒரு இஸ்லாமியன் இன்னொரு இஸ்லாமியனின் வாயில் மலத்தை தினித்ததையும், முஸ்லீம் வீடுகளில் புகுந்து சூறையாடியதையும் கூட நான் படித்ததில்லை.,

நான் கோவையை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சில நாட்களூக்கு முன்பாக உரையாடிக்கொண்டிருத பொழுது கோவையில் அருந்ததியர்கள் சாதி இந்துக்களின் தாக்குதல் இல்லாதவாறு அமைதியாக வாழ்வது முஸ்லீம்கள் அதிகமாக வாழக்கூடிய கோட்டைமேடு பகுதியின் அருகில்தான் என்று அவர் கூறியதையும் இங்கு நினைவு கூர்கிறேன்

சம்பூகன்

சம்பூகன் said...

//இந்தியாவில் நிலவும் பார்ப்பனிய மனுதர்ம ஜனநாயகம். அத்துடன் உலகைச் சுரண்டிச் சூறையாடும் ஏகாதிபத்தியம் ஜனநாயகம்;.

இதைத்தான் இந்த பார்ப்பண(தமிழ்)மணி ஜனநாயகம் என்கின்றது. இதை அந்த பார்ப்பன(தமிழ்)மணி மறுக்கட்டும் பார்ப்போம்.//


உண்மை தோழர், இங்கு நிலவுகின்ற மனுதர்ம பார்ப்பனீய ஜனநாயகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பார்ப்பனமணியின் இவ்வளவு தூரம் துடியாய் துடிக்கிறார், பார்ப்பன கும்பல் தனது நலனையே இந்துக்களின் நலன் என்று கூறி சூத்திர பஞ்சமரகளை எண்ணிக்கைகாகவும், எடுபிடியாகவும் சேர்த்துக்கொள்வது போல பார்ப்பனமணி தனக்கான ஜனநாயகத்தையே ஒட்டுமொத்த இந்திய மக்களூக்கான ஜனநாயகமாக சித்தரிக்கிறார்.

சம்பூகன்

சம்பூகன் said...

தோழ‌ர்.இரயாக‌ரனின் ச‌மீப‌த்திய‌ ப‌திவுக்கான‌ பின்னூட்ட‌ம், அங்கே ப‌திவ‌தில் ஏதோ தொழில்நுட்ப‌ சிக்க‌ல் இருக்கின்ற‌ கார‌ண‌த்தால் அதனை இங்கே ப‌திகிறேன்.

தோழர் இரயாகரன் இந்த தளத்தினை வாழ்த்தியும், சம்பூகனுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கூறியும் ஒரு பதிவினை இட்டுள்ளார்கள், செயலுக்கு ஊக்கமளிக்கும் அவரது உற்சாக வரிகளுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய பாராட்டுக்களுக்கு நான் தகுந்தவனா என்று தெரியவில்லை, எனினும் ஒவ்வொரு பெரியாரியவாதியும் அவரது பாராட்டுக்கு தகுதியானவர்களே!! இல்லாவிட்டால் பார்ப்பன கூட்டம் தமிழ்மணத்தில் தனது ஆதிக்கத்தை நிறுவ பல வழிகளில் முயன்று ஒவ்வொருமுறையும் தோற்றுக்கொண்டே இருக்குமா? தமிழ்மணத்தின் கடந்த கால வரலாற்றில் பெரியாரியவாதிகளூம், மார்க்சியவாதிகளும் எதிரிகளை அவரவர் வழியில் எதிர்கொண்டு வீழ்த்தியிருக்கிறார்கள், பார்ப்ப‌ன‌ கும்ப‌லை எழ‌முடியாத‌ அள‌விற்கு அத‌ன் உயிர் நாடியிலேயே அடித்திருக்கிறார்க‌ள்., அத‌னால்தான் அவ‌ர்களை நேர்மையாக‌ த‌ன‌து க‌ருத்துக்க‌ளால் எதிர் கொள்ள‌ முடியாத‌ பார்ப்ப‌ன‌ ம‌த‌வெறி கும்ப‌ல் முக்காடு போட்டுக்கொண்டு குள்ள‌ந‌ரி வேலையில் ஈடுப‌டுகிற‌து. பெரியாரிய‌வாதிக‌ளையும், க‌ம்யூனிச‌வாதிக‌ளையும் மோத‌விட்டு இர‌த்த‌ம் குடிக்க‌லாம் என்று க‌ன‌வு காண்கிற‌து.

பெரியாரியவாதிகள் குறித்து கம்யூனிஸ்ட்களுக்கும், கம்யூனிஸ்ட்கள் குறித்து பெரியாரியவாதிகளுக்கும் விமர்சணங்களும், மனக்குறையும் கூட இருக்கக்கூடும் ஆனால் அதனை வெளிப்படுத்துவதற்கு இது தகுந்த தருணமல்ல என்றே நான் எண்ணுகிறேன், அப்படி செய்வது தமிழ்மணி பெயரில் இயங்கும் இந்துத்துவ கும்பல்களுக்கு வாய்ப்பாகவே அமையும், ஆகவே நமக்கிடையில் இருக்கும் விமர்சணங்களையும், விவாதங்களையும் பிறகொரு முறை வைத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

இது எதிரியை முழுமையாக அம்பலப்படுத்தி அவனை நிர்வாணமாக்கி நிறுத்தும் நேரம், அவன் பெரிதும் விதந்தோதும் இன்றைய பார்ப்பன‌ ஜனநாயகத்தை திரைகிழித்து அதனை கேள்விக்குள்ளாக்குவும், இந்துத்துவம் என்கிற பாசிச கொள்கை இந்தியாவில் இன்றிருக்கும் பேரளவிலான ஜனநாயகத்திற்கே எவ்வளவு எதிரானது என்பதை நிறுவுவதற்கும் ஏற்ற நேரம், இதனை உணர்ந்து பெரியாரியவாதிகளும், மார்க்சியவாதிகளும் ஜனநாயகவிரோத பார்ப்பனீயத்தினை தமிழ்மண வாசகர்க்கு அதன் உண்மை கோரமுகத்தோடு அறிமுகப்படுத்த‌ வேண்டும்.

திண்ணை போன்ற இணைய இதழ்கள் எல்லாம் முழுமையாக பார்ப்பனமயமாகி வக்கிரம் பிடித்த எழுத்துக்களால் நிரம்பி வழிகின்ற சூழலில் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் தமிழ்மணத்தை தனது தளமாக்கிக்கொண்டு பார்ப்பனீயத்தை தாக்க வேண்டும் என்பதையும், எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்பதையும் எனது வேண்டுகோளாய் முன்வைக்கிறேன், நானும் அவ்வாறே எழுத‌ முய‌ற்சிக்கிறேன்.

அன்ப‌ன்
ச‌ம்பூக‌ன்

சம்பூகன் said...

//கற்பனை செய்து பார்க்கிறேன், ஒருவேளை அன்றைய கம்யுனிஸ்டுகள் உண்மையான பாட்டாளி வர்க்க தன்மை கொண்டவர்களாக இருந்திருந்தால்?..... பார்ப்ப்னியமும், ஏகாதிபத்தியமும் கள்ள உறவு கொண்டவர்கள் இருவரையும் எதிர்க்கும் ஒரு போராட்டமின்றி இந்திய சமூகத்தின் விடுதலை சாத்தியமில்லை என்ற விசயத்தை பெரியார் பேசியிருந்திருப்பார். நமக்கும் பெரியாரியம், மார்க்ஸியம் என்று தனித் தனியாக பேசிக் கொண்டிருக்கும் தேவையில்லாமல் இருந்திருக்கும். ஏனேனில் பெரியார் பொருளாதாரத் துறை பேதமொழிப்பை நிராகரிக்கவில்லை இன்னும் சொன்னால் அதற்க்கு உரிமை கொண்டாடினார். ஆனால் அன்றைய கம்யுனிஸ்டுகள் பார்ப்ப்னிய எதிர்ப்பை அங்கீகரிக்கக் கூட இல்லை. இது வரலாற்று தவறு.//


இப்படியொரு கருத்தை தோழர்.அசுரன் ஒரு தளத்தில் பதிவு செய்திருக்கிறார், உண்மையில் பெரியாரை பற்றி சிலிர்க்கச்செய்யும் மதிப்பீடு இது.,

கம்யூனிசத்தை மதமாக பாவிக்கிறார்கள் என்று விமர்சணக்குரல்கள் கேட்கும் வேளையில் கம்யூனிஸ்ட்களை பற்றி ஒரு அச்சமற்ற சுயவிமர்சணத்தை தோழர். அசுரன் இதில் முன்வைத்திருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்கள்!!

மேலும் பெரியார் அரசை மாற்றாமலே பார்ப்பனீயத்தை தூக்கியெறிய முடியும் என்று கருதியதையும் கூட அதில் சுட்டிக்காட்டியிருக்கிறார், இதற்கு காரணம் அவரது அரசியல் உருவாக்கம் நிகழ்ந்த சமயம் என்றுதான் நாம் கருத‌ வேண்டும், அதுதான் அவர் சட்டபூர்வ கிளர்ச்சியாளராக வடிவமெடுத்ததன் காரணமாய் அமைந்திருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து எழுத முயல்கிறேன்.

சம்பூகன்

Anonymous said...

கிறித்துவ முகமூடியில் எழுதும் நாய் யார் என்பதை சுட்டியோடு எழுதுங்கள். நாங்களும் அவனை பிரித்து மேய வேண்டும்!

bala said...
This comment has been removed by a blog administrator.