‘ஜனநாயகம்’, ‘விவாதம்’ பற்றி பேசும் யோக்கியதை தமிழ்மணிக்கு உண்டா?

தமிழ்மணி என்ற பெயரில் எழுதி வரும் இந்துத்துவ கும்பல் பற்றி ஆதாரங்களோடு நாம் எழுதி வாரம் இரண்டாகிறது, தமிழ்மணி தரப்பிலிருந்து நம்முடைய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த விளக்கமும் இல்லை, தனது கணிப்பொறியில் ஈ கலப்பை வேலை செய்யவில்லை என்றும் அதனால் தமிழில் தட்டச்சு செய்யமுடியவில்லை எனவே அடுத்த வாரம் மறுமொழி அளிக்கிறேன் என்று கூறியிருந்தார் தமிழ்மணி, காட்டமான மறுமொழி வருமென்று நானும் ஆவலோடு காத்திருந்தேன், இப்பொழுது தமிழ்மணியின் கணிப்பொறியில் ஈ கலப்பை வேலை செய்கிறது, அவரும் நமக்கு பதில் சொல்லியிருக்கிறார் என்ன பதில் தெரியுமோ?

//சம்பூகனோடு எனக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவர் உண்மையிலேயே பெரியாரிஸ தொண்டராக இருந்தால், வாழ்த்துகிறேன். அவரது வழியில் அவர் சென்று கம்யூனிஸத்தை கண்டாலும் சரி, அல்லது பெட்டி பூர்ஷ்வாவாக ஆனாலும் சரி, அல்லது "தரகு முதலாளி(lol)" ஆக ஆனாலும் சரி. எனக்கு ஒன்றுமில்லை. அவர் முழுமையான கம்யூனிஸ்டாக ஆகி, அந்த கம்யூனிஸ பிரச்சாரத்தை அவர் செய்யும்போது அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.//

இதுதான் அவரது பதில், இப்படியொரு பதிலை தமிழில் தட்டச்சு செய்வதற்காகத்தான் இரண்டு வாரங்களாக காத்திருந்திருக்கிறார் தமிழ்மணி.,

என்னோடு அவருக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லையாம், நான் எனது உழைப்பு நேரத்தை செலவு செய்து, தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் இந்த பார்ப்பன மதவெறி கும்பல் பற்றியும், பெரியாரியவாதிகளையும், மார்க்சியவாதிகளையும் மோதவிடுவதற்கு இந்த கும்பல் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், இயல்பில் இந்த கும்பலுக்கு பெரியார் மீதும் அவரது அரசியல் மீதும் இருக்கும் வெறுப்பை பற்றியும் தகுந்த ஆதாரங்களோடு எழுதியிருக்கிறேன், நான் இவ்வளவு குற்றச்சாட்டுகளை அடுக்கிவைத்து அவரிடம் கேள்வி எழுப்பினாலும் கூட அவர் என்னை பொருட்படுத்தமாட்டாராம், என்னோடு பேசுவதற்கு அவரிடம் ஒன்றுமில்லையாம், எவ்வளவு பெரிய ஜனநாயகவாதி பார்த்தீர்களா? தன்னை நோக்கி எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, அதுவும் “கிசுகிசுவாக” அல்ல, ஆதாரத்தோடு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல மறுக்கும் ஜனநாயகவாதிதான் இந்த தமிழ்மணி, என்னோடு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று அவர் கூறுவதை நான் வேறு எப்படி எடுத்துக்கொள்வது, "ஆம், நான் ஒரு இந்துத்துவ பயங்கரவாத கும்பலை சேர்ந்தவன்தான்" என்று அவர் ஒத்துக்கொண்டதாக எடுத்துக்கொள்ளலாமா என்பதை அவர்தான் கூற வேண்டும்.

நான் பெரியாரிய தொண்டராக இருந்தால் என்னை வாழ்த்துகிறாராம், இவர் வாழ்த்திற்காக ஏங்கி கொண்டு நான் வரிசையில் நின்று கொண்டிருப்பது போல பேசுகிறார் இந்த தமிழ்மணிவாள்., உன்னை பார்ப்பன இந்துமதவெறியன் என்று நான் குற்றம்சாட்டியிருக்கிறேன், அதற்கான ஆதாரங்களை காட்டியிருக்கிறேன், அப்படியிருக்கும் பொழுது தனது கொள்கைகளை கூட மறைத்துக் கொண்டு எழுதுமளவுக்கு ஜனநாயக விரோத, மனித விரோத கொள்கையை கொண்டிருக்கும் உன்னிடம் எனக்கு உறவென்ன, வாழ்த்தென்ன?

என்னோடு இப்போதைக்கு விவாதிக்க மாட்டாராம் தமிழ்மணி, நான் என்று கம்யூனிஸ்டாக மாறுகிறேனோ அன்று வந்து என்னிடம் கம்யூனிசத்தை பற்றி விவாதிப்பாராம் அதாவது "அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பாவாக மாறும் பொழுது" இவர் பேசுவார் என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்(அப்பொழுதும் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டார், கம்யூனிசம் பற்றிதான் விவாதிப்பார்), தன்னை பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாத இந்த ஜனநாயகவிரோத ‘பார்ப்பன’மணிதான், ஜனநாயகத்திற்கு அத்தாரிட்டியாக தன்னை வரித்துக் கொண்டு கம்யூனிஸ்ட்களோடு விவாதிக்கிறாராம், மேல்நிலையில் இருக்கும் பார்ப்பன கும்பலின் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுவிடும் என்கிற பதட்டம்தான் தமிழ்மணியை ஆட்டிவைக்கிறதே ஒழிய அவருக்கு ஜனநாயகத்தின் மீது ஒரு மயிரளவு கூட மரியாதை கிடையாது என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது, பார்ப்பன பண்ணாடைக்கு ஜனநாயகத்தின் மீது என்ன மதிப்பு இருக்க முடியும்.

நம்முடைய கேள்விகளை தவிர்த்துவிட்டு கம்யூனிஸ்ட்களை சர்வாதிகாரிகளாக திட்ட கிளம்பியிருக்கும் தமிழ்மணி அந்த பதிவினிடையே இப்படி கூறுகிறார்,

//தற்போது பார்ப்பனீயத்தை தூக்கி பிடிக்கிறான்.. ஏதோ காரணம். காரணமா முக்கியம். கருத்து சொல்பவனின் வாயை மூடுவதுதான் முக்கியம்.//

அதாவது, இந்த தமிழ்மணி கும்பலின் வாயை அடைப்பதற்காக கம்யூனிஸ்ட்கள் அவரை பார்ப்பனன் என்று குற்றம்சாட்டுகிறார்களாம்., திருவாளர் தமிழ்மணி அவர்களே, உங்களது முகத்திரையை கிழித்து உங்கள் அருவெறுப்பான ஜனநாயக விரோத பார்ப்பன முகத்தை அம்பலப்படுத்தும் என்னை கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தி நீங்கள் எனது வாயை அடைக்க முயல்வது ஏன்?

மேலும் அந்த பதிவில் சவடால் அடித்தபடியே ஜனநாயக பஜனை பாடும் தமிழ்மணி, "நான் மருதையனோடே விவாதித்தவன் நோக்கு தெரியுமோ?" என்று தனது பிரதாபத்தை பற்றியெல்லாம் பேசுகிறார். மருதையனோடே விவாதித்த தமிழ்மணி இந்த சாதாரண சம்பூகன் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் இருப்பது ஏன்? என்று நாம் அவரிடம் கேட்கிறோம்.,

தமிழ்மணியின் நேர்மை பற்றி நமக்கு தெரியாததல்ல, மைசூர் அரண்மனையின் வடிவமைப்பில் கட்டப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தை பெரிய கோவில் வடிவில் கட்டப்பட்டது என்று வாய்கூசாமல் ஆணித்தரமாக பொய் சொன்னவர்தான் இந்த தமிழ்மணி, அதனை நான் பொய் என்று எடுத்துக் கூறிய பொழுது தனது தவறை ஒத்துக்கொள்ளாமல் எங்கேயோ படித்ததைதான் கூறினேன் என்று எழுதியவர்தான் இந்த யோக்கிய சிகாமணி, இவர் மருதையனோடும் மற்றவர்களோடும் விவாதித்த இலட்சணத்தை நாம் துருவி துருவி கேட்டால் "நான் மருதையன் என்றுதான் சொன்னேன் எந்த மருதையன் என்று சொன்னேனா? நான் கூறியது எங்க வீட்டுக்கு பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் மருதையனை" என்று கூட‌ பதில் கூறுவார், யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை என்றால் அடுத்த முறை எழுதும் பொழுது "நான் மாவோவோடே விவாதித்திருக்கிறேன்" என்று எழுதுவார், இதுதான் த‌மிழ்ம‌ணியின் நேர்மை, பெரியார் வாழ்நாள் முழுக்க‌ க‌ம்யூனிச‌த்தை எதிர்த்தார் என்று புர‌ளி கிள‌ப்பிய‌ பார்ப்ப‌ன‌ கும்பலிட‌ம் வேறு என்ன‌ நேர்மை இருக்கும்?

பெரியாருக்கு க‌ம்யூனிஸ்ட்க‌ள் க‌ருத்து சுத‌ந்திர‌ம் கொடுக்க‌மாட்டார்க‌ளாம்., இப்படி அக்கறை காட்டும் தமிழ்மணியிடம் கேட்கிறேன், இன்று பெரியாரிய‌வாதிக‌ளுக்கே க‌ருத்து சுத‌ந்திரம் இல்லையே அதுபற்றி நீங்கள் ஏன் இதுவரை எழுதவில்லை பார்ப்பனமணி?

ஒரு உதார‌ண‌த்திற்கு சொல்கிறேன் த‌ந்தை பெரியார் திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஜ‌ன‌வ‌ரி 5ம் தேதி நாத்திக‌ர் விழா கொண்டாட‌ போவ‌தாக‌வும், எம்.ஆர்.இராதா நூற்றாண்டு விழாவை அத்தோடு சேர்ந்து கொண்டாட‌ போவ‌தாகவும், அத‌ன் நினைவாக‌ சென்னை எம்.ஜி.ஆர் ந‌க‌ரில் ஒரு நிழ‌ற்குடை திற‌க்க இருப்ப‌தாக‌வும் அறிவித்த‌து, இத‌ற்காக‌ சுவ‌ரொட்டி அச்ச‌டித்து, நோட்டீஸ் விநியோகித்து பிர‌ச்சார‌மும் செய்து வ‌ந்த‌து, விழா ஏற்பாடுக‌ளெல்லாம் முழுமையாக‌ முடிவடைந்துவிட்ட‌ நிலையில், தென்காசியில் குண்டு வைப்ப‌த‌ற்கு ச‌திதிட்ட‌ம் தீட்டிக் கொடுத்த‌ இராம‌.கோபால‌ன் என்ற‌ தீவிர‌வாதி அந்த‌ விழாவிற்கு த‌டை உத்த‌ர‌வு வாங்கினான், அத‌ற்கு அவ‌ன் கூறிய‌ கார‌ண‌ம் நாத்திகம் பேசினால் இந்துக்க‌ளின் ம‌ன‌து புண்ப‌டும், மேலும் பெரியார் தி.க‌வுக்கும் நக்சலைட்டு தீவிர‌வாதிக‌ளுக்கும் தொட‌ர்பு இருக்கிற‌து., இப்ப‌டி பீதி கிள‌ப்பி அந்த‌ விழாவிற்கு த‌டையுத்த‌ர‌வு வாங்கிய‌ அந்த‌ ப‌ண்ணாடைத்தான் இன்று த‌ன‌து அலுவ‌ல‌க‌த்திற்கே குண்டு வைப்ப‌த‌ற்கு ச‌தி திட்ட‌ம் தீட்டியிருக்கிற‌து.

நாத்திக‌ பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ க‌ருத்து சுத‌ந்திரத்தை கூட மறுக்கும் இந்த‌ இந்துத்துவ‌ பாசிச‌வாதிக‌ள் ப‌ற்றி க‌ண்டித்திருக்கிறாரா த‌மிழ்மணி? பெரியாரிய‌ க‌ருத்துக்க‌ள் பேச‌க்கூடாது என்று க‌ம்யூனிஸ்ட்க‌ளா வ‌ந்து த‌டையுத்த‌ர‌வு வாங்கினார்க‌ள், த‌டையுத்த‌ர‌வு வாங்கிய‌வ‌ன் ஆரிய‌ இந்தும‌த‌ வெறிய‌னான‌ இராம‌.கோபால‌ன், நாத்திக‌ பிர‌ச்சார‌ம் செய்வ‌தை கூட‌ ச‌கித்துக்கொள்ளாத‌ அந்த‌ உரிமையையும் ம‌றுக்கின்ற‌ இந்த‌ பாசிச‌வாத‌ கும்ப‌ல் ப‌ற்றி த‌மிழ்ம‌ணி த‌ன‌து துவார‌ங்க‌ளை திறக்காதது ஏன்?

பெரியாரிய‌ கொள்கைக‌ள் பேச‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் க‌ருத்து சுத‌ந்திர‌ம் த‌ர‌மாட்டார்க‌ளாம் அத‌னால் இவ‌ர் க‌ம்யூனிஸ்ட்க‌ளோடு விவாதிக்கிறாராம், பெரியாருக்காக‌ பேசுவ‌தாக‌ கூறும் த‌மிழ்ம‌ணி த‌ன‌து கும்பலில் இருக்கும் ப‌ழைய‌ அனானி, பெரியாரிய கருத்துக்களை "இனவெறி கருத்துக்கள்" என்று எழுதிய பொழுது அதனை மறுக்காமல் மெளனம் சாதித்ததோடு அந்த பின்னூட்டதை பதிவாக்கி அந்த இந்துமத வெறியனை ஊக்கப்படுத்தியது ஏன்?

இப்படி பொய், புர‌ளி, ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ம் இவ‌ற்றை ஒருங்கே கொண்ட‌ தமிழ்ம‌ணி என்கிற‌ ஜ‌ன‌நாய‌க‌விரோத‌, ம‌னித‌ விரோத‌ பார்ப்ப‌ன‌ கும்ப‌ல் ஜ‌ன‌நாய‌க‌த்தை ப‌ஜ‌னை பாடுவ‌து உண்மையில் ஜ‌க‌ஜோதியாக‌த்தான் இருக்கிற‌து, ச‌ங்கர‌ச்சாரி தீண்டாமை எதிர்ப்பு பேசுவ‌து போல‌.,

கடைசியாக தமிழ்மணி உச்சஸ்தாயில் சொல்கிறார்

//ஓடிவிட மாட்டேன்//

"எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே இவுரு ர்ர்ர்ர்ரொம்ப நல்லவரு" இப்படி சொல்லுவதை தவிர நாம் வேறு என்ன சொல்லமுடியும் இதற்கு.,

19 comments:

Anonymous said...

பார்ப்பன போலிகளின் முகத்திரையைக் கிழிக்கும் உங்கள் பதிவுகளின் பணி தொடர வாழ்த்துக்கள்.

சம்பூகன் said...

நாம் மீண்டும் மீண்டும் தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் இந்துத்துவ சதிகார கும்பல் பற்றியே எழுதிக்கொண்டிருப்பது நண்பர்களுக்கு சலிப்பாக இருக்கலாம், முழுமையாக அம்பலப்பட்டுவிட்ட ஒரு கும்பலை பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவது நிச்சயம் சலிப்பாகத்தான் இருக்கும்.,

ஆயினும், இரண்டு நாட்களுக்கு முன்பு கிறித்துவ பதிவராக வேடமிட்டிருக்கும் பார்ப்பன கும்பல் ஒன்று, பெரியாரையும், இஸ்லாமையும் வசைபாடி எழுதிய பதிவொன்றை தமிழ்மணத்தில் கவனித்தேன்,இப்படி பார்ப்பன‌ கும்பல் பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு தமிழ்மணத்தில் நுழைந்திருக்கும் இந்த சூழலில் இப்படி அம்பலப்படுத்துவது நடுநிலையாளர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்ற காரணத்தினாலேதான் நான் இப்படி மீண்டும் மீண்டும் எழுத நேரிடுகிறது.,

விரைவில் இந்துத்துவ அரசியல் பற்றிய விமர்சன பதிவுகளும், பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்தும் பதிவுகளும் வெளிவரும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்., மேலும் பெரியாரிய, மார்க்சிய‌ கருத்துக்களை எதிர்கொள்வதற்கும், சிறுபாண்மை மக்களை வசைபாடுவதற்கும் பார்ப்பன பதர்கள் புதிய உத்திகளை கையாள துவங்கியிருக்கும் இந்த நேரத்தில் பார்ப்பனீயத்திற்கு எதிராக வீச்சாக செயல்படுவது அவசியம் என்றும் நமது நண்பர்களுக்கு கூறிகொள்கிறேன், அப்படி எழுதப்படும் பதிவுகளை சம்பூகனில் பதிப்பிப்பதற்கு எனது முழு சம்மதத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.,

சம்பூகன்

சம்பூகன் said...

வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி அனானி..

சம்பூகன்

Anonymous said...

ஒரு பார்ப்பன புண்ணாக்கு ஜனநாயகத்தை பற்றி பேசுவது முரண்நகைதான்.,

Anonymous said...

நான் ஷாகாவுக்கு போறதால இந்த வாரம் பதில் சொல்ல முடியாது, உன்ன மாதிரி திராவிட இனவெறி பிடித்தவர்கள் கேட்கும் கேள்விக்கெலாம் ஒரு வாரம் கழிச்சுத்தான் பதில் சொல்வேன்..

TBCD said...

முகத்திரையயை நூறு முறைக் கிழித்தாலும், வெட்கமில்லாமல் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல சொன்னதையே சொல்லுவார்கள் மானமற்ற மூடர்கள்.

வாழ்த்துக்கள் சம்பூகன்

Anonymous said...

// இந்த தமிழ்மணி கும்பலின் வாயை அடைப்பதற்காக கம்யூனிஸ்ட்கள் அவரை பார்ப்பனன் என்று குற்றம்சாட்டுகிறார்களாம்., //

இது தான் அவனது ஒப்புதல் வாக்குமூலம்.. “ஆமாண்டா நான் பாப்பான் தான்” என்று அவன் சொல்லி விட்டதாகவே எடுத்துக் கொள்ளலாம்..

//ஓடிவிட மாட்டேன்//

ஓட மாட்டான்கள்.. ஆனால் கடைசி வரையில் வேறு வேறு பெயர்களில் வந்து குழப்பம் ஏற்படுத்துவதைத் தொடர்வார்கள்.. “விட்டுது சிகப்பு” பதிவு கடைசி காலங்களில் ஒரு காமெடிப் பதிவாக எஞ்சி நின்றதைப் போல இனிமேல் “தமிழ்மணி” பதிவும் ஒரு காமெடிக் காட்சியாகத் தான் மிஞ்சி நிற்கும்.. ஆனால் இதை இப்படியே தொடர்ந்து கொண்டு நைசாக இன்னொரு பெயரில் இன்னொரு பாணியில் இதே வேலையை தொடர்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

ஒரு பக்கம் முசுலிம்களுக்கும் பெரியாரிஸ்டுகளுக்கும் மோதல் ஏற்படுத்த போலிப் பதிவுகள் - ஒரு பக்கம் கிருஸ்தவர்களுக்கும் முசுலிம்களுக்கும் மோதல் ஏற்படுத்த போலிப் பதிவுகள் - ஒரு பக்கம் கம்யூனிஸ்டுகளுக்கும் பெரியாரிஸ்டுகளுக்கும் மோதல் ஏற்படுத்த தமிழ்மணி அவதாரம்.. இப்படி போலித் தனங்களே தமது வாழ்கை முறையாகக் கொண்டவர்கள் தான் பார்ப்பனர்கள் என்பதை தெள்ளத்தெளிவாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்..
மக்கள் விரோத பாசிசத்தை 'விவாதம்' ‘ஜனநாயகம்' என்று அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத போர்வைகளுக்குள் ஒளித்து வைக்க முயற்சிக்கிறார்கள்..

கொஞ்சம் நாட்கள் முன்பு தங்களுக்கு கருத்து ரீதியில் தொல்லை கொடுத்த பதிவர்கள் எல்லோரையும் போலி என்னும் லேபிலுக்குள் அடைக்க இந்த நாய்கள் தான் முயன்று வந்தது என்பதை மறக்க முடியாது - பீயைத் தின்னும் பன்றி உலகில் எல்லோரும் பீயைத் தான் தின்பதாக நினைத்துக் கொள்ளுமாம்..

தொடருங்கள் சம்பூகன்

கார்க்கி

Sathiyanarayanan said...

"பார்ப்பனமணி" மட்டும் அல்ல பார்ப்பனக் கும்பலுக்கே உரித்தானது குள்ளநரித்தனமும், நயவஞ்சகமும் குணமும், பச்சோந்தி தன்மையும்.

இவர்களிடம் நீதியும், நேர்மையும் எதிர்ப்பார்பபது நாம் தற்கொலை செய்துக் கொள்வதற்க்கு சமம்.

தினமும் இவர்களதுத் தோல் உரிக்கப்பட வேண்டும் இல்லையேல் இவர்கள் நேரம் பார்த்து தங்கள் கருத்தைப் பரப்புவார்கள். நாம் இவர்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து பதியுங்கள் உங்கள் கருத்துக்களை, வாழ்த்துக்கள்

நன்றி

சம்பூகன் said...

நண்பர்களே தமிழ்மணியை அம்பலப்படுத்தி நாம் இந்த பதிவினை பதிந்த‌ அடுத்த ஒருமணிநேரத்திற்குள் தமிழ்மணத்தில் கிறிஸ்தவ பதிவர் என்ற முகமூடியில் பெரியாரை வசைபாடி வந்திருக்கும் பதிவை கவனியுங்கள்,

" என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசும் கருப்புச்சட்டை தலைவர்(பெரியார்)"

தமிழ்மணி ஆடாவிட்டாலும், கிறிஸ்தவ, இஸ்லாமிய முக்காடு போட்டுக்கொண்டு சதி வேலையில் ஈடுபட்டிருக்கும் அவரது சக பயங்கரவாதிகளின் தசை ஆடுவதை கவனியுங்கள் நண்பர்களே..

சம்பூகன்

அசுரன் said...

//என்னோடு அவருக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லையாம், நான் எனது உழைப்பு நேரத்தை செலவு செய்து, தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் இந்த பார்ப்பன மதவெறி கும்பல் பற்றியும், பெரியாரியவாதிகளையும், மார்க்சியவாதிகளையும் மோதவிடுவதற்கு இந்த கும்பல் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், இயல்பில் இந்த கும்பலுக்கு பெரியார் மீதும் அவரது அரசியல் மீதும் இருக்கும் வெறுப்பை பற்றியும் தகுந்த ஆதாரங்களோடு எழுதியிருக்கிறேன், நான் இவ்வளவு குற்றச்சாட்டுகளை அடுக்கிவைத்து அவரிடம் கேள்வி எழுப்பினாலும் கூட அவர் என்னை பொருட்படுத்தமாட்டாராம், என்னோடு பேசுவதற்கு அவரிடம் ஒன்றுமில்லையாம், எவ்வளவு பெரிய ஜனநாயகவாதி பார்த்தீர்களா? தன்னை நோக்கி எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, அதுவும் “கிசுகிசுவாக” அல்ல, ஆதாரத்தோடு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல மறுக்கும் ஜனநாயகவாதிதான் இந்த தமிழ்மணி, என்னோடு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று அவர் கூறுவதை நான் வேறு எப்படி எடுத்துக்கொள்வது, "ஆம், நான் ஒரு இந்துத்துவ பயங்கரவாத கும்பலை சேர்ந்தவன்தான்" என்று அவர் ஒத்துக்கொண்டதாக எடுத்துக்கொள்ளலாமா என்பதை அவர்தான் கூற வேண்டும்.//

வாழ்த்துக்கள் சம்பூகன்,

பார்ப்பனவாதிகள் தமிழ்மணத்தில் நேர்மையானதொரு முயற்சியில் ஈடுபட்டதில்லை இதுவரை. தமது பொய் பித்தலாட்டங்கள் மூலம் மட்டுமே ஆதிக்கம் செய்து வந்தவர்கள் அவை அம்பலப்படுத்தப்பட்டவுடன் கரப்பான் பூச்சி போல தலைமறைவாகிவிட்டிருந்தனர். தற்போது புதிய மாயமந்திரம் கற்ற விச ஜந்துகள் போல முக்காடிட்டு தமிழ்மணத்தில் குழப்பம் விளைவிக்க விரிவாக திட்டமிட்டு வேலை செய்கிறார்கள்.

இவர்களின் சொற்களிலிருந்தே இவர்களை அம்பலப்படுத்திய உங்களது பணி மிகச் சிறப்பானது வாழ்த்துக்கள்.

தொடரந்து பெரியார் குறித்தும், அவரது எழுத்துக்களின் நடைமூறைப் பயன்பாடு குறித்தும் பதிவுக்ள் இட்டு வலையுலக வாசகர்களுக்கு யார் இந்த ஈரோட்டு கிழவ்ன் என்று அறிமுகப்படுத்துங்கள்.

அசுரன்

லக்கிலுக் said...

சம்பூகன்!

தனி மனிதராக பார்ப்பன பொய்யர்கள் கூடாரத்தை தகர்த்து எறிந்திருக்கிறீர்கள்

வாழ்த்துகள்!

தமிழரங்கம் said...

பார்ப்பன(தமிழ்)மணி ஜனநாயகம் பேசுகின்றது. அதுவோ எப்படிப்பட்ட ஜனநாயகம்.

இந்தியாவில் நிலவும் பார்ப்பனிய மனுதர்ம ஜனநாயகம். அத்துடன் உலகைச் சுரண்டிச் சூறையாடும் ஏகாதிபத்தியம் ஜனநாயகம்;.

இதைத்தான் இந்த பார்ப்பண(தமிழ்)மணி ஜனநாயகம் என்கின்றது. இதை அந்த பார்ப்பன(தமிழ்)மணி மறுக்கட்டும் பார்ப்போம்.

கம்யூனிட்டுகள் இந்த இழிவான பொறுக்கிகளிள் ஜனநாயகத்தைத் தான் மறுக்கின்றார்கள். சாதியின் பெயரால் சுரண்டும் பார்பனியத்தையும், உலகமயமாதல் ஊடாக மக்களை சுரண்டித்தின்னும் எகாதிபத்திய ஜனநாயகத்தையும் மறுக்கினர். இதை கம்யூனிட்டுகள், ஜனநாயகமாக அங்கீகரிப்பதில்லை. ஏன், எந்த மக்கள் தான், இதை ஜனநாயகம் என்கின்றனர்.

சாதியின் பெயரால் ஜனநாயகம் பேசி தின்னும் பார்ப்பனியத்தை, சக மனிதனை சுரண்டித் தின்பதன் பெயரால் பேசும் ஏகாதிபத்திய ஜனநாயகத்தையும் ஒழித்துக்கட்டுவது, மனிதனின் அடிப்படையான உரிமையாகும் அதுவே அவர்களின் ஜனநாயகம். இதை மறுப்பதையே, பார்ப்பண(தமிழ்)மணி ஜனநாயகம் என்கினார்.

Anonymous said...

பெரியார் தி.க ஊர்வலத்தினை அனுமதிக்க மறுத்தது காவல்
துறை, ராம.கோபாலன் தடையுத்தரவு வாங்கவில்லை.

ஒரு பத்து பேர் பெரியாரியத்தை
வலைப்பதிவுகளில் தூக்கி நிறுத்த
முயற்சி செய்யலாம். நடப்பது
நடந்து கொண்டுதான் இருக்கும்.
மோடியும் சென்னைக்கு வருவார்,
இந்து முண்ணணியும் இயங்கும்.
ஆகையால் உங்களையெல்லம்
எதற்காக தமிழ்மணி பொருட்படுத்து
கிறார் என்பது தெரியவில்லை.
அசுரன், அவரது குரு மருதையன்,
வலைப்பதிவு புரட்சியாளர்கள் இவர்கள்
எந்த விதத்திலும் தீர்மானகர சக்திகள்
அல்ல.தேநீர் கோப்பை புரட்சியாளர்கள்,வலைப்பதிவு புரட்சியாளர்கள்- இவர்களால் என்ன
செய்ய முடியும்.பார்பனியம் பாசிசம்
என்று எழுதி ஒருத்தருக்கு ஒருத்தர்
பின்னூட்டம் இட்டுக் கொண்டிருப்பதைத் தவிர.
பி.கு. உங்கள் பதிவினைப் படித்து
வந்தாலும் இதுவே என் முதல்,கடைசி
பின்னூட்டம்.

சம்பூகன் said...

தோழர் அசுரன்,

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களூக்கும் நன்றி,

//பார்ப்பனவாதிகள் தமிழ்மணத்தில் நேர்மையானதொரு முயற்சியில் ஈடுபட்டதில்லை இதுவரை. தமது பொய் பித்தலாட்டங்கள் மூலம் மட்டுமே ஆதிக்கம் செய்து வந்தவர்கள் அவை அம்பலப்படுத்தப்பட்டவுடன் கரப்பான் பூச்சி போல தலைமறைவாகிவிட்டிருந்தனர். தற்போது புதிய மாயமந்திரம் கற்ற விச ஜந்துகள் போல முக்காடிட்டு தமிழ்மணத்தில் குழப்பம் விளைவிக்க விரிவாக திட்டமிட்டு வேலை செய்கிறார்கள்.//

உண்மை அசுரன், பார்ப்பன பண்ணாடைகள் ஒரு தெளிவான திட்டத்தோடுதான் இந்த முறை தமிழ்மணத்தில் தடம் பதித்திருக்கிறது, அந்த கும்பல் வெட்கங்கெட்ட முறையில் பலவிதமான முயற்சிகளை அன்றாடம் மேற்கொள்கிறது, பார்ப்பன எதிர்ப்பாளர்களூம், சிறுபாண்மை சகோதரர்களும், ஒருவரை ஒருவர் அரவணைத்துச் செல்ல வேண்டிய தருணம் இது.,

வெளிக்காட்டிக்கொள்ள முடியாத அளவுக்கு அருவெறுப்பானது இவர்களது இந்துத்துவ கொள்கையும் பார்ப்பன முகமும் என்பது அவர்களூக்கே தெரிந்திருக்கிறது
என்பதுதன் கூடுதல் சுவாரசியம் தரக்கூடிய விசயமாக இருக்கிறது.

//தொடரந்து பெரியார் குறித்தும், அவரது எழுத்துக்களின் நடைமூறைப் பயன்பாடு குறித்தும் பதிவுக்ள் இட்டு வலையுலக வாசகர்களுக்கு யார் இந்த ஈரோட்டு கிழவ்ன் என்று அறிமுகப்படுத்துங்கள். //

நிச்சயம் செய்வேன் அசுரன், ஜனநாயகத்திற்கு கம்யூனிஸ்ட்களால் ஆபத்து என்று இந்த பார்பனமணி அலறிக் கொண்டிருக்கும் வேளையில் இங்கு நிலவுகின்ற ஜனநாயகம் குறித்தும், பார்ப்பனீயமும், இந்துத்துவமும் ஜனநாயக கொள்கைகளா? என்பது குறித்தும் நமது நண்பர்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும். நானும் எழுதுவதற்கு முயற்சிக்கிறேன்.

சம்பூகன்

சம்பூகன் said...

//பெரியார் தி.க ஊர்வலத்தினை அனுமதிக்க மறுத்தது காவல்
துறை, ராம.கோபாலன் தடையுத்தரவு வாங்கவில்லை.//

தடை உத்தரவு வாங்கியது இராம கோபலன் என்கிற கிரிமினல், இதனை நான் பத்திரிக்கை செய்திகளோடும், ரவுடி ராமகோபாலனின் வாக்குமூலத்தோடும் நிரூபித்தால் உங்கள் முதுகில் உருளும் பூணூலை அறுத்தெரிய சம்மதமா அனானி("நான் அவன் இல்லை" என்று சொல்லிக்கொண்டு வராதீர்கள்)

//ஒரு பத்து பேர் பெரியாரியத்தை வலைப்பதிவுகளில் தூக்கி நிறுத்த முயற்சி செய்யலாம். நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கும். மோடியும் சென்னைக்கு வருவார்,
இந்து முண்ணணியும் இயங்கும். ஆகையால் உங்களையெல்லம் எதற்காக தமிழ்மணி பொருட்படுத்துகிறார் என்பது தெரியவில்லை.//

நடக்கிறது நடந்துதான் தீரும் என்கிற இந்த திண்ணை தத்துவத்தையெல்லாம் உங்களவா தமிழ்மணிகிட்டே போய் ஓதும் ஒய், கூடவே இந்து எழுச்சி வரலையேங்கற காரணத்துக்காக தனக்குதானே குண்டு வச்சிகிட்ட தென்காசி இந்து முன்னனிகாரணுகிட்டயும் போய் சொல்லுங்கோ நடக்கறது நடந்துதான் தீரும், இந்து எழுச்சியெல்லாம் தமிழ்நாட்டுல வராதுடா அம்பினு.,

//அசுரன், அவரது குரு மருதையன், வலைப்பதிவு புரட்சியாளர்கள் இவர்கள்
எந்த விதத்திலும் தீர்மானகர சக்திகள் அல்ல.தேநீர் கோப்பை புரட்சியாளர்கள்,வலைப்பதிவு புரட்சியாளர்கள்- இவர்களால் என்ன
செய்ய முடியும்.பார்பனியம் பாசிசம்
என்று எழுதி ஒருத்தருக்கு ஒருத்தர்
பின்னூட்டம் இட்டுக் கொண்டிருப்பதைத் தவிர.//

உங்கள பொறுத்த வரைக்கும் யார் தீர்மாணகரமான சக்தி ரவுடி ராமகோபாலனா? இவர்கள் தேநீர் கோப்பை புரட்சியாள்ர்கள், வாட்டர் பாட்டில் புரட்சியாளர்கள் இப்படி என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் ஆனால அவர்களது கொள்கையை வெளிப்படையாக பேசும் நேர்மை அவர்களூக்கு இருக்கிறது, உங்களவாக்கள் என்ன பன்றா பார்தேளா? முஸ்லீம் பேரு வச்சுண்டு கிறிஸ்தவாளை திட்டுறா, கிறிஸ்தவாள் பேரை வச்சுண்டு முஸ்லீமை திட்டுறா, தமிழ்மணின்னு பேரு வச்சுண்டு பெரியாரையே திட்டுறா, இந்து எழுச்சி வரலன்னு தனக்கு தானே குண்டு வச்சிக்கிறா, நீரும் இவாளுக்கு வக்காலத்து வாங்கிண்டு ஓடிவர்ரேள்.

சம்பூகன்

சம்பூகன் said...

//சம்பூகன்!

தனி மனிதராக பார்ப்பன பொய்யர்கள் கூடாரத்தை தகர்த்து எறிந்திருக்கிறீர்கள்

வாழ்த்துகள்!//


உங்களூடைய வாழ்த்துக்கள் ஊக்கமளிக்கிறது லக்கி, இந்த இந்துத்துவ பார்ப்பன கும்பலை சுட்டுவதற்கு 'பொய்யர்கள்' என்று சரியான வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள். வருகைக்கு நன்றி...

சம்பூகன்

சம்பூகன் said...

நம்முடைய பதிவுகளூக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் நண்பர் சத்தியநாரயணனுக்கு எனது நன்றி.

சம்பூகன்

சம்பூகன் said...

தோழர் இரயாகரன்

//இந்தியாவில் நிலவும் பார்ப்பனிய மனுதர்ம ஜனநாயகம். அத்துடன் உலகைச் சுரண்டிச் சூறையாடும் ஏகாதிபத்தியம் ஜனநாயகம்;.

இதைத்தான் இந்த பார்ப்பண(தமிழ்)மணி ஜனநாயகம் என்கின்றது. இதை அந்த பார்ப்பன(தமிழ்)மணி மறுக்கட்டும் பார்ப்போம்.//


உண்மை, இங்கு நிலவுகின்ற மனுதர்ம பார்ப்பனீய ஜனநாயகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பார்ப்பனமணியின் இவ்வளவு தூரம் துடியாய் துடிக்கிறார், பார்ப்பன கும்பல் தனது நலனையே இந்துக்களின் நலன் என்று கூறி சூத்திர பஞ்சமரகளை எண்ணிக்கைகாகவும், எடுபிடியாகவும் சேர்த்துக்கொள்வது போல பார்ப்பனமணி தனக்கான ஜனநாயகத்தையே ஒட்டுமொத்த இந்திய மக்களூக்கான ஜனநாயகமாக சித்தரிக்கிறார்.

வருகைக்கு நன்றி தோழர்..

சம்பூகன்

சம்பூகன் said...

//கற்பனை செய்து பார்க்கிறேன், ஒருவேளை அன்றைய கம்யுனிஸ்டுகள் உண்மையான பாட்டாளி வர்க்க தன்மை கொண்டவர்களாக இருந்திருந்தால்?..... பார்ப்ப்னியமும், ஏகாதிபத்தியமும் கள்ள உறவு கொண்டவர்கள் இருவரையும் எதிர்க்கும் ஒரு போராட்டமின்றி இந்திய சமூகத்தின் விடுதலை சாத்தியமில்லை என்ற விசயத்தை பெரியார் பேசியிருந்திருப்பார். நமக்கும் பெரியாரியம், மார்க்ஸியம் என்று தனித் தனியாக பேசிக் கொண்டிருக்கும் தேவையில்லாமல் இருந்திருக்கும். ஏனேனில் பெரியார் பொருளாதாரத் துறை பேதமொழிப்பை நிராகரிக்கவில்லை இன்னும் சொன்னால் அதற்க்கு உரிமை கொண்டாடினார். ஆனால் அன்றைய கம்யுனிஸ்டுகள் பார்ப்ப்னிய எதிர்ப்பை அங்கீகரிக்கக் கூட இல்லை. இது வரலாற்று தவறு.//


இப்படியொரு கருத்தை தோழர்.அசுரன் ஒரு தளத்தில் பதிவு செய்திருக்கிறார், உண்மையில் பெரியாரை பற்றி சிலிர்க்கச்செய்யும் மதிப்பீடு இது.,

கம்யூனிசத்தை மதமாக பாவிக்கிறார்கள் என்று விமர்சணக்குரல்கள் கேட்கும் வேளையில் கம்யூனிஸ்ட்களை பற்றி ஒரு அச்சமற்ற சுயவிமர்சணத்தை தோழர். அசுரன் இதில் முன்வைத்திருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்கள்!!

மேலும் பெரியார் அரசை மாற்றாமலே பார்ப்பனீயத்தை தூக்கியெறிய முடியும் என்று கருதியதையும் கூட அதில் சுட்டிக்காட்டியிருக்கிறார், இதற்கு காரணம் அவரது அரசியல் உருவாக்கம் நிகழ்ந்த சமயம் என்றுதான் நாம் கருத‌ வேண்டும், அதுதான் அவர் சட்டபூர்வ கிளர்ச்சியாளராக வடிவமெடுத்ததன் காரணமாய் அமைந்திருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து எழுத முயல்கிறேன்.

சம்பூகன்