'ஆர்.எஸ்.எஸ்'காரர்கள் உயிருக்கு ஆபத்து!!!

நாட்டில் தீவிரவாதமும் வன்முறையும் பெருக்கெடுத்திருக்கும் இன்றைய‌ நிலையில் ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னனிகாரர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லாத ஆபத்தான‌ நிலை ஏற்பட்டுள்ளது.


'ராமன் ஒரு குடிகாரன்' என்று வால்மீகி ராமாயணத்திலிருக்கும் ஒரு உண்மையை கூறிய காரணத்திற்காக ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையே தலையை எடுப்போம் என்று கூறிய இந்துத்துவவாதிகள் தங்களது உயிருக்கும், தலைக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் சுதந்திரமாக உலாவிய‌ அமைதி பூங்காவான தமிழ்நாட்டிலேயே இந்த நிலை ஏற்பட்டிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது.


கடந்த மாதம் 24ம் தேதி தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பும் அதையொட்டிய கைதுகளும் இதனை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.,


தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னனி அலுவலகங்கள் இயங்கிவந்தன. கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி இரவு 8.45 மணியளவில் அந்த‌ அலுவ‌ல‌க‌த்தை பூட்டிவிட்டு அனைவரும் சென்றுவிட்ட நிலையில் அதன் க‌த‌வ‌ருகே இர‌ண்டு பைப் வெடிகுண்டுகள் பெரும்சத்தத்தோடு வெடித்த‌ன‌, இவை சக்தி குறைந்த சாதாரண வெடிகுண்டுகள் என்று அதிகாரிக‌ளே கூறிய‌ போதும் கூட‌ அனைத்து ப‌த்திரிக்கைகளும் அங்கு ச‌க்திவாய்ந்த‌ வெடிகுண்டு வெடித்த‌தாகவே எழுதின, ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்த அதே சமயத்தில் தென்காசி பேருந்து நிலையத்தில் தேனி போவதற்காக‌ நின்று கொண்டிருந்த‌ ஆட்டோவிலும் குண்டுவெடித்தது அதில் ஒரு முதிய‌வ‌ர் காய‌ம் அடைந்தார்.


யார் இப்ப‌டியெல்லாம் குண்டுவைத்திருப்பார்க‌ள் என்று ம‌க்க‌ளோ, போலீசோ யோசித்து நேர‌த்தை வீண‌டிக்க‌கூடாது என்று அவ‌ர்களது சிர‌ம‌த்தை குறைக்கும் வ‌கையில் த‌மிழ‌க‌ ஆர்.எஸ்.எஸ். த‌லைவ‌ர் மாரிமுத்து "தமிழகத்தில் பயங்கரவாதிகள், மாவோயிஸ்ட் நக்சலைட்கள் போன்றவர்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருவதையே இச்சம்பவம் உணர்த்துகிறது." என்றும் "இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்." என்றும் அறிக்கைவிட்டார், த‌மிழ‌க‌ பார‌தீய‌ ஜ‌ன‌தா க‌ட்சி போராட்டமே ந‌ட‌த்தியது.,


இந்த‌ நிலையில்தான் த‌மிழ‌க‌ காவ‌ல்துறை இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளை கைது செய்திருக்கிறது.



இந்து முன்ன‌னியை சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு குண்டுவைத்ததாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர், இத‌ன் மூல‌மாக‌ ஆர்.எஸ்.எஸ் அலுவ‌ல‌க‌த்திற்கு அந்த‌ அமைப்பை சேர்ந்தவ‌ர்க‌ளே குண்டு வைத்ததும், அந்த பழியை இஸ்லாமிய ச‌கோத‌ர‌ர்களின் மீது சும‌த்தவே இந்த கேவலமான‌ செயலில் அவர்கள் ஈடுபட்டதும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து, "தீவிர‌வாதிக‌ளின் அடுத்த‌ குறி தென்காசிதான்" என்று இந்து முன்ன‌னி இராம‌.கோபால‌ன் சில‌ நாட்க‌ளுக்கு முன்பு கூறிய‌ நிலையில் இந்த‌ குண்டுவெடிப்பு அவ‌ரை க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்க‌ளால் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்டிருப்ப‌தும் இங்கு குறிப்பிட‌த்தக்கது.,

தி.மு.க‌வின் ஆட்சியில் வ‌ன்முறை பெருத்துவிட்ட‌து என்று உட‌ம்பின் அத்துனை துவார‌ங்க‌ளின் வெளியாக‌வும் ச‌த்த‌மிட்டுக்கொண்டிருந்த‌ சோவும், ஜெயாவும் ம‌த‌க்க‌ல‌வ‌ர‌த்தை உருவாக்கும் இந்த‌ கேடுகெட்ட‌ வன்முறை கும்ப‌லை க‌ண்டிப்ப‌த‌ற்கு த‌ன‌து ஆசன‌ வாயையாவது திறப்பார்க‌ளா என்றுதான் தெரிய‌வில்லை, அந்த வாயையே அவ‌ர்க‌ள் திற‌ந்தாலும் கூட‌ "இஸ்லாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளை த‌ப்புவிப்ப‌த‌ற்காக‌ இந்த‌ அர‌சு ஹிந்துத்துவ‌வாதிக‌ளின் மீது பொய் வ‌ழ‌க்கு போடுகிற‌து" என்றுதான் அது பேசும். சக்தி வாய்ந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக நேற்று வரை பீதி கிளப்பிய பத்திரிக்கைகள், அந்த சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்தது இந்துத்துவ பயங்கரவாத கும்பல்தான் என்பதை இப்பொழுது எழுதவில்லை. எப்பேர்பட்ட நடுநிலையான பத்திரிக்கைகள்.

எது எப்ப‌டி இருந்தாலும் இனி ஜாக்கிர‌தையாக‌ இருக்க‌வேண்டிய‌து ஆர்.எஸ்.எஸ் இந்துமுன்ன‌னி தொண்ட‌ர்க‌ள்தான், எவ்வளவுதான் அவர்கள் ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ கைதேர்ந்த‌ கொலைகார‌ர்க‌ளாய் இருந்தாலும் கூட‌, அதே போன்று ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ இன்னொரு ஆர்.எஸ்.எஸ் கொலைகாரனாலேயே அவ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் அவர்களூக்கு மிகப்பெரும் சவாலாய் அமைந்திருக்கிறது.

இன்று இஸ்லாமிய‌ர்க‌ள் மீது ப‌ழி போடுவ‌த‌ற்காக‌ த‌ங்க‌ள‌து அலுவ‌ல‌க‌த்திலேயே குண்டு வைத்துக்கொண்ட‌ ஆர்.எஸ்.எஸ்கார‌ர்க‌ள், நாளை இராம‌.கோபா‌ல‌ன் போன்ற ஹிந்து த‌லைவ‌ர்க‌ளின் க‌ட்ட‌ளையால் த‌ங்களது க‌ட்சி ஊழிய‌ர்க‌ளையே போட்டுத‌ள்ளூம் வாய்ப்பு இருக்கிற‌து, ஆக‌வே இந்துத்துவவாதிக‌ளே உஷார், இஸ்லாமிய‌ர்க‌ளின் மீது ப‌ழி போடுவ‌த‌ற்காக‌ நாளை நீங்க‌ளும் ப‌லி க‌டாவாக்க‌ப்ப‌ட‌லாம்.

7 comments:

சம்பூகன் said...

test

அசுரன் said...

//ஜெயாவும் ம‌த‌க்க‌ல‌வ‌ர‌த்தை உருவாக்கும் இந்த‌ கேடுகெட்ட‌ வன்முறை கும்ப‌லை க‌ண்டிப்ப‌த‌ற்கு த‌ன‌து ஆசன‌ வாயையாவது திறப்பார்க‌ளா என்றுதான் தெரிய‌வில்லை, அந்த வாயையே அவ‌ர்க‌ள் திற‌ந்தாலும் கூட‌ "இஸ்லாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளை த‌ப்புவிப்ப‌த‌ற்காக‌ இந்த‌ அர‌சு ஹிந்துத்துவ‌வாதிக‌ளின் மீது பொய் வ‌ழ‌க்கு போடுகிற‌து" என்றுதான் அது பேசும்.//.


அல்ரெடி அப்படித்தான் பேசிருக்கானுங்க. கைது செய்யப்பட்டவுடனே இப்படி பேளேட்டை திருப்பிப் போட்டு ஆர்பாட்டம் நடத்தத் துவங்கிவிட்டனர் குரங்கு படையினர்.


// சக்தி வாய்ந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக நேற்று வரை பீதி கிளப்பிய பத்திரிக்கைகள், அந்த சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்தது இந்துத்துவ பயங்கரவாத கும்பல்தான் என்பதை இப்பொழுது எழுதவில்லை. எப்பேர்பட்ட நடுநிலையான பத்திரிக்கைகள். //


எந்த பத்திரிகையிலும் இந்த செய்தி வரவில்லை. தினமலர் லோக்கல் பத்திரிகை மற்றும் தாட்ஸ் தமிழ் தவிர்த்து.

மற்றபடி சொந்த கட்சிக்காரர்களையே போட்டு தள்ளி அடுத்தவன் மீது பலி போடுவது உள்ளிட்ட மொள்ளமாறித்தனங்களை RSS கும்பல் பல ஆண்டுகளாகவே செய்து வருகீறது. இது இனிமேல்தான் நடக்க வேண்டும் என்று இல்லை. என்ன அவர்களுக்கு சிரமம் வைக்காமல் நாமலே அவர்களை போட்டுத் தள்ளுவது சிறப்பானதொரு ஐடியா. அதற்க்கு சம்மதிப்பார்களா என்று தெரியவில்லை. ஆட வெட்டுரதுக்கு முன்ன கேட்டுக்கிட்டா வெட்டுறானுவ...??

அசுரன்

சம்பூகன் said...

அருமை அருமை அசுரன், பல கணக்குகளை தீர்ப்பதற்காக நாமே காத்திருக்கும் பொழுது அவனுங்களுக்கு ஏன் கஷ்டம் நாமே அந்த திருக்காரியத்தை செய்து உதவலாம்.


சம்பூகன்

வீ. எம் said...

நல்ல சூடு கொடுத்துள்ளீர்கள் சம்பூகன்.

இதற்கு என்ன கதை சொல்லப்போகிறார்கள் ஆர் எஸ் எஸ், பா ஜ க , இந்துத்துவா ஜால்ராக்கள், பார்க்கலாம்.

பிறைநதிபுரத்தான் said...

'இஸ்லாமிய‌ர்க‌ள் மீது ப‌ழி போடுவ‌த‌ற்காக‌ த‌ங்க‌ள‌து அலுவ‌ல‌க‌த்திலேயே குண்டு வைத்துக்கொண்ட‌ ஆர்.எஸ்.எஸ்கார‌ர்க‌ள், நாளை இராம‌.கோபா‌ல‌ன் போன்ற ஹிந்து த‌லைவ‌ர்க‌ளின் க‌ட்ட‌ளையால் த‌ங்களது க‌ட்சி ஊழிய‌ர்க‌ளையே - போட்டுத‌ள்ளூம் வாய்ப்பு இருக்கிற‌து, ஆக‌வே இந்துத்துவவாதிக‌ளே உஷார், இஸ்லாமிய‌ர்க‌ளின் மீது ப‌ழி போடுவ‌த‌ற்காக‌ நாளை நீங்க‌ளும் ப‌லி க‌டாவாக்க‌ப்ப‌ட‌லாம்' - மிகவுனம் சரியாக சொன்னீர்கள் தோழர் சம்பூகன்.

சங்பரிவார் மற்றும் இந்து முன்னனியின் பருப்பு தென்காசியில் வேகவே வேகாது. சங்பரிவாரின் சதி திட்டத்தை இந்தியாவே விரைவில் புரிந்துக்கொள்ளும் வெகு தொலைவில் இல்லை. ஓட்டி வந்த கால் நடைகளோடு - கைபர்-போலன் வழியாக வெளியேறும் நாள் விரைவில் வரும்...

Anonymous said...

குஜராத்தை பிணக்காடாய் மாற்றிய இந்த வெறி பிடித்த கும்பல் இப்போது தமிழகத்திலும் தன் கைவரிசையை காட்டத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. இதை முளையிலேயே கிள்ளியெறிய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

Sathiyanarayanan said...

அருமை தோழரே

இந்து வெறியர்களுக்கு சாட்டையடி உங்கள் பதிவு

இந்து வெறியர்களும், சிங்கள வெறியர்களும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.

இவர்களுடைய தோல் தினமும் உரிக்கப்பட வேண்டும்

நன்றி