
இது ஒருபுறமிருக்க இங்கு வலைப்பூக்களில் தமிழ்மணி என்ற பெயரில் ஒருவர் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக எழுதிவருவதாக தெரிகிறது, அப்படியே அவர் எழுதிக்கொண்டிருந்திருந்தால் நாம் இந்த பதிவை எழுதவேண்டிய அவசியம் இருந்திருக்காது, ஏனெனில் கம்யூனிசத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வாதாட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை, சாதி சழக்குகள் வேரோடி போயிருக்கும் இந்தியாவில், பார்ப்பன இனம் போன்ற ஒரு கொடூர இனத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தியாவில் நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், பாட்டாளி, புரட்சி இவையெல்லாம் பொருளற்ற வார்த்தைகள்தான்., இதனை உணர்ந்த காரணத்தால்தான் பெரியார் "பார்ப்பனீயம் இருக்கும் வரையில் கம்யூனிசம் வராது" என்று தீர்க்கமாகவே கூறினார். ஆகவே தமிழ்மணி கம்யூனிசத்தை மட்டும் எதிர்த்திருந்தால் நமக்கு எந்த கவலையும் இல்லை ஆனால் அவர் கம்யூனிசத்தை எதிர்க்க போர்த்திருக்கும் ஜனநாயகப் போர்வையில் மனிதவிரோத பார்ப்பன முகத்தைதான் மூடிக்கொண்டிருக்கிறாரோ எனறு எண்ணும்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார். தமிழ்மணி என்ற பெயருக்கடியில் சமஸ்கிருதமணி(யாட்டி) ஒளிந்திருக்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது.
தமிழன் தான் விரும்பிய கடவுளை தனது மொழியில் வணங்குவதற்கு உரிமை கிடையாது என்பதை வரலாற்றில் பார்ப்பனீயம் பல காரணங்களை சொல்லி மறுத்திருக்கிறது, மழுப்பியிருக்கிறது, எதிரியை தூய்மையற்றவனாகவும் குற்றவாளியாகவும், நியாயமற்றவனாகவும் காட்டுவதன் மூலமாக தன்னை நியாயவானாக காட்டிக் கொள்வது என்பதே பார்ப்பனீயத்தின் பண்பாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் பொதுக்கூட்ட அழைப்பிதளை தனது வலைப்பூவில் போட்டிருக்கும் தமிழ்மணி என்பவர் இந்த பதிவை எழுதி கம்யூனிஸ்ட்களுக்கு கேள்விக் கேட்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தமிழர்களின் வழிபாட்டுரிமையை மறுத்திருப்பதோடு, "தமிழ் மொழி வேசி மொழி, வழிபாட்டுக்குரிய மொழியல்ல" என்ற பார்ப்பன மனுதர்மத்தை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
அவர் கம்யூனிஸ்ட்களை நோக்கி எழுப்பியிருக்கும் கேள்விகளில் சில பொதுப்படையாக நாத்திகர்களை நோக்கியதாக இருக்கிற காரணத்தால் சமஸ்கிருதமணிக்கு மண்ணிக்கவும் தமிழ்மணிக்கு பதிலளிக்கவும், அவரை கேள்விகேட்கவும் நாத்திகர்களாகிய நமக்கு தார்மீக உரிமை இருக்கிறது என்று நினைக்கிறேன், மற்றபடி அவர் குறிப்பாக கம்யூனிஸ்ட்களை நோக்கி எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு கம்யூனிஸ்ட்கள்தான் வந்து பதிலளிக்கவேண்டும்.
சரி இனி அவரது கேள்விக்குள் செல்வதற்கு முன் சில புரிதல்களை ஏற்படுத்திக் கொள்வோம்.,
தமிழர்கள் தங்களது மொழியில் தாம் விரும்பும் கடவுளை வணங்குவதையும், அர்ச்சிப்பதையும் தடுப்பதற்கு ஆகம விதிகள், பரம்பரை உரிமை என்ற பல்வேறு தந்திரங்களை பார்ப்பன கும்பல் பல காலமாக கையாண்டுவருகிறது, திராவிட மக்களை வேசி மக்கள் என்று கூறி கேவலப்படுத்தும் பார்ப்பனீயம் தமிழர்களின் மொழியான தீந்தமிழையும் "வேசிமொழி" "நீச மொழி" என்றும் பல்லாண்டு காலமாக கேவலப்படுத்திவருகிறது, அதையே சட்டமாக்கியும் வைத்துவிட்டது, அதனால்தான் தந்தை பெரியார் "சட்டப்படியும் சாஸ்திரபடியும் நம்மள தாசி மவன்னு சொல்றானே" என்று மேடைக்கு மேடை கூறினார்.
கடவுளை வழிபடவேண்டுமானால் தேவ மொழியான சமஸ்கிருதத்தில்தான் அர்சிக்க வேண்டும் என்று கூறிவருகிறது பார்ப்பன கும்பல். தமிழர்கள் ஆத்திகராயினும் நாத்திகராயினும் எவராயிருந்தாலும் சரி அவர்களை சூத்திரர்கள் என்று கூறி அவர்களை அவமானப்படுத்தியும் வருகிறது, இறைவனையே நினைத்து நெஞ்சுநெக்குருகி வேண்டி துறவு வாழ்க்கை பூண்ட குன்றக்குடி அடிகளாரானாலும் கூட அவரும் சூத்திரர்தான், எனவே அவர் போன்ற ஆதினங்களும் கருவறைக்குள் செல்லவோ குடமுழுக்கு செய்யவோ ஆகமவிதிப்படி தகுதியற்றவர்கள் என்கிறது பார்ப்பனீயம். சூத்திரர்கள் என்பதற்கு மனுதர்ம சாஸ்திரம் கீழ்கண்ட பட்டியலை தருகிறது
1. போரில் புறங்காட்டி ஓடியவன்.
2. போரில் கைது செய்யப்பட்டவன்.
3. பிராமணனிடத்தில் ஊழியம் செய்பவன்.
4. விபச்சாரி மகன்
5. விலைக்கு வாங்கப்பட்டவன்
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7. தலைமுறை தலைமுறையாய் அடிமை ஊழியம் செய்பவன்.
(மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் 8; சுலோகம் 4)
தமிழர்களையும் அவர்களது தாய்மொழியாம் இனிய தமிழ்மொழியையும் கேவலப்படுத்தும் பார்ப்பன கும்பலின் இந்த ஆரிய வெறி கொட்டத்தினை எதிர்த்து பெரியார் ஒரு பெரும் போராட்டமே நடத்தினார், பார்ப்பன புரோகித கும்பலின் அடிமடியிலேயே கைவைக்கும் வகையில் அனைவரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.,
"கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை" என்று தனது கடைசி மூச்சுவரை முழங்கி கொண்டிருந்த தந்தை பெரியார்தான், வைக்கம் எனுமிடத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலின் உள்ளே செல்லவும், கடவுளை தரிசிக்கவும் உரிமையற்றிருந்த பொழுது அவர்களுக்கு போராடி சிறை சென்றார், அந்த உரிமையை பெற்றுதந்தார், அதனால் "வைக்கம் வீரர்" என்றும் அழைக்கப்பட்டார். எத்தனையோ ஆத்திகவாதிகள் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த பொழுது இந்த நாத்திகவாதிதான் அவர்களுக்கான உரிமையை போராடி பெற்றுத்தந்தார், நாத்திகவாதிகளான சுயமரியாதை இயக்கத்தார்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமைக்காக போராடி அடி உதை வாங்கினார்கள், அடுக்கடுக்காக வழக்குகளை சந்தித்தார்கள், சிறை சென்றார்கள்.
இப்படி பெரியார் நடத்திய போராட்டங்களின் பொருள் என்ன? அவர் அனைவரையும் பக்தி செலுத்தச் சொன்னார், கடவுள் நம்பிக்கை கொள்ளச் சொன்னார் என்பதா? அப்படியல்ல, அவர் அதனை பக்தி சார்ந்த பிரச்சணையாக அனுகுவதற்கு மாறாக உரிமை சார்ந்த பிரச்சணையாக அணுகினார் என்பதுதான், இது போன்ற பல போராட்டங்களில் தந்தை பெரியாரோடு, தமிழ்திரு.குண்றக்குடி அடிகளாரும் துணை நின்று குரல் கொடுத்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.,
சரி இனி தமிழ்மணியில் கேள்விகளுக்கு செல்வோம், தமிழ்மணி கேள்வி எழுப்புகிறார், சிவனடியார் ஆறுமுகசாமி தலைமையில் பெரியார்தாசன் பேசுகிறாரே "கடவுள் இல்லை! கடவுளை பரப்பியவன் அயோக்கியன்!! கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி!!!" என்று பேசுவாரா என்று கேட்கிறார். பெரியார்தாசன் என்ன பேசுவார் என்பதை அறிய இவ்வளவு ஆர்வம் காட்டுகிற தமிழ்மணி, இரண்டு நாட்களுக்கு முன்பே நிகழ்ச்சி முடிந்துவிட்ட காரணத்தால் போய்வந்தவர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம், இவ்வளவு எளிதான வழி இருக்கும் பொழுது "என்ன பேசுவார் என்ன பேசுவார்" என்று மண்டையை போட்டு பிய்த்துக் கொண்டால், தமிழர்களின் தாலியறுக்க மண்டையை பிய்த்து வழுக்கையாய் போன சோ கதிதான் இவருக்கும் ஏற்படும்,.
தமிழ்மணிக்கு விழாவுக்கு போய் வந்தவர்கள் யாரையும் தெரியவில்லையானால் குன்றக்குடி அடிகளார் மேடையில் வீற்றிருக்க பெரியார் பேசிய பேச்சுக்களை படித்து, ஒரு நாத்திகவாதி என்ன பேசியிருப்பார் என்ப்தனை ஊகித்துக்கொள்ளலாம்.,
//இந்த கூட்டத்தை நடத்துவது அதிகாரப்பூர்வமான நாத்திக இயக்கமான மக்கள் கலை இலக்கிய கழகம். உங்களுக்கு கோவிலில் என்ன பாடினால் என்ன? அவர்கள் உருதுவில் பாடுகிறார்கள், ஸ்வாஹிலியில் பாடுகிறார்கள், அல்லது அல்லேலூயா என்று கத்துகிறார்கள்? அப்துல்காதருக்கும் அம்மாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பதுபோல, நாத்திகர்களுக்கும், கோவிலில் எந்த மொழியில் பாடுவதற்கும் என்ன சம்பந்தம்? புரியவில்லை என்றால் உதாரணம் தருகிறேன். என் வீட்டுக்குள் என் மனைவியை (பக்கத்து வீட்டுக்காரனுக்கு) புரியாத மொழியில் கொஞ்சுகிறேன் என்று பக்கத்து வீட்டுக்காரன் கேஸ் போடுவது போல இல்லை?//
எவ்வளவு புத்திசாலித்தனமான கேள்வி பார்த்தீர்களா, நமக்கு புரிய வேண்டும் என்பதற்காக உதாரணம் வேறு கொடுத்திருக்கிறார், இந்த உதாரணத்தை பார்க்கும் பொழுது எனக்கு ஒரு உதாரணம் தோன்றுகிறது, நாம் போகின்ற வழியில் ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஒருவன் தனது மனைவியை போட்டு அடித்து துவைக்கிறான், அவனிடம் "ஏன்யா இப்படி செய்யுற உன்னோட மனைவிதான, இப்படி போட்டு அடிக்கலாமா?" என கேட்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் "என்னோட பொண்டாட்டி நான் போட்டு அடிக்கிறேன் கேட்கிறதுக்கு நீ யாருடா? நீ என்ன அவள வச்சிகிட்டிருக்கியா?" என்று கேட்கும் கேவலமான ஆணாதிக்க வக்கிரம் பிடித்தவர்கள் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள், இது போன்ற பார்ப்பன மேலாதிக்க வக்கிர சிந்தனை கொண்ட மதம்தான் பார்ப்பன இந்து மதம், நாம் அதனை கேள்வி கேட்டால் "நாங்க என்ன வேணும்னாலும் பண்ணுவோம், நீ நாத்திகவாதிதானே கேள்வி கேட்காத" என்பதுதான் பார்ப்பனர்களின் குரலாக இருக்கும் இதனைதான் இராமகோபாலய்யரிலிருந்து அத்தனை பேரும் பேசுகிறார்கள், இங்கு தமிழ்மணி(எ)சமஸ்கிருதமணி அய்யரும் அதையே எழுதியிருக்கிறார்.
நாத்திகவாதியாகிய உனக்கு கேள்வி எழுப்ப உரிமை இல்லை, நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வோம் என்று கூறுகிறார். என்ன வேண்டுமானாலும் என்றால் வரலாற்றில் நந்தனை எரித்தது போல் எரித்துவிடலாம் அல்லது சில ஆண்டுகளுக்கு முன்பு யார் துணையுமின்றி ஆறுமுகசாமி போராடிய பொழுது அவரை அடித்து துவைத்து வெளியே எறிந்ததே தீட்சிதர் கூட்டம் அப்படி கூட செய்யலாம்.,
"ஆத்திகர்களாகிய நாங்கள் எங்களுக்குள்ளேயே பிரச்சணையை தீர்த்துக் கொள்வோம்" என்பதுதான் தமிழ்மணியின் வாதம், பிரச்சணையை தீர்ப்பது என்பதை தமிழில் பாடவிரும்பும் ஆறுமுகசாமியையே தீர்த்துவிடுவது என்று கூட வைத்துக்கொள்ளலாம்.,
தமிழில் பாட விரும்பும் ஆறுமுகசாமி இன்றைய நிலையில் தீட்சிதர்களின் அச்சுறுத்தலால் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் இருக்கும் பொழுது அதை பற்றி பேச வாயெடுக்காத தமிழ்மணி, நாளை கம்யூனிச ஆட்சி வந்தால் அவரை கொண்றுவிடுவார்களோ என்று கவலைப்படுகிறார், "கொண்று விடுவீர்களா?" என்று கம்யூனிஸ்ட்களூக்கு கேள்வியும் எழுப்புகிறார். அதனால் கம்யூனிஸ்ட்களோடு சேர்ந்து போராடாதீர்கள் என்று ஆறுமுகசாமியையும் நம்மையும் எச்சரிக்கிறார்.
அட அட என்ன அக்கறை, யாரோடும் சேராவிட்டால் தீட்சிதர் பொறுக்கி கூட்டம் ஆறுமுகசாமியை இன்றே கொன்றுபோட்டுவிடுமே, சில ஆண்டுகளுக்கு முன்பு யார் துணையுமின்றி தன்னந்தனியாக ஆறுமுகசாமி தமிழில் பாட முயன்ற பொழுது அவரை அடித்து துவைத்து கையை முறித்து தூக்கி வெளியே வீசி அவரை கொன்றொழித்துவிட முயன்றது தீட்சிதர் ரெளடி கூட்டம். அந்த கொடூர கும்பல் இன்றும் வாய்ப்பு கிடைத்தால் அவரை அழித்தொழிக்கவும் தயங்காது., தமிழ்மணி ஏன் அதனை பேச மறுக்கிறார்? என்றோ வரப்போகும் கம்யூனிச ஆட்சியில் ஆறுமுகசாமிக்கு பாதுகாப்பு கொடுக்கவும், உரிமைக்குரல் கொடுக்கவும் இன்றே கிளம்பிவிட்ட தமிழ்மணி, ஆறுமுகசாமிக்கும், அவர் பாட நினைக்கும் தமிழ்மொழிக்கும் இன்றிருக்கும் அவல நிலையை பற்றி பேசாமல் இருப்பதன் மர்மம் என்ன?
//அதென்ன கோவிலை அரசுடைமையாக ஆக்குவது? அது காலம் காலமாக தனியார் கோவில். அதனை அவர்களே கட்டியிருக்கமாட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். எவனோ ராஜா அவர்களிடம் தாரை வார்த்தான் என்றே வைத்துக்கொள்வோம். அதற்கு என்ன இப்போது? இருந்துவிட்டு போகட்டுமே. பங்காரு அடிகளார் பிரம்மாண்டமாக கோவில் கட்டியிருக்கிறார். மக்களிடம் உண்டியல் வைத்து அவர்கள் கொடுத்த பணத்தில்தான் கட்டியிருக்கிறார். அதில் தமிழில் பஜனை பாடினால், அதன் உள்ளே போய் ரஷிய மொழியில் பாடு, அல்லது சீன மொழியில் பாடு என்று சொல்வீர்களா? முடிந்தால் நீங்கள் பக்கத்தில் ஒரு கோவிலை கட்டுங்கள். அதற்கு கூட்டம் சேருங்கள்.//
அடக்கொடுமையே அழைப்பிதளை எடுத்துப்போட்டிருக்கும் தமிழ்மணி அதனை முழுமையாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன், ரஷிய மொழியிலோ, சீன மொழியிலோ வழிபட வேண்டும் என்பதற்காக யாரும் இங்கு போராடவில்லை தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் வழிபட வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டமே, ஏதோ சிதம்பரத்தில் தீட்சிதர்கள் தீந்தமிழ் சொட்ட சொட்ட பாடிக்கொண்டிருபப்து போலவும், கம்யூனிஸ்ட்கள் வந்து ரசிய மொழியில் பாடு சீன மொழியில் பாடு என்று போராடியது போலவும் திசை திருப்புகிறார் தமிழ்மணி, அதென்ன கோவிலை அரசுடைமயாக்குவது என்று ஒரு அசட்டுத்தனமான கேள்வியை வேறு கேட்கிறார், மன்னன் கட்டினானோ எவன் கட்டினானோ அந்த கோவில் உருவானது இந்த மண்ணின் மைந்தர்களின் வியர்வை துளியில், அவர்கள் மொழி தமிழ், அவர்களின் உழைப்பில் உருவான கோவிலை அரசாங்கம் வைத்துக்கொள்வதை விட தண்டச்சோறு தின்னும் தீட்சிதர்கள் வைத்துக்கொள்வதுதான் நியாயமா?
இன்றும் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாட்டுக்கும் செல்வதற்கு தனிப்பாதையையும், தேநீர் கடைகளில் குடிப்பதற்கு தனிக்குவளையையும்தான் கொடுக்கிறார்கள் ஆதிக்க சாதி வெறியர்கள். அது போல சமஸ்கிருதமணி சாரி தமிழ்மணி நமக்கு யோசனை சொல்கிறார் தமிழில் வழிபட வேண்டுமானால் உங்களுக்கென்று தனிக்கோவில் கட்டி கூட்டம் சேருங்கள், நாங்க டெவலப் பண்ணி வச்சிருக்கிற பிசினசில மண்ண வாரி போடாதீங்க என்கிறார்.
இப்படி பேசத்தொடங்கி வழக்கமான தனது பாணியில் மாவோ ஸ்டாலின் பற்றி கம்யூனிஸ்ட்களுக்கு கேள்விகளை கேட்டு கொண்டே இடையில் இன்னொரு விசயத்தையும் சொருகிவிடுகிறார் தமிழ்மணி கவனியுங்கள்..
//சங்க இலக்கியங்களில் கடவுள் பெயர் குறிப்பிடாத பாடல்கள் மிகச்சில மட்டுமே மிஞ்சும் என்று நினைக்கிறேன். அவை என்ன என்ன என்று தணிக்கை செய்துவிட்டீர்களா?//
அட சங்க இலக்கியத்தில் கடவுள்பெயர் குறிப்பிடாத பாடல்கள் மிகச்சிலதானாம், சங்க இலக்கியத்தை அலசி ஆராயந்திருக்கும் தமிழ்மணி எத்தனை பாடகல்கள் கடவுள் பெயரோடு இருக்கிறது என்றும் கடவுள் பெயர் குறிப்பிடாத அந்த மிகச்சில பாடல்கள் எத்தனை என்றும் குறிப்பிடுவாரா?
இப்படியாக தமிழ்மணி என்ற நாமகரணம் தாங்கியபடி கம்யூனிஸ்ட்களூக்கு கேள்விகள் என்ற பெயரில் விஷத்தை கக்கிவிட்டு இறுதியில் பெரியாரியவாதிகளுக்கு தடவிக்கொடுத்து கம்யூனிஸ்ட்களை நோக்கி கொம்பு சீவுகிறார் இந்த தமிழ்மணி(எ)சமஸ்கிருதமணி. பிரித்து வைத்து மோதவிட்டு பலன் அனுபவிப்பது, மேலாதிக்கம் செலுத்துவது பார்பணீயத்தின் பல்லாண்டு கால பழக்கம், இன்று திடீரென்று மாறிவிடுமா என்ன?
சரி நாமும் அவருக்கு சில கேள்விகளை வைப்போம்,
அனைத்து தமிழர்களுக்கும் கருவறையின் உள்ளே சென்று தனது மொழியில் வழிபட உரிமை இருக்கிறதா இல்லையா? இல்லை என்றால் ஏன்? இந்த போராட்டம் சரியா தவறா?
சிதம்பரம் கோவிலை ஏன் அரசுடைமையாக்கக்கூடாது?
கடவுள் பெயரை குறிப்பிடாத அந்த மிகச்சில சங்கத்தமிழ் பாடல்கள் எத்தனை?
ராமனையும் கிருஷ்ணனையும் வசைமாறி பொழிவது தவறா?
நீங்கள் தன்மான தந்தை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லை? ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் எந்த வகையில்? மறுக்கிறீர்கள் என்றால் எந்த வகையில்?
குறிப்பு: தமிழ்மணியின் பதிவுகளை நான் வாசித்த வகையில் அவருக்கு கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் ஜல்லியடிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது என்றுதான் தோன்றுகிறது, அந்த காரணத்தால் என்னையும் கம்யூனிஸ்ட் என்று லேபில் ஒட்டி, இந்த பதிவுக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் தனது டீபால்ட் மேட்டர்களை அவிழ்த்துவிடுவார் என்று நினைக்கிறேன் பொறுத்திருந்து பார்ப்போம்.
27 comments:
இந்த பதிவினை நேற்று மதியமே போட்டிருந்தேன், எனினும் தமிழ்மணம் இணைப்பு கிடைக்கவில்லை என்பதால் இப்பொழுதுதான் தமிழ்மணத்தில் வகைப்படுத்த முடிந்திருக்கிறது.
அவரு கேட்டதுல என்ன தப்பை கண்டுவிட்டீர்கள் என்று இப்படி குதிக்கிறீர்கள்?
நீங்கள் நாத்திகர் தானே? உங்களுக்கு கோயிலுக்குள் என்ன வேலை?
போய் வெளங்கற வேலையா பாருங்க சார்..
உங்கள் வாதம் ஏற்றுக் கொள்ளும் படி இல்லை நன்பர் சம்பூகன், உங்கள் வாதங்களை என்னால் சுக்கு நூறாக உடைக்க முடியும்.. ஆனால் தமிழ்நாட்டு இன்ஸ்டண்ட் கம்யூனிஸ்டுகள் பாணியில் என்னை நீங்கள் பார்ப்பன கொட்டை தாங்கி என்று முத்திரை குத்திவிடுவீர்கள் அல்லது உங்கள் தலைவர் பெரியாரின் வலையுலக டைப்பிஸ்ட் தமிழச்சி பாணியில் “ங்கோத்தா...” என்று ஆரம்பித்து ஏதாவது ஏடாகூடமாக திட்டிவிடவும் ஆபத்து இருக்கிறது ;)
அப்படி நீங்கள் என்னை பார்ப்பன அடிவருடி என்று முத்திரை குத்த மாட்டேன் என்று வாக்களித்தால் நான் எதிர்த்து வாதாட தயாராக இருக்கிறேன்
என்றும் அன்புடன்,
குமணன்,
திசையன்விளை.
முகத்திரையயை கிழித்தப் பதிவு வகைகளில் இதுவும் Snapjudgeல் சேர்த்தால் நல்லா இருக்கும்.
ஆணித்தரமான கேள்விகள்.
வழக்கம் போல், பதில் வராது. மழுப்பல் தான் வரும்.
கோவில் எவன் அப்பன் வீட்டுச் சொத்து. அரசுடைமை ஆக்குவதில் தவறில்லை.
தமிழை இழிவு செய்யும் எந்த ஒரு விசயத்தையும், கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை இருக்கு.
நீ கேட்ககூடாது, என்று பல காரணம் காட்டி தப்பிக்கும் இவர்கள், யார் கேட்டால் பதில் சொல்லுவார்களாம்.
சாமி கும்பிடுறதும், பொண்டாட்டியயைக் கொஞ்சுறானாம்.
ஏண்டாப்பா, கோவிலைப் பூட்டி வைச்சு கொஞ்சுறது தானே. சில்லறை சேராதே.
அவர் கோவிலில் தமிழ் பாடுவதை எதிர்ப்பதாக கூறவில்லை. உண்மையில் பார்த்தால் தேவாரம்,திருவாசகம் கூட பார்ப்பீணியத்தின் வெளிப்பாடே! அப்பாடல்கள் உருவான சோழர்கள் காலம் தான் பார்ப்பீணியத்தின் வளர்ச்சியின் உச்சகட்ட காலம்
சம்பூகா,
தமிழ்மணி என்ற ஆரிய மணிக்கு நீ அடித்த சாவுமணி.
//நீங்கள் நாத்திகர் தானே? உங்களுக்கு கோயிலுக்குள் என்ன வேலை?
போய் வெளங்கற வேலையா பாருங்க சார்..//
வைக்கம் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாது என்று ஆத்திகர்கள் தடுத்த பொழுது போராடி அந்த உரிமையை போராடி பெற்று தந்தவர் நாத்திகவாதியான தந்தை பெரியார், அன்றைய காலகட்டத்தில் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கூட கோவிலின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது, நாத்திகரான பெரியார் போராடியிருக்காவிட்டால் இன்றுவரை அந்த நிலையே கூட தொடர்ந்திருக்கலாம்., இதனை பதிவில் விரிவாக கூறியிருக்கிறேனே அனானி அதற்கு பதில்கூட கொடுத்திருக்கிறேனே, படிக்கவில்லையா.... தமிழினத்தை சேர்ந்த நான் எனது நாட்டில் தமிழ் இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு உரிமை இல்லையா சார், அது விளங்காத வேலையா சார்?
குமணன் இது என்ன காலக்கொடுவினை, பின்னூட்டம் போடுவதற்கு முன்னாடி நான் வாக்கு கொடுக்க வேண்டுமா? துரோணனுக்கு வாக்கு கொடுத்த கட்டைவிரலை இழந்த ஏகலைவனின் கதைகேட்டுத்தான் வளர்ந்திருக்கிறோம் நாங்கள், எந்த வாதம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்பதனை எடுத்துவைத்து குறிப்பிட்டு பேசுங்கள் விவாதிக்கலாம், அதைவிட்டுவிட்டு தமிழச்சி, இன்ஸ்டன்ட் கம்யூனிஸ்ட் என்று யாரையும் இங்கே வந்து புரளி பேச வேண்டிய அவசியம் இல்லை.
உங்கள் பாராட்டுக்கு நன்றி, பெரியார் அடிக்கடி சொல்வாராம் "புரோகித பார்ப்பானை விட லெளகீக பார்ப்பான் ரொம்ப ஆபத்தானவன்" என்று, ஏனெனில் புரோகித பார்ப்பானை அவனது அங்க குறீயீடுகளை வைத்து எளிதாக அடையாளம் கண்டு அவனது கருத்தையும் அறிந்து கொள்ளமுடியும், ஆனால் லெளகீக பார்ப்பானர்களோ நடுநிலை என்று சொல்லி தங்கள் நஞ்சை பரப்புவார்கள், இங்கு தமிழ்மணி என்ற பெயரில் எழுதியிருப்பவரும் அப்படித்தான் எழுதியிருக்கிறார், வசதியாக ஜனநாயகவாதி என்ற போர்வையில் ஒளிந்து தமிழர்களுக்கு எதிரான மனித விரோத பார்ப்பனீய கருத்துக்களை அவிழ்த்துவிட்டு ஆதரவு தேடுகிறார்.,
//அவர் கோவிலில் தமிழ் பாடுவதை எதிர்ப்பதாக கூறவில்லை. உண்மையில் பார்த்தால் தேவாரம்,திருவாசகம் கூட பார்ப்பீணியத்தின் வெளிப்பாடே! அப்பாடல்கள் உருவான சோழர்கள் காலம் தான் பார்ப்பீணியத்தின் வளர்ச்சியின் உச்சகட்ட காலம்//
வாங்க நண்பர் சதுக்க பூதம் தமிழ்மணி பதிவிலிருக்கும் விசயங்களைத்தான் இங்கு குறிப்பிட்டு பதிலளித்திருக்கிறேன், புதிதாக எதையும் புணைந்து பேசவில்லை.,
நீங்கள் சொல்வது விநோதமாக இருக்கிறது சதுக்கபூதம், தேவாரம், திருவாசகம் எல்லாம் பார்ப்பனீயத்தின் வெளிப்பாடு என்கிற காரணத்தால்தான் சிதம்பரம் கோவிலில் அதனை பாடும் உரிமையை தீட்சிதர்கள் மறுக்கிறார்களா? தமிழர்களுக்கு தமிழில் வழிபட உரிமை கேட்டால், தேவாரமும், திருவாசகாமும் கூட பார்ப்பனீயம்தான் என்று பிரச்சணையை சாதுர்யமாக மடைமாற்றிவிடுகிறீர்களே.
தேவாரமும், திருவாசகம் பார்ப்பனீய வெளிப்பாடாகவே இருந்துவிட்டு போகட்டும், அதனை தில்லையில் பாடினால் என்ன குறைவந்துவிடப்போகிறது என்றுதான் கேட்கிறோம்.
//புரோகித பார்ப்பானை விட லெளகீக பார்ப்பான் ரொம்ப ஆபத்தானவன்" //
உண்மையில் பார்த்தால் மருதையன் கூட "லெளகீக பார்ப்பான்" வரிசையில் தானே வருவார்?
அருமையான பதிவு தோழரே
தமிழ்மணி என்றப் பெயரை பார்ப்பான்மணி என்றும் கூறலாம்
நன்றி
//நீங்கள் சொல்வது விநோதமாக இருக்கிறது சதுக்கபூதம், தேவாரம், திருவாசகம் எல்லாம் பார்ப்பனீயத்தின் வெளிப்பாடு என்கிற காரணத்தால்தான் சிதம்பரம் கோவிலில் அதனை பாடும் உரிமையை தீட்சிதர்கள் மறுக்கிறார்களா? தமிழர்களுக்கு தமிழில் வழிபட உரிமை கேட்டால், தேவாரமும், திருவாசகாமும் கூட பார்ப்பனீயம்தான் என்று பிரச்சணையை சாதுர்யமாக மடைமாற்றிவிடுகிறீர்களே.//
நிச்சயமாக தீட்சிதர்கள் அதற்க்காக மறுக்க வில்லை. அவர்கள் பார்ப்பீணியத்தின் முழு பிரதிபலிப்பு. நான் சொல்ல வருவது என்ன என்றால், தமிழில் கடவுளை வணங்கினால் மட்டும் பார்ப்பீணியம் போய் விடாது. அதற்கு அடிப்படையிலேயே பல மாறுதல்கள்/புரட்சி தேவைபடுகிறது.
நான் கோவிலில் தமிழில் பாட வேண்டும் என்பதை மறுக்கவில்லை.தயவு செய்து
நான் சென்ற ஆண்டு(என்னுடைய இரண்டாவது பதிவு) இந்த பிரச்சனை பற்றி இட்ட பதிவை பார்க்கவும்
http://tamilfuser.blogspot.com/2006/07/blog-post_21.html
//உண்மையில் பார்த்தால் மருதையன் கூட "லெளகீக பார்ப்பான்" வரிசையில் தானே வருவார்?//
சதுக்கபூதம் நான் பதிவில் கீழ்கண்டவாறு எழுதியிருப்பதை படித்தீர்களாக, பிரத்யேகமாக தமிழ்மணிக்காகவும் அவரது நண்பர் குழாமுக்காகவும் எழுதப்பட்ட வரிகள் இவை...
//இப்படியாக தமிழ்மணி என்ற நாமகரணம் தாங்கியபடி கம்யூனிஸ்ட்களூக்கு கேள்விகள் என்ற பெயரில் விஷத்தை கக்கிவிட்டு இறுதியில் பெரியாரியவாதிகளுக்கு தடவிக்கொடுத்து கம்யூனிஸ்ட்களை நோக்கி கொம்பு சீவுகிறார் இந்த தமிழ்மணி(எ)சமஸ்கிருதமணி. பிரித்து வைத்து மோதவிட்டு பலன் அனுபவிப்பது, மேலாதிக்கம் செலுத்துவது பார்பணீயத்தின் பல்லாண்டு கால பழக்கம், இன்று திடீரென்று மாறிவிடுமா என்ன?//
ஒரு போராட்டம் என்று வருகிற பொழுது ஒரு பொது எதிரிக்கு எதிராக அனைவரும் ஒன்று திரளும் பொழுது எதிரியை விட்டுவிட்டு எங்களுக்குள் மோதும்படி நீங்கள் தூண்டுகிறீர்கள் என்றால் நீங்கள் யாருக்காக பேசுகிறீர்கள் என்று தெளிவாகிவிடுகிறது., மருதையன் பிறவிப் பார்ப்பனராக இருக்கலாம், சிதம்பர கோவிலில் அவர் யாருக்கு எதிராக போராடுவதற்கென்று கைகோர்த்திருக்கிறார் தமிழர்களுக்கு எதிராகவா? யாரோடு கைகோர்த்திருக்கிறார் இந்துமதவெறி கும்பலோடா? இல்லை தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளோடு, ஆனால் உங்களுடைய பார்ப்பன எதிர்ப்பு தீட்சிதரிலிருந்து தொடங்குவதற்கு மாறாக மருதையனிலிருந்து தொடங்குகிறது என்றால், நான் என்ன சொல்ல, ஊருக்கே தெரியும் நீங்கள் யாருக்காக பேசுகிறீர்கள் என்று?
நான் மருதையனை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம்
"புரோகித பார்ப்பானை விட லெளகீக பார்ப்பான் ரொம்ப ஆபத்தானவன்" என்பதே.
உண்மையில் இது போன்றவர்கள் தான் அபாயகரமானவர்கள். ஒடுக்கபட்டவர்களுக்காக நடக்கும் போராட்டத்தின் தலைமையை ஏற்று , அதன் வலிமையை சிறிது சிறிதாக மழுக்கடித்து விடுவார்கள்.
இது மருதையனுக்கும் பொருந்தும். ஞானிக்கும் பொருந்தும். N.ராமிற்க்கும் பொருந்தும். வரதராஜனுக்கும் பொருந்தும். இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தமிழ்மணியின் பதிவிலும், நான் இந்த பின்ணூட்டம் தான் இட்டுள்ளேன்.
//நிச்சயமாக தீட்சிதர்கள் அதற்க்காக மறுக்க வில்லை. அவர்கள் பார்ப்பீணியத்தின் முழு பிரதிபலிப்பு. நான் சொல்ல வருவது என்ன என்றால், தமிழில் கடவுளை வணங்கினால் மட்டும் பார்ப்பீணியம் போய் விடாது. அதற்கு அடிப்படையிலேயே பல மாறுதல்கள்/புரட்சி தேவைபடுகிறது. //
என்ன திரு.பூதம் 1960களின் கம்யூனிஸ்ட்கள் போல பேசுகிறீர்கள்.'புரட்சி' என்ற பதத்தை பயன்படுத்துவதால் அப்படி கூறவில்லை. அடிப்படை மாறுதல்கள்/புரட்சி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகிறீர்கள் சரி? அதுவரை இருக்கிற அமைப்பிலிருந்து உரிமைகளை பெறுவதற்காக போராடுவதில் என்ன குறை இருக்கிறது?
உதாரணத்திற்கு சாதி என்பது தவறு என்று நமக்கு தெரிகிறது, அது முற்றிலுமாக ஒழிந்துவிடவேண்டும் என்றும் கூறுகிறோம், அதற்கு ஒரு அடிப்படை மாறுதல்/புரட்சி அவசியம் என்பதும் உண்மைதான், அதற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பொழுதும், இரட்டை குவளை வைத்து அவர்களை அசிங்கப்படுத்தும் பொழுதும், அவர்களது உரிமைக்காக குரல் கொடுக்காமல் சாதி ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
//ஒரு போராட்டம் என்று வருகிற பொழுது ஒரு பொது எதிரிக்கு எதிராக அனைவரும் ஒன்று திரளும் பொழுது எதிரியை விட்டுவிட்டு எங்களுக்குள் மோதும்படி நீங்கள் தூண்டுகிறீர்கள்//
எதிர்த்து நின்று போராடும் எதிரியை விட, கூட இருந்து போராடுவதாக கூறி, உஙகள் போராட்டத்தை மழுங்கடிக்கும் கூட்டாளிகள் ஆபத்தானவர்கள். பெரியார் இதைதான் பலமுறை கூறி உள்ளார்.
நண்பர் பூதம், மேலே உள்ள அந்த சொற்றொடரை கூறிய தந்தை பெரியார்தான், பிறவிப் பார்ப்பனரான மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த "பி.இராமமூர்த்திக்கு" மதுரை சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தார் என்பதை மறந்துவிடாதீர்கள், தனது கொள்கைகளோடு ஒத்துவந்தவர்களை அவர் என்றுமே அரவணைத்துச் சென்றார்.,
தமிழர்களின் இந்த வழிபாட்டுவுரிமை போராட்டத்தின் மீது உங்களுக்கு இவ்வளவு அக்கறை இருந்தால் மகிழ்ச்சிதான் பூதம், மருதையன் போன்றவர்கள் அதற்கு தலைமை தாங்குவது சரியில்லை என்று நீங்கள் கருதினால் நீங்கள் இறங்கி வேலை செய்யலாமே, இன்று தலைமைக்கு வந்திருக்கும் மருதையன் கூட ஆரம்பத்தில் இப்படி சமூகத்தில் இறங்கிதான் வேலை செய்திருப்பார் என்று நினைக்கிறேன், நீங்களும் அது போல் பார்பனீயத்திற்கு எதிராக சமூகத்தில் இறங்கி வேலை செய்தால் பின்னாட்களில் தலைமைக்கு வந்து சமரசமில்லாமல் போராட்டத்தை வழிநடத்தக்கூடும். மற்றபடி குறைசொல்லிக் கொண்டிருப்பதால் மட்டும் பயனில்லை.,
அது சரி, தமிழ்மணிக்காக வாதாடிக் கொண்டுவந்தீர்கள், தேவாரம் திருவாசகம் பார்ப்பனீயம் என்றீர்கள், மருதையன் பார்ப்பனர் என்கிறீர்கள், இவ்வளவு தெரிகிற உங்களுக்கு தமிழ்மணியின் பதிவில் இருக்கும் பார்ப்பனீயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறேனே அது தெரியவில்லையா? அல்லது பதிவில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லையா?
//அதற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பொழுதும், இரட்டை குவளை வைத்து அவர்களை அசிங்கப்படுத்தும் பொழுதும், அவர்களது உரிமைக்காக குரல் கொடுக்காமல் சாதி ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?//
நான் சாதி ஒழிந்தால் சரியாகி விடும் என்று சொல்லவே இல்லை. நான் கூற வந்தது, கோவில் வழிபாட்டு முறையில் புரட்சி வேண்டும் என்றேன்.
மேலும் நான் ஒடுக்க பட்டவர்கள் பற்றி இதில் சொல்ல வில்லை.உங்களுடைய இந்த தலைப்பிற்கு அது சம்பந்தம் இல்லாதது. உண்மையிலேயே சாதி ஒழிய வேண்டுமானால், அது 2000 ஆண்டுகள் ஏற்படுத்திய ஏற்ற தாழ்வு நிரவ படவேண்டும்.
அத்ற்கு உண்மையிலேயே பாதிக்க பட்டவர்கள் தலைமை தாங்கி போராட வேண்டும்.
அதுதான் உண்மையான போராட்டமாக இருக்கும்.. திராவிட இய்க்கம் கூட தலித்துகளின் கொடுமைக்கு முழுமையாக பாடு படாதது கூட அந்த இயக்கத்தில் தலித்துகள் பலம் பொருந்திய தலைவர்களாக வராதது தான் காரணம் .கம்யூனிசம் இந்தியாவில் வெற்றி பெறாததற்கு முக்கிய காரணம், அதன் தலைமை ஆதிக்க வர்க்கத்தினரிடம் சென்றதுதான்.அதே நிலை திராவிட இயக்கத்துக்கும் வந்து விட கூடாதே என்ற ஆதங்கத்தில் தான் கூறுகிறேன்.
பெரியார் தொண்டர்கள் எப்போது கூட்டாளிகள் மீது கவனத்தோடுதான் இருப்போம் பூதம் அதிருக்கட்டும் உங்கள் கூட்டாளி யார் என்பதைதான் இங்கு கூறுபோட்டுக் காட்டியிருக்கிறேன் அதற்கு உங்கள் பதிலென்ன?
அவருடைய பல பதிவுகள் படித்துள்ளேன். என் கண்ணிற்கு கம்யூனிச எதிர்ப்பு தான் புலபடுகிறது(எனது பார்வையில் தவறாக கூட இருக்களாம்.)
//அதிருக்கட்டும் உங்கள் கூட்டாளி யார் என்பதைதான் இங்கு கூறுபோட்டுக் காட்டியிருக்கிறேன் //
???????
//நான் சாதி ஒழிந்தால் சரியாகி விடும் என்று சொல்லவே இல்லை. நான் கூற வந்தது, கோவில் வழிபாட்டு முறையில் புரட்சி வேண்டும் என்றேன்.
மேலும் நான் ஒடுக்க பட்டவர்கள் பற்றி இதில் சொல்ல வில்லை.உங்களுடைய இந்த தலைப்பிற்கு அது சம்பந்தம் இல்லாதது. உண்மையிலேயே சாதி ஒழிய வேண்டுமானால், அது 2000 ஆண்டுகள் ஏற்படுத்திய ஏற்ற தாழ்வு நிரவ படவேண்டும்.//
நான் சாதியை இங்கு குறிப்பிட்டிருப்பது ஒடுக்குமுறையை ஒப்பிட்டுக் காட்டுவதற்காகத்தான், சாதி ஒழியும் வரை எப்படி ஒடுக்குமுறைக்கு எதிராய் குரல்கொடுக்காமல் இருக்க முடியாதோ அது போல கடவுள் விசயத்திலும் அடிப்படை மாற்றம் வரும் வரை தமிழ்நாட்டிலேயே ஒடுக்குமுறைக்குள்ளாகும் தமிழ் மொழி வழிபாட்டுரிமைக்காகவும் குரல்கொடுக்காமல் இருக்கமுடியாது., நீங்கள் என்ன இங்கு பதிவுக்கு சம்பந்தமானவற்றை மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறீர்களா, மருதையன் பார்ப்பனரா? இல்லையா என்றா இந்த பதிவு பேசுகிறது., தமிழர்களுக்கு தான் விரும்பும் கடவுளை தனது தாய்மொழியில் வழிபட உரிமை இருக்கிறதா இல்லையா? என்பதும் அதனை நுட்பமாக மறுக்கும் தமிழ்மணி(எ)சமஸ்கிருதமணியின் வாதங்களை பற்றித்தான் இந்த பதிவு பேசுகிறது, அதனை பற்றி பேசாமல் மீண்டும் மீண்டும் மருதையன் குறித்து பேசியது யார்? மற்றபடி சாதி ஒழியவேண்டுமானால் நீங்கள் குறிப்பிடும் சமூக நீதி அடிப்படையிலான தீர்வை நானும் ஏற்றுக் கொள்கிறேன், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சி பற்றி நீஙகள் குறிப்பிட்டிருக்கும் மற்றவிசயங்கள் பதிவுக்கு சம்பந்தமில்லாதவை ஆதலால் அவற்றை புறந்தள்ளுகிறேன்.
//அவருடைய பல பதிவுகள் படித்துள்ளேன். என் கண்ணிற்கு கம்யூனிச எதிர்ப்பு தான் புலபடுகிறது(எனது பார்வையில் தவறாக கூட இருக்களாம்.)//
இந்தியாவிற்கு பார்ப்பனீயம் என்ற பேராபத்து இருப்பதால் உங்கள் பார்வை கூர்மையடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.....
சம்பூகன் அய்யா,
ஆமாங்கய்யா.நீங்க சொல்வது தான் சரி.தமிழ்மணி அய்யா இந்த ம க இ க கும்பலும்,பெ தி க கும்பலும் இணைந்து போராடுவது, ஒரு ஆச்சரியம் என்று சொன்னது சரியல்ல தான்.ம க இ க கும்பல், லட்சக் கணக்கில் அப்பாவி மக்களை கொன்ற கம்யூனிச தலைவர்களை கொண்டாடும் ஒரு இயக்கம்;பெ தி க, வன்முறையை பரப்பிய ஒரு வெறி பிடித்த தாடிக்காரனை தலைவராக போற்றும் இயக்கம்.இந்த வன்முறைப் பிரியர்கள் ஒன்று சேர்ந்ததில் என்ன அதிசயத்தைக் கண்டு விட்டார் தமிழ்மணி அய்யா?லட்சக்கணக்கில் உலகெங்கும் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் பின் லேடன் கும்பல் கூட இந்த மூஞ்சிகளோடு சேர்ந்தால் ஆச்சரியம் இல்லை.ஆனால் தமிழ்மணி அய்யா ஒரு விஷயத்தை சரியாக சொன்னார் என்று தோன்றுகிறது.ம க இ க,பெ தி க, போன்ற ரெளடி கும்பல் தங்களை மனித உரிமை காக்கும் கும்பல்,தமிழ் மொழி காவலர்கள், என்று சொல்லிக்கொள்வது ஒரு நகை முரண் தான்.செம காமெடி இது.
பாலா
மசூதிகளில் தமிழுக்கு என்ன இடம்?. அங்கு ஏன் அரபி மொழியில் மட்டும் தொழுகிறார்கள். இதை எதிர்த்து பெரியாரோ அல்லது அவரது சீடர்களோ ஏதாவது செய்ததுண்டா?.
ஆகா! என்ன ஒரு தெளிவு.
ஐயா அனானி, தொழுகையில் அரபி மொழியில் தொழுவது அரபி தெய்வ பாஷை என்பதால் அல்ல, மாறாக ஒரு சமத்துவத்திற்க்காகத்தான், மேலும் நாங்கள் இறைவேதமாக மதிக்கும் அல் குர் ஆன் அரபி மொழியில் உள்ளதுதான் காரணமேயல்லாது அரபிதான் தேவ பாஷை என்பதால் அல்ல.
மேலும் முதன் முதலில் இறைவணக்த்திற்க்கான அழைப்பை கூறியது நீங்கள் கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு கருப்பின அடிமைதான் என்பது கலப்பில்லாத உண்மை, எந்த கொம்பனாலும் நடத்த முடியாத ஒரு சமுதாயப் புரட்ச்சியைச் செய்தது நாங்கள் உயிருனும் மேலாக மதிக்கும் எங்கள் வழிகாட்டி முகமது நபியவர்கள்.
யாரலும் இன்றுவரை போராடியும் கிடைக்காத ஒரு உரிமயை மிக சர்வ சாதரணமாக நடத்தியதால்தான் அவரை இறைவனின் தூதர் என்று நாங்கள் நம்புகிறோம்.
முடிதிருத்தும் தொழில் செய்பவனாக இருந்தாலும், சாக்கடை அல்லும் தொழில் செய்பவனாக இருந்தாலும் அல்லது உங்கள் வேதப்பிராகாரம் தாழ் நிலையில் இருக்கும் (அது போன்ற எண்ணங்கொள்வதிலிருந்து இறைவன் நம்மைக் காப்பானாக) ஒரு சக மனிதன் "இறவன் ஒருவன்தான் என்றும் அவனின் தூதர் முகமது" என்றும் நம்புவாரேயானால் அவர் சமுதாயத்தில் எத்தனை பெரிய மனிதாராக இருந்தாலும் அவருடைய தோளோடு தோள் சேர்ந்து நின்று தொழலாம்.
அரபி மொழியை முன்னிலைபடுத்தும் அனானியே முடியுமா இது?
கூடுதல் தகவல்:- அனானி ஐயா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜூம்மா தொழுகையில் பிரசங்கம் பள்ளிவாசளுக்கு உள்ளில் தமிழ்தான் நடக்கிறது, மேலும் தொழுகை முடிந்தவுடன் கூட்டுப்பிரார்த்தனையும் தமிழில்தான் நடக்கும்.
Post a Comment